இந்து முன்னணி வலியுறுத்தல்
.
Friday, 10 October, 2008 10:26 AM
.
சென்னை, அக். 10: சர்ச்சுகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணி தொண்டர்களை விடுதலை செய்து அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் காட்பாடி ரெயில்வே கேட் அருகில் சிலுவை களை உடைத்ததாக கண்ணன், துரை என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் கண்ணன் திமுக வார்டு உறுப்பினராவார். உண்மை இப்படி இருக்க சிலுவை உடைக்கப்பட்ட உடன் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற இந்து முன்னணி தொண்டர் களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் பல மணிநேரம் அடைத்து வைத்துள்ளனர்.
ஒசூர் அருகே உள்ள மதகொண்ட பள்ளியில் சர்ச் உடைக்கப்பட்டிருப்ப தாக அந்தோணியப்பா மகன் சின்னப்பன் என்ற கிறிஸ்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கும் இந்து விரோதிகள் இந்து முன்னணி மீது புகார் கூறி போலீசாருக்கு நிர்பந்தம் கொடுத்த போதிலும் முன் விரோதம் காரணமாக சின்னப்பன் தான் சர்ச்சை உடைத்தான் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிறிஸ்துவ மதத்தில் ஏராளமான பிரிவுகள் உள்ளன. இவர்கள் இந்துக்களை மத மாற்றம் செய்வதுடன் தங்களுக்குள்லேயே ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சர்ச்சை மற்றொரு பிரிவினர் தாக்குகின்றனர். உண்மை இப்படி இருக்க தீர விசாரணைக்காமல் இந்து முன்னணி தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.
விசாரணையில் உண்மை தெரிந்த பின் அவர்களை விட்டு விடுகின்றனர். ஆனால், அதற்காக வருத்தமோ, மன்னிப்போ கேட்பதில்லை.
சிறுபான்மையினர் ஓட்டை பெறுவதற்காக பல்வேறு கட்சிகள் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்று கூறி வருகின்றனர்.
இதுவரை தமிழகத்தில் சர்ச் உடைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள இந்து முன்னணி தொண்டர்களை உடனே விடுதலை செய்து அவர்கள் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
தமிழகத்தின் அமைதிக்கு விரோதமாக தினந்தோறும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துவதை கிறிஸ்துவ பாதிரியார்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராம கோபாலன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment