Thursday, May 10, 2007

சென்னையில் குவியும் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள்

போருக்கு முன்னர் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்கெடுக்க இவ்வாறு எதிரிநாடுகள் கள்ளநோட்டுகள் அடித்து புழக்கத்தில் விடும்.

இப்போது பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுக்க இருக்கிறதா?

அல்லது

இந்தியாவின் உள்ளே இருக்கும் உளவாளிக்கும் பாகிஸ்தானிய ஆதரவாளர்களுக்கும் பணம் கொடுக்க இப்படி இந்திய பணத்தை கள்ளநோட்டாக அடித்து கொடுக்கும். அதன் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு உபயோகப்படுத்தப்படும் இந்த பணம்.

இப்போது இது எதற்காக?

நன்றி தட்ஸ்டமில்

சென்னையில் குவியும் பாகிஸ்தானில்
அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள்!!

மே 09, 2007


சென்னை: பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்கள் சென்னையில் ஏராளமாக புழகத்தில் விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து மத்திய, மாநில உளவுப் பிரிவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ள நோட்டுக்கள் துபாய், இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுவதாக தெரியவந்துள்ளது.

சென்னை, மும்பை, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் பாகிஸ்தான் கள்ள நோட்டுக்களை பெற்று வினியோகிக்கும் மையங்கள் இருக்கின்றன. சமீபத்தில் இந்த 3 நகரங்களிலும் ரூ. 1 கோடி அளவுக்கு பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்கள் பிடிப்பட்டன.

பாகிஸ்தான் கள்ள நோட்டுக்களை கடத்தி வரும் செயலில் அப்துல்லா ஹாஜி, அப்துல்லா, அஜீஸ் ஆகிய 3 பேர் தலைமையிலான கும்பல் செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் 3 பேரும் கள்ள நோட்டுக்களை பாகிஸ்தானில் இருந்து துபாய் அல்லது இலங்கைக்கு எடுத்துச் சென்று பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக சென்னைக்கு கொண்டு வந்து புழகத்தில் விட்டு வருவதாக உளவுத் துறை உறுதி செய்துள்ளது.

அப்துல்லா தனது பெயரை முத்து என்று மாற்றி கொண்டு இலங்கையில் பதுங்கி இருப்பதாகத் தெரிகிறது.

அஜீஸ் மற்றும் அப்துல்லா ஹாஜி ஆகியோர் எங்கிருந்து செயல்படுகின்றனர் என்று தெரியவில்லை. இந்த மூன்று பேரையும் உளவுத்துறை போலீஸார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

1 comment:

கால்கரி சிவா said...

ஆ..புண்ணியபூமியிலிருந்த வந்தது எப்படி கள்ளநோட்டுகளாக இருக்க முடியும் மாவுகள்(இந்திய காபீர்கள்) அடிப்பவை அனைத்தும் அல்லாவால் விலக்கப்பட்டவை ஆகையால் இந்திய அரசாங்கம் அடிப்பது மட்டும்தாம் கள்ள நோட்டுகள்.

எழில், சவூதிக்கு போன்லே பேசிக்கிட்டு இருக்கும் போது நான் கேட்ட கிராஸ்டாக்தான் மேலுள்ளது.