Tuesday, May 20, 2008

பாகிஸ்தான் ராணுவ மையம் மீது அமைதி மார்க்கத்தினர் தாக்கியதில் 13 பேர் பலி

பாக். மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 13 பேர் பலி
திங்கள்கிழமை, மே 19, 2008



இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ பயிற்சி மையம் அருகே நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் உள்ள மார்டான் நகரில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. நேற்று இரவு இந்த மையத்தின் நுழைவாயிலில் உள்ள கடைக்கு வந்த மனித வெடிகுண்டு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

இதில் குண்டு வெடித்து அந்தப் பகுதியில் இருந்த 4 வீரர்கள் உள்பட 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது. அப்பகுதி சீல் வைக்கப்பட்டது. தலிபான் இயக்கம்தான் இந்த தாக்குதலுக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

சில காலமாக ஓய்ந்திருந்த தற்கொலைப் படைத் தாக்குதல்கள் மீண்டும் பாகிஸ்தானில் அதிகரித்திருப்பது அந்நாட்டு அரசுக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது.

நேற்றைய சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் உள்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2 comments:

Anonymous said...

ஆசனவாயில் தங்க கட்டி கடத்திய இருவர் கைது
ஞாயிற்றுக்கிழமை, மே 18, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற



சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை ஆசன வாயில் வைத்துக் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த 2 பேரை அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் தொண்டியைச் சேர்ந்த இஸ்மாயில் ஆரி (30), திருவாடானையைச் சேர்ந்த நிஜாமுதீன் (28) என்பது தெரியவந்தது. இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்ததது.

இதையடுத்து, அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இருவரும் ஆசனவாயில் தலா 3 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள 720 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரும் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.

எழில் said...

இந்த செய்தி எங்கிருந்து பெறப்பட்டது என்று சொல்லவியலுமா?