Sunday, July 01, 2007

சிவகங்கா வெடிகுண்டு கொலைக்கு 2 திமுக கவுன்ஸிலர்கள் கைது

சிவகங்கை குண்டு வெடிப்பில் சதி * தி.மு.க.,வினர் 2 பேர் மீது வழக்கு

சிவகங்கை : சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் குண்டு வைத்து கொலை செய்யப்பட்ட பயங்கரத்தில், தி.மு.க., மாவட்ட துணை செயலர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"ரிமோட்' மூலம் இயக்கப்பட்டு, மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நடந்திருப்பதால், பின்னணியில் யார்? என்பதும், நடந்த சதி என்ன? என்பது குறித்தும் தீவிர விசாரணைக்கு
சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் நேற்று முன்தினம் கார் குண்டு வைத்து கொல்லப்பட்டார். கார் டிரைவர் உட்பட ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். நகரே இச்சம்பவத்தில் அதிர்ந்து உறைந்தது. இம்மாதிரி குண்டு வெடிப்பு முதல் தடவை என்றும், பழைய பகை காரணம் என்றாலும், இந்த நடைமுறை தீவிரவாதச் செயல் போல இருந்தது என்று அச்சப்பட்டடனர். சக்தி வாய்ந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதும், அது "ரிமோட்' மூலம் இயக்கப்பட்டிருப்பதும் முதல் கட்ட ஆய்வில் முடிவாகியிருக்கிறது.

கடந்த 2006ல் நடந்த நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக மாவட்ட துணை செயலர் மணிமுத்து அறிவிக்கப்பட்டார். தி.மு.க.,வில் "சீட்' கிடைக்காமல் அதிருப்தி வேட்பாளராக முருகன் போட்டியிட்டார். முருகனை 15 கவுன்சிலர்களும், மணிமுத்துவை 11 பேரும் ஆதரித்தனர். தி.மு.க.,விற்கு பெரும்பான்மை இல்லாததால், தலைவர் தேர்தல் இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முருகன் ஆதரவு கவுன்சிலரான முத்துப்பாண்டியை தி.மு.க.,வினர் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக மணிமுத்து உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கவுன்சிலர் முத்துப்பாண்டி தி.மு.க.,வில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தலைவர் தேர்தலில் முருகனுக்கு ஆதரவாக முத்துப்பாண்டி ஓட்டளித்தார். தலைவராக முருகன் தேர்வு செய்யப்பட்டார். இதனால் முருகனுக்கும், மணிமுத்துவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு நீடித்தது.

இது ஒருபுறமிருக்க, மணிமுத்துவின் ஆதரவாளரான கவுன்சிலர் மந்தக்காளை (எ) குமரனுக்கும், முருகனின் நெருங்கிய நண்பர் நாகராஜூக்கும் "கேபிள்' தொழில் போட்டியால் கடந்த சில மாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இதில், மந்தக்காளை அரிவாளால் தாக்கப்பட்டார். நாகராஜின் அலுவலகத்தில் தீ வைக்கப்பட்டது. முருகன், மணிமுத்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறது. முருகன் கொலை முன்பகை காரணமாக நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனடிப்படையில் மணிமுத்து, மந்தக்காளை ஆகியோர் மீது சந்தேகம் திரும்பியுள்ளது. முருகன் கொலை தொடர்பாக இந்த இருவர் மீதும், 302 (கொலை), வெடிபொருள் வழக்கு (1908) பிரிவு மூன்று (வெடிபொருள் வைத்திருத்தல்), ஐந்து (வெடிக்கச் செய்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக கவுன்சிலர் மந்தக்காளை நண்பர்கள் சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரது நெருங்கிய நண்பர்கள் நான்கு பேர், நண்பரின் தந்தை, தி.மு.க., பிரமுகர் ஆகியோரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அத்துடன், குண்டு வெடிப்பில் இறந்த முருகனின் உறவினர்கள், இப்பகுதி மந்திரியுடன் இருந்த முன்விரோத பின்னணி பற்றியும் விசாரணையில் இடம் பெற வேண்டும் என்று, உடலை அடக்கம் செய்யும் முன் கோபப்பட்டு கருத்து வெளியிட்டிருக்கின்றனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று நம்பிக்கை அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது, குண்டு வெடிப்பு நடந்ததற்கு காரணியாக இருந்தது யார், எப்படி இந்த பயங்கரம் நடந்தது என்பது குறித்து முழு விசாரணைக்கு பின் தெரியும் என்றும், முதல் கட்ட வழக்கு பதிவு நடவடிக்கைகளுக்குப் பின் நகரில் பேசப்படுகிறது.

நன்றி தினமலர்

No comments: