Monday, January 15, 2007

தோல்பதனிடுதலும் கும்பமேளாவும்

கும்பமேளாவில் சங்கராந்திக்கு 80 லட்சம் பேர் வந்து கங்கையில் குளிப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏற்பாடுகளை செய்த அமைப்புகள் வெறும் 15 லட்சம் பேரே வந்து குளித்ததை பார்த்தார்கள்.

கும்பமேளாவிற்கு வந்த இந்துக்கள் கங்கை சாக்கடை போல ஓடிக்கொண்டிருப்பதை கண்டு வெகுண்டு இது கங்கையா, இதில் எவனாவது குளிக்க முடியுமா என்று குளிக்கப்போகவில்லை.

காரணம் அந்த இடத்துக்கு வரும்முன்பு, அந்த நகரத்தின் தோல்பதனிடும் தொழிற்சாலை வெளியிடும் அனைத்து கழிவுகளையும் ஏந்திக்கொண்டுதான் கங்கை அங்கே வரவேண்டும்.

இந்த கும்பமேளாவுக்காக தற்காலிகமாவது அந்த தோல்பதனிடும் தொழிற்சாலைகளை கழிவுப்பொருட்களை வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்ததை முலயாம் அரசு கண்டுகொள்ளவில்லை.

கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டி, சுத்தம் செய்யப்பட்ட தண்ணீர்தான் கங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

எகோ-பிரண்ட்ஸ் என்ற அமைப்பை சேர்ந்த ராகேஷ் ஜைஸ்வால் 83 தோல்பதனிடும் தொழிற்சாலைகளில் குரோமியம் நீக்கும் அமைப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், ஜைமாவு தோல்பதனிடும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு தலைவரான முகம்மது ஷாகித் உசேன், தோல்பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுபொருட்களை கங்கையில்கொட்டவில்லை என்று கூறுகிறார்.

ஜனவரி 2006இல் உபி அரசாங்கம் சுமார் 15 தோல்பதனிடும் தொழிற்சாலைகள் மட்டுமே கழிவுபொருட்களை சுத்தம் செய்யாமல் கங்கையில் கொட்டுகின்றன என்று அந்த தொழிற்சாலைகளை நிறுத்தும் அறிக்கையை அந்த தொழிற்சாலைகளின் கதவில் ஒட்டியது. இருந்தும் அதனை கண்டுகொள்ளாமல், தொழிற்சாலைகள் இன்றும் வேலை செய்துகொண்டுதான் இருக்கின்றன.

In Kanpur, political meddling harms toxic waste management

இதனால், கங்கைக்கு வந்த இந்துக்களும் சாதுக்களும் கடுங்கோபம் கொண்டு, கும்பமேளாவை பகிஸ்கரிக்கபோவதாக போராட்டம் செய்தனர்.

முலயாம் அரசு கண்டுகொள்ளவில்லை.



ஆனால் கான்பூரின் மிகப்பெரிய தோல்பதனிடும் தொழிற்சாலையின் உரிமையாளரான இர்ஷத் மிர்ஸா சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மட்டும் தோல்பதனிடும் தொழிற்சாலைகளை மூடி வைத்து கழிவுப்பொருட்களை கங்கையில் கொட்டாமல் இருப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

No comments: