Friday, October 17, 2008

இந்து அமைப்புக்கு மலேசிய அரசு தடை

இந்து அமைப்புக்கு மலேசிய அரசு தடை
கோலாலம்பூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 16 அக்டோபர் 2008 ( 12:34 IST )


மலேசியாவில், இந்து உரிமை நடவடிக்கை அமைப்புக்கு (ஹிண்ட்ராப்) அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

மலேசியாவில் செயல்பட்டு வரும் ஹிண்ட்ராப் அமைப்பு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி கோலாலம்பூரில் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாணப் பேரணியை நடத்தியது.

அப்போது காவல்துறையினருக்கும், ஹிண்ட்ராப் அமைப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் பின்னர் அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஹிண்ட்ராப் அமைப்புக்கு மலேசிய அரசு திடீரென தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மலேசிய உள்துறை அமைச்சர் சையத் ஹமீத் அல்பார், கோலாம்பூரில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் ஹிண்ட்ராப் அமைப்பால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹிண்ட்ராப் அமைப்பு, பிரச்சனையை இன ரீதியாகக் கையிலெடுத்து அவற்றை மலேசிய அரசுக்கு எதிராக திசை திருப்பி விட்டது.

மலேசியாவில் வாழும் மற்ற இனத்தவர்களுக்கு இடையே உறவுகள் பாதிக்கப்படும் வகையில் ஹிண்ட்ராப் செயல்பாடுகள் அமைந்திருந்தன. அவர்களின் நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை எதிராக இருந்தது.

No comments: