Wednesday, May 16, 2007
மதுரை சிறை கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த கன்னியாஸ்திரி
மதுரை சிறை கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த கன்னியாஸ்திரி
மே 15, 2007
மதுரை: சிறைக் கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் ரீசார்ஜர் கூப்பன் முதலியவற்றை சப்ளை செய்த மதுரை கன்னியாஸ்திரி கைது செய்யப்பட்டார்.
மதுரை பெருங்குடியை சேர்ந்தவர் அனஸ்ட்ரீயா (63). இவர் இதே பகுதியில் உள்ள கிறிஸ்துவ கான்வென்ட கன்னியாஸ்திரியாக உள்ளார். இவர் கடந்த ஓராண்டாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு நல்வழிப்படுத்துதல் பாடம் கற்பித்து வந்தார்.
இந் நிலையில் நேற்று அவர் சிறைக்கு சென்று கைதிகளுக்கு நல்வழிப்படுத்துதல் பாடம் சொல்லிக் கொடுக்க வந்தார். அப்போது அவரை சிறைக் காவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது 180 கிராம் கஞ்சா, செல்போன் ரீசார்ஜ் கூப்பன் ஆகியற்றை அவர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் தணிக்கை செய்யப்படாத கைதிகள் கண்ணன், சத்யா ஆகியோரின் கடிதங்களும் இருந்தன. இவற்றை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கன்னியாஸ்திரி கூறுகையில், சிறைக்கு வரும் போது வெளியே ஒரு மூதாட்டி நோயால் பாதிக்கப்பட்ட உறவினருக்கு வழங்குமாறு கூறினார். ஆனால் அது கஞ்சா என்று எனக்கு தெரியாது. மனிதாபிமான அடிப்படையில் அதை வாங்கினேன் என்றார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரை மே 28ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து கன்னியாஸ்திரியை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி அவரது வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவரை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
நன்றி தட்ஸ்டமில்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
எழில், இதே குற்றத்தை ஒரு இந்து போலி சாமியார் செய்திருந்தால் பத்திரிகைகளும் பதிவர்களும் தைய்யத் தக்கா என குதித்திருப்பார்கள்.
மதம் மாற்றுவதற்கு கஞ்சா கொடுக்கிறார்களா?
ஏன் கிறிஸ்துவர்கள் போதைமருந்து அடித்தாற்போல கத்துகிறார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது.
:-((
இயேசுவே கஞ்சா கேஸ்தான் என்று பலர் இப்போது பேசுகிறார்கள்.
ஆகவே கன்யாஸ்திரி கஞ்சா கொடுப்பது சரியல்ல என்று எப்படி சொல்லமுடியும்?
சிறுபான்மையினர் உரிமை என்று சொல்லலாம்.
கருத்துக்களுக்கு நன்றி
Post a Comment