Saturday, May 10, 2008

ஜெயமுருகனை கட்டிவைத்து அடித்த தமுமுக குண்டர்கள் பற்றிய ஜூவி செய்தி

விபசாரத்தில் ஈடுபட்டதாக முஸ்லிம் சமுதாயத்துப் பெண்கள் சிலரை, கோவையிலும் நெல்லையிலும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்பினர் சிலரே கொடூர மான முறையில் கடந்த ஆண்டு கொலை செய்தார்கள். அதேபோன்ற Ôநீதி வழங்கல்' கலாசாரம் இப்போது கீழக்கரை ஏரியாவிலும் மெதுவாகத் தலையெடுக்க... பீதியும் பதற்றமும் பரவிக்கொண்டிருக்கிறது அந்தப் பகுதியில்.
விவாகரத்தாகி, கீழக்கரையில் தனியாக வசிப்பவர் தஸ்லிமா. கடந்த மார்ச் 18-ம் தேதி இரவு வீட்டில் இவரும் நைனா முகம்மது என்பவரும் தனியாகப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், நைனா முகம்மதுவை அடித்து இழுத்துப்போய் பள்ளிவாசல் அருகே மின் கம்பத்தில் கட்டிவைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழ்நாடு


முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மீது போலீஸில் புகார் கொடுத்தார் தஸ்லிமா. பிறகு, என்ன நடந்ததோ... அந்தப் புகாரை வாபஸ் வாங்கிவிட்டார்.
கடந்த 4-ம் தேதி மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம்... கீழக்கரையில் மாருதி வேன் ஓட் டும் ஜெயமுருகனை பள்ளிவாசல் ஏரியாவுக்கு தந்திரமாக வரவழைத்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், அவரைப் பலர் முன்னிலையில் அடித்து வேப்பமரத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள்.
ஜெயமுருகனை ராமநாதபுரம் மருத்துவமனையில் சந்தித்தோம். ''என் செல்போனுக்குப் பேசின ஒருத் தர் 'சவாரி போகணும்... சாயந்தரம் நாலு மணிக்கு தெற்குத்தெரு பள்ளிவாசலுக்கு வந்துருங்க'னு சொன்னார். நான் போனப்போ பள்ளிவாசலுக்கு முன்னாடி ரெண்டு பசங்க உக்காந்திருந்தாங்க. அவங்ககிட்ட 'நீங்கதான் சவாரிக்கு வரச்சொன் னீங்களா?'னு கேட்டேன். 'ஆமா'னு சொல்லிக் கிட்டே என்னோட செல்போனை வாங்கிக் கீழே போட்டு உடைச்சாங்க. அத்தோட 'எங்க சமுதாய பொம்பளைங்ககிட்ட பேசுவியா'னு கேட்டுக்கிட்டே அடிக்க ஆரம்பிச்சாங்க. அப்ப இன்னொருத்தனும் அங்கு வந்தான். மூணு பேருமா சேர்ந்து என்னை மரத்துல கட்டி வெச் சாங்க. அதுக்குள்ள கூட்டம் கூடிருச்சு. எல் லார் முன்னாடியும் மட்டை, கம்பு, கல், உருட் டுக்கட்டைகளை வெச்சு விடாம அடிச்சாங்க. கொஞ்ச நேரத்துல போலீஸ் வரவும், எல்லாரும் ஓடிட்டாங்க.
பெண்களிடம் சவாரி விஷயத்தைத் தவிர வேறெதுக் காகவும் நான் பேசினதில்லை. என்மேல அபாண்டமாப் பழி போட்டுத் தாக்குதல் நடத்தியிருக்காங்க'' என்று கண் கலங்கினார்.
இச்சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய இந்து முன்னணியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தவசிமுனி, ''இந்த பகுதியைப் பொறுத்தவரை சிறுபான்மையான இந்துக் களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவங்க இதுமாதிரி பண்றாங்க. போலீஸ§ம் மெத்தனமாவே இருக்கு. இவங்களோட தாக்குதல் குறித்து போலீஸ்ல புகார் செய்யறவங்களையும் மிரட்டி புகாரை வாபஸ் வாங்க வெச்சுடு றாங்க. தஸ்லிமா விவகாரமும் அப்படித்தான். இந்தச் சம்பவங்களின் பின்னணியில் த.மு.மு.க., மனித நீதிப் பாசறை போன்ற அமைப்பினர்தான் இருக்காங்க. அரபு நாடுகளில் குற்றவாளிகளைப் பொது இடத்தில் கட்டிவெச்சுக் கசை யடி கொடுப்பதுபோல் இங்கும் முஸ்லிம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் செயல்படுகிறார்கள். அரசி யல்வாதிகளும் இதைத் தடுக்க முன்வருவதில்லை'' என்றார்.

No comments: