தமிழகத்தில் கடும் வெய்யலில் பலர் மாண்டிருக்கிறார்கள். இதற்காக எந்த விதமான அறிவிப்புகளையோ, அல்லது வெயிலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை காப்பாற்றும் அமைப்பையோ தமிழக அரசு செய்யவில்லை என்பதையும், அரசாங்கமும், தமிழக மக்களும் உலக மகா பிரச்னையான தயாநிதி மாறன் வேலை பறிப்பை தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ...
வெளுக்கும் வெயில்-உருகும் சாலைகள்
வறுபடும் மக்கள் - இதுவரை 6 பேர் பலி
மே 16, 2007
சென்னை: சென்னை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக வெயில் மிகக் கடுமையாக உள்ளது. வெயிலுக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
வழக்கமாக கோடை காலத்தில் தமிழகத்தில் வேலூர், சேலம், அரக்கோணம் போன்ற நகரங்களில்தான் மிகக் கடுமையான வெயில் இருக்கும். ஆனால் இந்த முறை கொடும் வெயில் தலைநகருக்கு இடம் மாறியுள்ளது.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாகவே வெயில் மிகக் கடுமையாக உள்ளது. தினசரி சரசாரி வெயில் அளவு 110 டிகிரியைத் தொட்டு வருகிறது. நேற்று 111 டிகிரி வெயில் அடித்தது. இன்றும் தனது விளையாட்டை விடவில்லை வெயில்.
இன்று காலை 6 மணிக்கே வெயில் வெளுத்து வாங்கத் தொடங்கி விட்டது. கடும் வெயில் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல இடங்ளில் தார்ச் சாலைகள் இளகி ரப்பர் மெத்தை போல மாறி விட்டன.
சாலையில் நடக்க முடியாமலும், இரு சக்கர வாகனங்களில் போக முடியாமலும் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையே கடும் வெயிலுக்கு இதுவரை 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சென்னை தாம்பரத்தில் 80 வயது முதியவரும், அம்பத்தூர் பட்டரைவாக்கம் பகுதியில் 60வயது முதியவரும் இறந்தனர்.
செங்கல்பட்டு பஸ் நிலையப் பகுதியில், 50 வயது முதியவர் வெயிலுக்கு சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல அரக்கோணத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த 84 வயது முதியவர் அச்சுதானந்தன் என்பவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
இரட்டைக்கண் வாரவதா என்ற இடத்தில் 70 வயது முதியவர் பரிதாபமாக இறந்தார்.
சென்னையைத் தவிர வேலூர், திருச்சி, அரக்கோணம் ஆகிய ஊர்களிலும் வெயில் வெளுத்துக் கட்டி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் மிகக் கடுமையாக இருப்பதால் மக்கள் படும் அவதி சொல்லி மாள முடியாது.
இரவிலும் வெப்பம் அப்படியே வீட்டுக்குள் இருப்பதால் தூங்கவும் முடியாமல் மக்கள் பெரும் எரிச்சலுக்குள்ளாகின்றனர்.
No comments:
Post a Comment