Friday, October 17, 2008

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதற்கு அரசு விதித்துள்ள நிபந்தனை நியாய மற்றது என்று இராம.கோபாலன் வலியுறுத்தல்

இராம.கோபாலன் வலியுறுத்தல்

.

Thursday, 16 October, 2008 03:07 PM

.
சென்னை, அக்.16: தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதற்கு அரசு விதித்துள்ள நிபந்தனை நியாய மற்றது என்று இந்து முன்னணியின் மாநில நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.
.
இத குறித்து அவர் விடுத்துள்ள பத்திரிகை செய்தி வருமாறு:

பாதுகாப்பான விதத்தில்தீபாவளி எப்படிக் கொண்டாடுவது என்பதற்காக அரசு சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது. இதனை இந்து முன்னணி முழுமனதுடன் ஆதரிக்கிறது.
அதே நேரத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தான் பட்டாசுகள் வெடிக்கலாம் என்ற நிபந்தனை நியாயமற்றது என்று இந்து முன்னணி வலியுறுத்த விரும்புகிறது.

காலை 4 மணிக்கு எழுந்து எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் குளித்துவிட்டு, இறைவனை வழிபட்டு; புத்தாடை உடுத்தி; இனிப்புகள் சாப்பிட்டு பட்டாசுகள் வெடிப்பது காலம் காலமாக பின்பற்றப் பட்டு வரும் மரபு ஆகும். இதனை மாற்றக்கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

ஒரு குறிப்பிட்ட டெசிபல்களுக்கு அதிகமாக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று சொல்வது நியாயம்தான். ஆனால் தயாரிக்கும் இடத்திலேயே சரி செய்ய வேண்டும். பட்டாசு வாங்குகிற மக்களுக்கு இந்த டெசிபல் கணக்கு எல்லாம் தெரியாது.

நமது நாடு கிரிக்கெட்டில் ஜெயித்தாலோ, கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றாலோ, தலைவர்களின் பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகள், மாநாடு, ஊர்வலம் போன்றவற்றில் எல்லாம் மகிழ்ச்சியை பட்டாசு வெடித்து வெளிப்படுத்துகிறார்கள். அப்போதெல்லாம் நேரம் வரையறை செய்வது கிடையாது, கண்டுகொள்வதும் கிடையாது.

தீபாவளி கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியையும்,உற்சாகத்தையும் குறைக்கின்ற எந்த ஒரு உத்தரவையும் மக்கள் ஏற்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: