Sunday, May 18, 2008

வேறுவழியின்றி சென்னையிலும் தமிழக போலீஸ் முஸ்லீம் பயங்கரவாதிகளை தேடுகிறது

சென்னை: சென்னையில் தப்பிய பயங்கரவாதிகள் இருவரை சுட்டுப் பிடிக்க, தனிப்படை போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னை மண்ணடியில் தங்கியிருந்த, "இறைவன் ஒருவனே' என்ற இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பழநி தாலுகா, அக்ரஹாரம் களையம்புத்தூரைச் சேர்ந்த "பழநி' உமர்(26), நெல்லை டவுனைச் சேர்ந்த சையத் காசிம் (எ) ஹீரா(26), மண்ணடியைச் சேர்ந்த துணி வியாபாரி காதர்(24) ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர்.
"சென்னையில் தங்கி, இந்து தலைவர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டமிட்டோம்' என்ற திடுக்கிடும் தகவல்களை, விசாரணையில் அவர்கள் வெளியிட்டனர். பிடிபட்ட பயங்கரவாதிகளுக்கு தலைவனாக செயல்பட்ட தஞ்சாவூர் அதிராமபட்டினத்தைச் சேர்ந்த தவுபீக்(30) மற்றும் மண்ணடியைச் சேர்ந்த அபுதாகீர்(24) ஆகியோர் தப்பினர்.
இமாம் அலியின் உடல், மதுரையில் அடக்கம் : அவர்களை கைது செய்ய உதவி கமிஷனர்கள் நாராயணமூர்த்தி, நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். பெங்களூருவில் "என்கவுன்டரில்' பலியான இமாம் அலியின் உடல், மதுரையில் அடக்கம் செய்யப்பட்டது. இமாம் அலி உடல் அடக்கத்தில் பங்கேற்ற 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சில ஆண்டுகளில் வெளியில் வந்த அவர்கள், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடாமல் ஒதுங்கினர்
கைதாகி விடுதலை : தப்பிய பயங்கரவாதிகள் இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பயங்கரவாத இயக்கத்தில் தீவிரமாக இருந்து ஒதுங்கிய 12 பேரில், யாராவது ஒருவரது உதவியை தப்பியவர்கள் நாடியிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசாரில் ஒரு பிரிவினர் விசாரிக்கின்றனர்.கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான சிலர், கேராளாவில் தங்கியுள்ளனர். தப்பியவர்கள் கேரளா சென்று அக்கும்பலிடம் சேர்ந்து விட்டனரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
இரண்டு கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.தமிழகத்தில் ரவுடிகள் "என்கவுன்டரில்' வீழ்த்தப்பட்டு வருகின்றனர். பயங்கரவாத சக்திகளை வேரறுக்கும் பணியில் காவல் துறையினர் உறுதி பூண்டுள்ளனர். "தப்பிய பயங்கரவாதிகள் விரைவில் கைது செய்யப்படுவர்' என தனிப்படையினர் உறுதிப்படுத்தினர்.பயங்கரவாதிகளின் கையில் வெடிகுண்டு, துப்பாக்கிகள் இருப்பதாக தகவல் வெளியாகியது. போலீசார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், அவர்களை சுட்டுப் பிடிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

4 comments:

Anonymous said...

கவலைப்படாதீர்கள். ஒன்றும் ஆகாது.

நன்றாக சிக்கன் மட்டன் பிரியாணி சாப்பிட்டு, அமார்க்ஸ், மனுஷ்யபுத்திரன், இன்னும் பல முற்போக்கு எழுத்தாளர்கள் ஊர்வலம் போய் விடுதலை செய்து தியாகச்செம்மல் ஆகிவிடுவார்.

குமுதம் ரிப்போர்ட்டர் ஜூவி எல்லாம் பார்க்கலையா?

ஏற்கெனவே இவரை மகாத்மா மதானி அளவுக்கு உயர்த்தும் வேலை ஆரம்பித்துவிட்டதே.

எழில் said...

அனானி

உண்மைதான்

உங்கள் ஆதங்கத்தில் உண்மை இருக்கிறது.

எதிர்காலத்தில் தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைந்து இது போன்ற தீவிரவாத செயல்களுக்கு முடிவு கட்டும் நாள் வரும் என்று நம்புவோம்

கால்கரி சிவா said...

பாஜக கர்நாடகம் வரை வந்துவிட்டது. தமிழ்நாட்டில் கால்பதிக்கும் காலம் வெகுதூரமில்லை

எழில் said...

நன்றி சிவா

அதற்காக கடுமையாக உழைக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.