அஸ்ஸாமில் இயங்கும் உல்பா என்ற கம்யூனிஸ பயங்கரவாதிகள் அஸ்ஸாமில் வேலைக்கு வந்த பிகாரி தொழிலாளர்கள் 68 பேரை படுகொலை செய்திருக்கிறார்கள். உல்பா என்றால் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி என்று பொருள்.
உல்பா தன்னை "புரட்சிகர அரசியல் இயக்கம்" என்று வர்ணித்துக்கொல்(ள்)கிறது. எல்லா பயங்கரவாத கம்யூனிஸ இயக்கங்களையும் போல இந்த உல்பாவும் தன்னை, இனம், மதம், மொழி, தேசியம் ஆகிய குறுகிய வரையறைகளை கடந்ததாக கூறிக்கொள்கிறது. அப்படிப்பட்ட இந்த புரட்சிகர கம்யூனிஸ இயக்கம், வேலைக்காக அஸ்ஸாமுக்கு வந்த 60க்கும் மேற்பட்ட பிகாரி தொழிலாளர்களை படுகொலை செய்திருக்கிறது.
உல்பா சீன கம்யூனிஸ கொள்கைகளை பின்பற்றுகிறது. அங்கிருக்கும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உடையதாக இருக்கிறது. உல்பா பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டதாக பல அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன.
இவர்கள் ஆள்கடத்தல், கொலை ஆகியவற்றில் பலவற்றை செய்திருக்கிறார்கள். இதில் சுரேந்திர பால் என்ற வியாபாரியையும் சஞ்சய் கோஷ் என்ற சமூக சேவகரையும் கொன்றதும் அடங்கும்.
பொது இடங்களில் குண்டு வெடிப்பது, அப்பாவி தொழிலாளர்களை கொல்வது ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறார்கள்
நன்றி
http://en.wikipedia.org/wiki/ULFA
http://news.google.com/news?hl=en&ned=in&q=ulfa
அரசாங்கமே காரணம்... உல்பா!
Speaking to a national daily Pradip Gogoi, vice-chairman of the ULFA said that the Government should have continued the peace process, but instead it has stalled the process and has forced his group to carry out sporadic violence.
10 comments:
//பொது இடங்களில் குண்டு வெடிப்பது, அப்பாவி தொழிலாளர்களை கொல்வது ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறார்கள்//
அதாவது பொது இடங்களில் குண்டு வெடிப்பது அப்பாவி தொழிலாளர்களை கொல்வது போன்ற சமூக நல்லிணக்க புரட்சிகளை செய்து வருகிறார்கள் என்று சொல்கிறீர்கள்!
மேலும் 2 பேரை சுட்டுக் கொன்றனர் தீவிரவாதிகள் அசாமில் தொடர்ந்து பதற்றம்
வெளிமாநில மக்கள் ஓட்டம் துணை ராணுவப் படை விரைந்தது
கவுகாத்தி, ஜன.9: அசாமில் உல்பா தீவிரவாதிகள் நேற்றும் வெறிச்செயலில் ஈடுபட்டனர். வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த விவசாயத் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் இறந்தனர். இதையடுத்து, தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
அசாமில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும் தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவும் கூடுதலாக துணை ராணுவப் படையின் 20 பட்டாலியனை அனுப்ப ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைமையில் நேற்று டெல்லியில் நடந்த ராணுவ தளபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அசாமில் வெளிமாநில மக்கள் மீது குறிவைத்து உல்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அசாமில் வசிக்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உயிருக்கு பயந்து தங்களது சொந்த மாநிலத்துக்குச் செல்லத் துவங்கியுள்ளனர்.
தீவிரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு 55 பேர் பலியாயினர். நேற்று முன்தினம் இரவு நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாயினர். திப்ருகர் மாவட்டத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்டவர்களில் இருவர் நேற்று காலை இறந்தனர்.
இதுவரை திப்ருகர், தின்சுகியா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி வந்த தீவிரவாதிகள், நேற்று முதல் முறையாக கோலாகட் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தினர். கோலாகட் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஒன்றுக்கு ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் நேற்று காலை புகுந்தனர்.
வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் 2 பேர் இறந்தனர். ஒருவர் படுகாய மடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.
திப்ருகர், தின்சுகியா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றும் பதற்றம் நிலவியதால் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
குண்டு வெடிப்பு: அசாமின் கவுகாத்தி அருகே சடகானின் கண்டோன்மென்ட்டில் நேற்று மாலை இரண்டு குண்டுகள் வெடித்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இரண்டு சைக்கிள்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. முதல் குண்டு மாலை 6.45 மணிக்கும் அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டும் வெடித்தன. இதனால் கவுகாத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு பாதுகாப்பு படைகள் விரைந்துள்ளன.
கறுப்பு தினம்: தீவிரவாதிகள் நடத்திய படுகொலையைக் கண்டித்து அசாமில் நேற்று கறுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் கறுப்பு துணி அணிந்து பணிக்குச் சென்றனர். துப்ரியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய முதல்வர் கோகய், Ôதீவிரவாதிகள் வன்முறையால் அசாமின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. வன்முறையால் பிரச்னைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது. தீவிரவாதிகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை மக்கள் வலுவாக வெளிபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ராணுவ பாதுகாப்பு: இதற்கிடையில், அசாமில் உல்பா தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உல்பா தீவிரவாதிகள் வெறிச்செயலில் ஈடுபட்ட தின்சுகியா, திப்ருகர், நல்பாரி உட்பட அசாமின் மேற்கு பகுதியில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான துணை ராணுவ படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, டெல்லியில் நேற்று காலை ராணுவ அமைச்சர் அந்தோணி தலைமையில் முப்படைகளில் தலைமை தளபதிகளின் கூட்டம் நடந்தது. இதில் அசாம் நிலைமை பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
அசாமில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், உல்பா தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் மேலும் 20 பட்டாலியன் துணை ராணுவ படையினரை ஈடுபடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அசாமுக்கு ராணுவ அமைச்சர் அந்தோணி இன்று செல்கிறார். தேஜ்பூரில் ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.
உயர் அதிகாரிகள் கூட்டம்: அசாமில் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஆய்வு செய்ய அசாம் மாநில உயர் அதிகாரிகள் கூட்டத்தை டெல்லியில் 12ம் தேதி மத்திய அரசு கூட்டியுள்ளது. இதில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கலந்து கொண்டு நிலைமையை கேட்டறிகிறார்.
நன்றி தினகரன்
What is evenmore sad is that this deadly and corrosive ideology is spread in the name of "liberty equality and fraternity" while acting all the time against these ideals.
And even more sad is that there are lot of good natured and nice people in the iron grip of this stupid idealogy eating away their brains.
சரியான வார்த்தை ... அசுரர்கள்
போயும் போயும் விக்கிபீடியாவை நம்புகிறீர்களா? விக்கியில் எழில் ஒரு பயங்கரவாதி என்று நான் கூட போய் எழுதி வைக்க முடியும்! அதை வேறு ஒரு பதிவில் ஆதாரமாகவும் காட்ட முடியும்!
செக்குலர் சோஷலிஸ அஸ்ஸாமை உருவாக்கப்போகிறார்களாம். உலகளாவிய கம்யூனிஸ அமைப்புக்களை ஒன்றுதிரட்டப்போகிறார்களாம்...
விக்கிப்பீடியா அப்படி இருக்கலாம். ஆனால் விக்கிப்பீடியாவில் வருவதெல்லாம் பொய்கள் அல்ல
http://www.ipcs.org/agdb01-ulfa.pdf
http://www.satp.org/satporgtp/countries/india/states/assam/terrorist_outfits/Ulfa.htm
http://www.globalsecurity.org/military/world/para/ulfa.htm
தமிழ் வலைப்பதிவுகளில் நீங்கள் ஒருவர் மட்டுமே அஸ்ஸாமில் நடந்த தொழிலாளர் படுகொலைகளை எழுதியிருக்கிறீர்கள்..
அசிங்கமான ஒரு கள்ள மௌனம் ....
புரட்சிகர விடுதலை இயக்கமான உல்பாவை இந்திய அரசு பயங்கரவாதம் அடக்குமுறை செய்வதை எதிர்த்து ஏதேனும் பதிவுகள் பு.க பு.ஜவில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.
//
போயும் போயும் விக்கிபீடியாவை நம்புகிறீர்களா? விக்கியில் எழில் ஒரு பயங்கரவாதி என்று நான் கூட போய் எழுதி வைக்க முடியும்! அதை வேறு ஒரு பதிவில் ஆதாரமாகவும் காட்ட முடியும்!
//
கம்யூனிச கொடி தாங்கி, சோஷியலிச செம்மல்கள் இதைக் கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா ?
//
அசிங்கமான ஒரு கள்ள மௌனம் ....
//
Communist hallmark இந்த கள்ள மௌனம் தானே!
//
ு.க பு.ஜவில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.
//
பு.க பு. ஜ போன்ற வாந்திகளைக் குடிப்பவர்கள் அந்த சிவப்பு வாந்தியின் வண்ணத்தில் மட்டுமே யோசிக்கத் தெரிந்த மூளை சுறுங்கிய வெத்துவேட்டுகள்.
அவர்களுக்கு கொள்கைக்கு எதிரான கருத்துக்கள் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை. அதை வளர்க்கவும் தெரியாத Zombies.
//அதை வளர்க்கவும் தெரியாத Zombies//
வஜ்ரா அய்யா,
எங்க கட்சி தலைவரும்,அவருடைய அரசியல் வாரிசும் கொஞ்சம் கீழ்த்தரமாகத் தான் நடந்துப்பாங்க.மூளை வளர்ச்சி கம்மி தான்.அதுக்காக zombie பட்டம் கொடுக்கணுமா?
பாலா
Post a Comment