Monday, October 06, 2008

பங்களாதேஷி முஸ்லீம்களால் துரத்தப்படும் இந்து பழங்குடியினர்

அஸ்ஸாமில் கலவரம் பரவுகிறது - 33 பேர் பலி - ராணுவம் வரவழைப்பு
திங்கள்கிழமை, அக்டோபர் 6, 2008


உதால்குரி: அஸ்ஸாம் மிநிலம் உதால்குரி மாவட்டத்தில் போடோக்களுக்கும் சட்ட விரோதமாக பங்களாதேஷிலிருந்து குடிவந்தவர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.

அஸ்ஸாமில் வசிக்கும் போடோ இனத்தவருக்கும், வங்கதேசத்திலிருந்து ஊடுறுவி அஸ்ஸாமில் வசித்து வரும் அம்மாநிலத்தவர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

தங்களது வாழ்வுரிமை பங்களாதேஷிகளால் பறி போவதாக போடோக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டுள்ளது.

பல வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. வெடிகுண்டு வீச்சு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொள்வது என கலவரம் பெரிதானது. கலவரம் மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலைமை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. பிரச்சனையை சீராக கையாளாமல் துப்பாக்கி சூடு நடத்தி உயிரிழப்புக்குக் காரணமான உதால்குரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் பாசுமட்டாரி மாற்றப்பட்டு அனுப் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மோதலில் படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராணுவம் கொடி ஊர்வலம் நடத்தி, கலவரக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்த மோதலில் அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், ஆதிவாசிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 30,000 பேருக்கும் மேல் வீடுகளை விட்டு ஓடிவிட்டனர். 400க்கும் மேற்பட்ட வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன.

கலவரத்துக்குக் காரணமானவர்களை கண்டதும் சுட ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments: