Wednesday, September 27, 2006

Thursday, September 21, 2006

பூமி தட்டையானது இல்லையா?

காற்றுக்கு கனம் உண்டா என்ற தலைப்பில் தோமா4இந்தியா என்பவர் வலைப்பதிந்திருக்கிறார்.

காற்றுக்கு கனம் உண்டு என்று பைபிளில் எழுதியிருக்கிறதாம்.

நான் எழுதுவது அது பற்றியதல்ல. அதன் கீழே நண்பர் குமரன் எண்ணம், ஒரு பின்னூட்டம் எழுதியிருக்கிறார்.

--
it is also said world is flat...what do u say about that and galileo was punished for presenting his model of solar system. so please stop saying that bible is scientific....
# posted by குமரன் எண்ணம் : May 25, 2006 8:56 PM
நண்பரே,பைபிளில் உலகம் தட்டை என எங்கேயுமே சொல்லப்படவில்லை.
கலிலியோ தண்டிக்கப்பட்ட விவகாரம் வேறு .அதாவது அன்றைய கத்தோலிக்க குருமார்கள் அண்டவெளியின் நடு மையம் பூமியே என நம்பினார்கள்.பைபிளில் இதற்கான ஆதாரம் இல்லவே இல்லை.அது மனிதனால் கணிக்கப்பட்டது.கலிலியோ அதை மறுத்தார்.அதன் விளைவே பின் நிகழ்வு.(The Catholic church insisted the Earth was the center of the universe, and Galileo was punished for showing them otherwise. But of course, there is nothing in the bible about Earth being the center. This is just man-made doctrine.)உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.
# posted by thoma4india : May 27, 2006 8:36 AM

--

பைபிளில் உலகம் தட்டை என்று எங்கேயுமே சொல்லவில்லை என்று தோமா4இந்தியா எழுதியிருந்ததை படித்து, ஆஹா அந்த காலத்தில் இப்படி ஒரு அறிவா என்று அயந்துபோய், வழக்கம் போல கூகுளிடம் கேட்காமல், ஒரு சேஞ்சுக்கு யாஹூவிடம் கேட்டேன்.

தேடல்

வந்து விழுந்த முதல் இணைப்பு இது

The Flat earth Bible

இதிலிருந்து சில குறிப்பான மேற்கோள்கள்.

--
I was surprised to learn that flat-earthism in the English-speaking world is and always has been entirely based upon the Bible.

--

At the 1984 National Bible-Science Conference in Cleveland, geocentrist James N. Hanson told me there are hundreds of scriptures that suggest the earth is immovable. I suspect some must be a bit vague, but here are a few obvious texts:


1 Chronicles 16:30: He has fixed the earth firm, immovable.

Psalm 93:1: Thou hast fixed the earth immovable and firm ...

Psalm 96:10: He has fixed the earth firm, immovable ...

Psalm 104:5: Thou didst fix the earth on its foundation so that it never can be shaken.

Isaiah 45:18: ...who made the earth and fashioned it, and himself fixed it fast...

--

Samuel Birley Rowbotham, founder of the modern flat-earth movement, cited 76 scriptures in the last chapter of his monumental second edition of Earth not a Globe. Apostle Anton Darms, assistant to the Reverend Wilbur Glenn Voliva, America's best known flat-earther, compiled 50 questions about the creation and the shape of the earth, bolstering his answers with up to 20 scriptures each.

--
In Daniel, the king saw a tree of great height at the centre of the earth...reaching with its top to the sky and visible to the earth's farthest bounds. If the earth were flat, a sufficiently tall tree would be visible to the earth's farthest bounds, but this is impossible on a spherical earth. Likewise, in describing the temptation of Jesus by Satan, Matthew 4:8 says, Once again, the devil took him to a very high mountain, and showed him all the kingdoms of the world [cosmos] in their glory. Obviously, this would be possible only if the earth were flat. The same is true of Revelation 1:7: Behold, he is coming with the clouds! Every eye shall see him...
--

அதற்கு அடுத்து குத்துமதிப்பாக இன்னொரு இணையப்பக்கத்தை தொட்டேன்

http://sol.sci.uop.edu/~jfalward/Flat_Earth.htm

Shake the Earth by Its Edges

"take the earth by the edges and shake the wicked out of it (Job 38:12-13)


How could the earth be held by its "edges"? A sphere has no edges. Would the Job author have spoken of "edges" of the earth if he had known the earth was a sphere? Which makes more sense? The author imagined grabbing and shaking by the edges a flat earth, or the author imagined grabbing the ball of the earth by "edges" which don't exist? Before you answer, consider what else the same author had to say about how the earth is formed:
Stamp Out the Earth Like Clay under A Seal
Clay when stamped with a seal is not rounded into a ball, but flattened, like the clay seal (ca. 3300-3000 BCE) below found in Israel in 1994.1 In the verse below, readers will see that the Job author believes that the earth was stamped out in the manner of clay flattened with a seal:


"The earth takes shape like clay under a seal." (Job 38:14)
This is the same author who spoke of grabbing the earth by its "edges." If the Job author had known the earth was round, would he have referred to edges which don't exist, and would he have compared it to clay seals, which are pressed flat?


மேலே அந்த இணையப்பக்கத்தை படிக்க பொறுமையில்லை. விட்டுவிட்டேன்.

Tuesday, September 19, 2006

200 திருமணங்கள்

முன்பு என் பார்வையில் "அடைமொழியுடன் பயங்கரவாதம்" என்ற ஒரு பதிவை எழுதியிருந்தேன்.

அதன் பின்னூட்டத்தில் நண்பர் சல்மான்

"
சென்னையில் செய்யப்பட்ட ஆயுதங்கள் - யாருக்காக என்பது இன்னும் முடிவாகத் தெரியவில்லை. இந்நிலையில் இது தீவிரவாதத்தில் சேருமா சேராதா?
இதை ஒரு முஸ்லீம் தயாரித்திருந்தால் பத்திரிக்கைகள் அதை எப்படி கட்டம் கட்டி இருக்கும்!
இப்போது தீவிரவாதம் அல்லது தீவிரவாதி என்று அதைச் செய்தவர்களை அவர்கள் சார்ந்த மதத்தைச் சார்ந்து ஏதாவது சொல்லப்பட்டதா? மனம் திறந்து சொல்லுங்கள்.
இதை ஒரு முஸ்லீம் தயாரித்திருந்தாலும் பத்திரிக்கைகள் இந்த மாதிரிதான் எழுதியிருக்கும் என்று உளமாற நீங்கள் நம்புகிறீர்களா?
நாங்கள் அந்த வேதனையை அனுபவிப்பதால் நம்பவில்லை.
கொஞ்ச நாளைக்கு முன் ஒருவருடைய லேப்டாப்பில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவருடைய மதத்தை சேர்த்து எழுதப்பட்டதா? தீவிரவாதம் என்று கூட எழுதப்படவில்லையென்பதே உண்மை.
"

என்று எழுதியிருந்தார்.
அதற்கு பதிலாக, நான்
"இது பயங்கரவாதத்தின் துணை கருவிகள்தான். எந்த கொள்கையாளருக்காக இவை உருவாக்கப்பட்டன என்று தெரியும்போது எந்த பயங்கரவாதம் என்று தெரியும். "


ஒரு இந்து செய்கிறார் என்பதால் அது இந்து பயங்கரவாதம் ஆவதில்லை. அவர் எந்த கொள்கைக்காகச் செய்கிறார் என்பது முக்கியமாகிறது.

இந்த நிகழ்ச்சியில், இந்த ஆயுதங்கள் நக்சலைட்டுகளுக்காக தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகியிருக்கிறது. (நக்ஸலைட்டுகளாக இந்துக்கள் கிரிஸ்துவர்கள், முஸ்லீம்கள் எல்லோரும் இருக்கிறார்கள்!)
ஆகவே இது நக்ஸலைட்டு பயங்கரவாதம் என்றுதானே அழைக்கப்பட வேண்டும். இதனை ஒரு முஸ்லீம் தயாரித்து கிரிஸ்துவர் வழியாக இந்து நக்ஸலைட்டுகளிடம் கொடுக்கப்பட்டிருந்தாலும், இது முஸ்லீம் பயங்கரவாதம் என்று அழைக்கப்பட்டிருக்காது. இது நக்ஸலைட்டு பயங்கரவாதம் என்றே அழைக்கப்பட்டிருக்கும்.

--

http://timesofindia.indiatimes.com/articleshow/1960258.cms

200 weddings redone in UP after a fatwa

மேற்கண்ட செய்தியை பார்த்தும் படிக்கவில்லை. மீண்டும் கண்ணில் பட்டபோது, அட இப்போது நாம் இஸ்லாமை பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறோம். படித்துக்கொள்வோம் என்று படித்தேன். சுத்தமாகப்புரியவில்லை. மறுபடியும் படித்தேன். ம்ஹூம். சுத்தம்.

80 வயதான அபித் அலி அவர்களின் திருமணத்தை ஒரு முப்டி ரத்து செய்துவிட்டார். ஆக திரும்பவும் கல்யாணம் செய்துகொண்டார்களாம்.

காரணம் பேரேல்வி சுன்னி (அப்படி என்றால் என்ன?) மதத்தைச் சார்ந்த 200 பேர்கள் டியோபாண்ட் சுன்னி (அப்படி என்றால் என்ன?) மதத்தைச் சார்ந்த முப்டி நடத்திய நமாஸில் (அப்படி என்றால் என்ன?) கலந்து கொண்டார்களாம். ஆதலா, பேரேல்வி சுன்னி மதத்தைச் சார்ந்த முப்டி இத்தனை பேரையும் காபிர் (அப்படிஎன்றால்?)என்று கூறிவிட்டாராம்.

ஆகவே மீண்டும் இத்தனை பேரும் கல்யாணம் செய்தார்களாம்.

தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. முப்டி நம் ஊர் ஐய்யர் மாதிரி என்று வைத்துக்கொண்டால், அவருக்கு ஏற்கெனவே பண்ணியிருக்கும் கல்யாணத்தை ரத்து பண்ண எப்படி அதிகாரம் என்று தெரியவில்லை. நம் ஊர் ஐய்யர்கள் ஏதும் இப்படி கூற மாட்டார்கள். (நம்ம தமிழ் சினிமா மாதிரி, கல்யாணத்துக்கு நல்ல நேரம் பார்ப்பதற்கும், திருமணத்தை நடத்தி வைப்பதற்கும் தான் ஐய்யரே நமக்கு தேவைப்படுகிறார்) அதுக்கப்புறம் இப்படி ஏதும் கூறினால் அவராக கூரையைப் பார்த்து உளறிக்கொண்டிருக்க வேண்டியதுதான். இதெற்கெல்லாம் யாரும் அவரை எல்லாம் மதிக்க மாட்டார்கள்.

எப்படி முப்டி சொன்னதால் எல்லோரும் பயந்து மீண்டும் கல்யாணம் செய்தார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

நண்பர் சல்மான் தான் எனக்கு விளக்க வேண்டும்.

--

Monday, September 18, 2006

எனக்கென்றோர் நிலம்

இன்னும் ஒரு மணலை வாங்க
அலைகிறேன் நிதம்

Saturday, September 16, 2006

நண்பனே

என் வீட்டுக்கு ஒரு நாள் வா
நான் கூப்பிடாமலேயே
மாடிப்படிகளில் ஓசை எழுப்பாமல் வா
நான் களைத்திருக்கிறேன்
ஏனென்று கேட்காதே
நீ மட்டுமே என்னை புரிந்துகொள்கிறாய்
இரவு முழுவதும் பேசுவோம்
நாம் பேசுவதை கேட்க யாருமில்லை
நம்முடைய நீல வானம் நம்முடையது
பறப்போம்

எல்லா மக்களிடமிருந்தும் அன்னியனாய் நான்
நீ மட்டுமே இருக்கிறாய்
களைத்திருக்கிறேன். ஏனென்று கேட்காதே
உனக்குத் தெரியும்

- சஹித் குலேபி

சுவனப்பிரியன் பதிவு

அழகாக இஸ்லாமை விளக்கி எழுதும் சுவனப்பிரியன் மலைகளின் உயரத்தை அடையவே முடியாது! என்ற பதிவில் சில ஆச்சரியமான விஷயங்களை எழுதியிருக்கிறார்.

குரான் என்னும் இஸ்லாமிய வேதப்புத்தகத்தில் "'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.' 17 : 37 - குர்ஆன் " என்று ஜனாப் முகம்மது நபிகள் கூறியிருக்கிறாராம்.

"ஆனால் உன் காலுக்கு கீழே இருக்கும் பூமியை பிளந்து மலைகளின் உயரத்தை அடைய முடியுமா என்றால் முடியாது. " என்று ஆணித்தரமாக கூறுகிறதைப் பார்த்தால், நமக்கும் அடடா இது ஆச்சரியமாக இருக்கிறதே என்று தோன்றுமல்லவா?

அதனால் Google இடம் தேடிப்பார்த்தேன்.

உலகத்திலேயே மிகவும் உயரமான மலையின் உயரம் 8,848 மீட்டர். சுவனப்பிரியன் சுமார் 9 கிலோமீட்டர் என்று கூறுகிறார். அது உண்மைதான்.

Depth of the Deepest Drilling

மிகவும் ஆழமாக போடப்பட்ட துளையின் ஆழம் 12,262 மீட்டர்கள். அதாவது சுமார் 12 கிலோமீட்டர்கள்.

இந்த துளையை 1994ஆம் ஆண்டிலேயே போட்டிருக்கிறார்கள்.

ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்தக்காலத்தில் இருந்தவர்களிடம் "மனிதா கர்வம் கொள்ளாதே. உதாரணமாக உன்னால் இதைச் செய்யமுடியுமா?" என்று கூறி நல்ல போதனை செய்திருக்கிறார்கள்.

அதனை மனிதர்களுக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டாமே?

நன்றி

அன்றிரவின் வானம்




அற்றைப்பனி அன்னேரம் நீ அழகு

நகரத்தினுள் நாம்

நான் அண்ணாரும் போதெல்லாம்
யாரோ ஜன்னல்வழியே
என்னைக் குனிந்து பார்த்திருந்தனர்

நீ என்னை ஆசையுடன் பார்த்ததாய்

நான் நினைத்திருந்தேன்.

நீ என்னை ஒருகணம்
காதலித்திருக்கலாம்

கடுகி திரும்பி வளைந்து
சென்றாய்

இப்பூமியிலிருந்து நீ
ஓடியா போக முடியும்?

ஏன் என்னை காணாமல்
போகும் படி விரும்பினாய்?

ஏன்?

சிலவற்றை விளக்க முடியாது



உதாரணமாய்
அந்த வானத்தின் வண்ணம்

Wednesday, September 13, 2006

அடைமொழியுடன் பயங்கரவாதம்

நண்பர் இறைநேசன் மிகுந்த வருத்தத்துடன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
எந்த முஸ்லீம் தவறான செயல் செய்தாலும் உடனே இஸ்லாமிய பயங்கரவாதம் என்று பத்திரிக்கைகள் எழுதுகின்றன என்று வருத்தப்படுகிறார்.

இதனால் இஸ்லாம் பற்றிய தவறான அபிப்பிராயத்தை மக்கள் மனதில் இந்த பத்திரிக்கைக் காரர்கள் ஏற்ற முனைகிறார்கள் என்று கூறுகிறார்.

உதாரணத்துக்கு ஒரு குற்றத்தை செய்த ஒரு இந்துவைப் பற்றிய செய்தியை வெளியிட்டு "மாணவியை ஆபாச படமெடுத்த இந்து ஆபாச தீவிரவாதி கைது! :" என்று தலைப்பிட்டு "ஒரு செய்தியை எப்படி ஒருசமூகத்துக்கு எதிராக திருப்ப முடியும் என்பதற்கு இப்பதிவு ஓர் உதாரணமாக இருக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.

தினமலரில் வந்த இந்த செய்தியில் "திருமணத்தில் மணமகனின் தாய்மாமனை வெட்டிய தந்தை கைது: மூவருக்கு வலை" என்று கூறுகிறது.

கடலூர் : திருமணத்தில் மணமகளின் தாய்மாமனை வெட்டிய தந்தையை போலீசார் கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஷேக்முகமது(26). இவரது சகோதரி பாத்திமாவின் கணவர் பழைய நெய்வேலியைச் சேர்ந்த அக்பர் அலி(45). இவர் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டு முதல் மனைவி மற்றும் மகள்களை கவனிக்காமல் விட்டுவிட்டார்.

இந்நிலையில் பாத்திமாவின் மகள் ஜாஸ்மினின் திருமணம் நேற்று முன்தினம் மந்தாரக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது தந்தை முறை என்பதால் ஜமாத்தில் உள்ளவர்கள் பெண்ணின் தந்தை அக்பர் அலியிடம் கையெழுத்து வாங்கினர். அதற்கு ஷேக்முகமது எதிர்ப்பு தெரிவித்தார். அதில் ஆத்திரமடைந்த அக்பர் அலி மற்றும் இரண்டாவது மனைவியின் மகன்கள் கமால், நூர்முகமது, இப்ராஹீம் ஷேட் ஆகியோர் சேர்ந்து ஆடு வெட்டும் கத்தியால் ஷேக்முகமதுவை வெட்டினர். அதனைத் தொடர்ந்து ஷேக்முகமதுவின் ஆதரவாளர்கள் அமிர்ஜான், ஷேக்முகமது, அகமது ஆகியோர் தாக்கியதில் அக்பர் அலி காயமடைந்தார்.

இது குறித்து ஷேக்முகமது கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து அக்பர் அலியை கைது செய்தனர். மேலும், கமால், நூர்முகமது, இப்ராஹீம் ஷேட் ஆகியோரை தேடி வருகின்றனர். அதேபோன்ற ராஜாமுகமது கொõடுத்த புகாரின் பேரில் அமிர்ஜான், ஷேக்முகமது, அகமது ஆகியோரை தேடி வருகின்றனர்.


எந்த இடத்திலாவது "முஸ்லீம் பயங்கரவாதம்" என்ற வார்த்தையோ அல்லது "இஸ்லாமிய பயங்கரவாதம்" என்ற வார்த்தையோ இருக்கிறதா?

செய்தியின் தலைப்பை மட்டுமே பார்த்தால், இது ஒரு சாதாரண குடும்பத்தகராறு செய்தியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. செய்தியின் உள்ளே பார்த்தால் அது ஒரு முஸ்லீம் குடும்பத்தினுள் நடந்த பிரச்னையாகத் தெரிகிறது.

இறைநேசன் சொல்வது போல எல்லா பத்திரிக்கைகளும் எந்த முஸ்லீம் செய்யும் குற்றத்தையும் இஸ்லாமிய பயங்கரவாதச் செயலாகவா எழுதுகின்றன? நிச்சயமாக இல்லை.

இது போல பல செய்திகளை காட்டலாம்.

ஒரு முஸ்லீமோ கிரிஸ்துவரோ அல்லது இந்துவோ செய்யும் எல்லாக் குற்றங்களும் அந்த சமூகத்தின் பயங்கரவாதச் செயலாக பத்திரிக்கைகள் எழுதுவதுமில்லை அல்லது பார்க்கப்படுவதுமில்லை.

ஆனால், ஏன் ஒரு சில குற்றங்கள் முஸ்லீம் பயங்கரவாதமாகவோ கிரிஸ்துவ பயங்கரவாதமாகவோ இந்து பயங்கரவாதமாகவோ பார்க்கப்படுகின்றன?

எந்த குற்றங்கள் அவர்கள் சார்ந்திருக்கும் கொள்கையின் அடிப்படையில் செய்யப்படுகின்றனவோ அவை மட்டுமே சமூகம் அல்லது மதம் சார்ந்த குற்றங்களாக பார்க்கப்படுகின்றன.

அடிப்படைவாத கிரிஸ்துவத்தில் கருத்தடை செய்வது தவறானது. அபார்ஷன் செய்வது தவறானது.

ஒரு கிரிஸ்துவ நபர் அந்த கிரிஸ்துவ கொள்கையின் அடிப்படையில் ஒரு அபார்ஷன் கிளினிக்கில் குண்டு வைத்தால் அது கிரிஸ்துவ பயங்கரவாதம்.

ஆனால் அதே கிரிஸ்துவ நபர், அந்த அபார்ஷன் கிளினிக்கின் மருத்துவர் மீது இருக்கும் தனிப்பட்ட விரோதத்தால் அதே கிளினிக்குக்குக் குண்டுவைத்தால் அது கிரிஸ்துவ பயங்கரவாதம் அல்ல.

இதுதான் வித்தியாசம்.

ஒரு முஸ்லீம் ஒரு பெண்ணின் முகத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஆஸிட் ஊற்றினால் அது இஸ்லாமிய பயங்கரவாதம் அல்ல.

அதே முஸ்லீம், அந்தப் பெண் பர்தா போட்டுக்கொண்டு செல்லவில்லை என்பதற்காக ஆஸிட் ஊற்றினால் அது இஸ்லாமிய பயங்கரவாதம்.

இதே பார்வையைக் கொண்டு குற்றங்களை பாருங்கள்.

ஒரு இந்து மதத்தைச் சார்ந்த ஒரு நக்ஸலைட் ஒரு போலீஸ் நிலையத்தின் மீது குண்டு எறிந்தால் அது என்ன பயங்கரவாதம்?

அவர் இந்து என்பதால் இந்து பயங்கரவாதமா?

அவர் நக்ஸலைட் என்பதால் அது நக்ஸலைட் பயங்கரவாதமா?

அவரை அந்த போலீஸ் நிலையத்தின் மீது குண்டெறிய அவரை தூண்டியது இந்து மதம் அல்ல. நக்ஸலைட் தத்துவம். ஆகவே அது நக்ஸலைட் பயங்கரவாதம்.