Friday, January 12, 2007

முதல் கல்

எஹ்ர்மன் என்று ஒரு பைபிள் ஆராய்ச்சியாளர் இருக்கிறார்.

அவர் எழுதி வெளிவந்திருக்கும் புத்தகத்தின் திறனாய்வு இங்கே

மிஸ்கோட்டிங் ஜீஸஸ்

இதிலே ஒரு ஆச்சரியமான விஷயத்தை சொல்கிறார்.

நமக்கெல்லாம் எந்த வழியிலாவது ஒரு கதையை கேள்விப்பட்டிருப்போம்.

குற்றம் செய்யாதவன் முதல் கல் எறியட்டும் என்று இயேசு சொன்னதாக.

அந்த கதையே பின்னால் இட்டுக்கட்டப்பட்டதாக இவர் கூறுகிறார். அதாவது பைபிளை படிவம் எடுத்தவர்கள் அதனை செருகியதாக கூறுகிறார்.


"A.) Everyone knows the story about Jesus and the woman about to be stoned by the mob. This account is only found in John 7:53-8:12. The mob asked Jesus whether they should stone the woman (the punishment required by the Old Testament) or show her mercy. Jesus doesn’t fall for this trap. Jesus allegedly states “Let the one who is without sin among you be the first to cast a stone at her.” The crowd dissipates out of shame. Ehrman states that this brilliant story was not originally in the Gospel of John or in any of the Gospels. “It was added by later scribes.” The story is not found in “our oldest and best manuscripts of the Gospel of John. Nor does its writing style comport with the rest of John. Most serious textual critics state that this story should not be considered part of the Bible (page 65)."

தூண்டல் பதிவு

7 comments:

எழில் said...

"கெட்ட நடத்தைக்காக" பெண்களை கல்லெறிந்து கொல்வதை சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்பதற்காக இந்த செருகல் நடந்திருக்கலாம்.

வரவேற்க வேண்டியதுதான். அதனை இன்று எஹ்ர்மன் சொல்வதும் பிரச்னையில்லாததுதான். ஏனெனில், இயேசு அதனை சொல்லவில்லை என்று இன்று கிறிஸ்துவ நாடுகள் "தவறான நடத்தைக்காக" பெண்களை கல்லெறிந்து கொல்வோம் என்று ஆரம்பிக்கப்போவதில்லை. அவர்கள் மதம் சொல்லும் சட்டங்களை விட்டுவிட்டு ஜனநாயகத்தில் உருவாகும் சட்டங்களை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

Anonymous said...

எல்லா மதங்களும் புருடா என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டீர்கள்.

Anonymous said...

±Æ¢ø «ö¡,


þ¾¢Ä¢Õó§¾ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä¡ þ§ÂÍ ¯À§¾º¢ò¾¾üÌõ þý¨ÈìÌ ¿¢ÄÅ¢ÅÕõ ¸¢Ã¢ŠÐÅ Á¾ò¾¢üÌõ ºõÀó¾§Á þø¨Ä ±ýÀ¨¾. ¯ñ¨Á¨Â ¯í¸Ç¢ý š¢ĢÕóÐõ ¦ÅÇ¢ôÀÎòи¢È¡ý ±í¸Ç¢ý þ¨ÈÅý.

எழில் said...

சில கேவலமான அன்னானி பின்னூட்டங்கள் "யாரிந்த எஹ்ரமான்" என்று வந்தன.
அவர்களுக்காக இந்த இணைப்பு.

பார்ட் எஹ்ர்மான் பற்றிய விக்கிபீடியா பக்கம்

He currently serves as the chairperson of the Department of Religious Studies at the University of North Carolina at Chapel Hill.

இது கிறித்துவ பல்கலைக்கழகம்.
அவரது இணையப்பக்கம்

http://bartdehrman.com/

அவரது புத்தகங்கள் நியூயார்க் டைம்ஸ் இதழின் அதிகம் விற்பனையாகும் புத்தகவரிசையில் வருபவை

சிறில் அலெக்ஸ் said...

எழில்,

பைபிளில் எது உண்மை எது பிற்சேர்க்கை என கிறீத்துவர்களே ஆராய்ச்சி செய்கிறார்கள் எனும் நல்ல தகவலை தந்துள்ளீர்கள்.

எல்லா மதங்களும் தங்கள் வரலாற்றை புரட்டிப் பார்த்து திருத்திக் கொண்டால் பல சமூக அவலங்களையும் எளிதில் களைந்துவிடலாமே.

மன்னிப்பு பற்றிய இந்த சம்பவம் பிற்சேர்க்கை என்றாலும் இதைவிட அருமையான பிற கதைகள் இருக்கின்றன.

அடுத்த மதத்தைபற்றி அதிகம் அறிந்துகொள்ளவேண்டும் எனும் உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன். அது எதிர்மறையான கோணத்தில் இருந்தாலும். இதே கோணத்தில் எல்லா மதங்களையும் ஆராய்ந்தால் முழுமையான ஞானம் பேறலாம்.

வாழ்த்துக்கள்

எழில் said...

நன்றி சிறில் அலெக்ஸ்

எதிர்மறையான கோணத்தில் இந்த பதிவு எழுதப்படவில்லை. செருகல் நடந்திருந்தாலும் அதனை பாராட்டித்தான் இதனை எழுதியிருக்கிறேன்.

Anonymous said...

என்னுடைய பதிவு உங்களையும் ஒரு பதிவு எழுதத் தூண்டியதில் மகிழ்ச்சி.

இந்தக் கதை பிற்சேற்கை என்பதை நிரூபிக்க எஹ்ர்மன் ஐ உதவிக்கு அழைக்கத் தேவையில்லை. விவிலியத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது "இந்த நிகழ்வு பல முக்கியக் கையெழுத்துப் படிவங்களில் காணப்படவில்லை " என்று :)