Thursday, October 16, 2008

கிருஸ்தவர்கள் மீது புகார்-காவல் நிலையம் முற்றுகை


கிருஸ்தவர்கள் மீது புகார்-காவல் நிலையம் முற்றுகை
வியாழக்கிழமை, அக்டோபர் 16, 2008



நெல்லை: கோவிலில் இருந்த சுவாமி சிலை பீடம் சேதமடைந்தது தொடர்பாக கிருஸ்தவர்கள் மீது புகார் செய்து போலீஸ் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.

பாளை அருகே உள்ள மணப்படைவீட்டில் இந்து மற்றும் கிருஸ்தவ ஆலயங்கள் உள்ளன. சமீபத்தில் அங்குள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா நடந்தது. அப்போது சர்ச்சில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பாடல் போட்டதாக தெரிகிறது.

இதற்கு இந்துக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் இருந்த பெருமாள் சிலையில் பீடம் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் பதட்டம் ஏற்பட்டது.

எதிர்தரப்பினர்தான் இதை இடித்ததாக பாஜக தலைவர் பாலசுப்பிரமணியன், பொது செயலாளர் வழக்கறிஞர் அருள்ராஜ், ஆகியோர் தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் தாலுகா போலீஸ் நிலையம் சென்று பீடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி முற்றுகையிட்டனர்.

தகவறிந்த கிருஸ்தவர்களும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் இரு தரப்பினருடனும் பேசி கலைந்து போகச் செய்தனர்.

No comments: