Saturday, January 05, 2008

என் பெயரை இழுத்து எழுதிய உறையூர்காரருக்கு பதில்

தேசப்பற்றுடன் இருக்க எங்களுக்கு கூலி வேண்டாம்
தேசிய விழாக்களான சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாட நாட்டிலுள்ள 12000 கும் மேற்பட்ட மதரஸாக்களுக்கு சிறப்பு நிதியுதவி அளிப்பதாக மத்திய அரசின் பரிந்துரையை மறுதளித்து தங்கள் தேசப்பற்றை நிரூபித்து இருக்கிறார்கள் இஸ்லாமிய சமுதாயத்தினர்.

இது குறித்து கருத்து தெரிவித்த அனைத்திந்திய முஸ்லிம் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் இலியாஸ் " இந்த திட்டம் மதரஸாக்களைச் சேர்ந்தவர்கள் நாட்டுப் பற்று இல்லாதவர்கள் என்கிற தவறான அபிப்பிராயத்தை மக்கள் மனதில் விதைத்துவிடும். எனவே இத்திட்டம் எங்களுக்கு ஏற்புடையது அல்ல" என்று கூறினார்.

ஆனால் அத்வானி, மோடி ஆகிய‌ காவித் தீவிரவாதிகள் முஸ்லிம்களின் தன்மானம் மிக்க இந்த அறிவிப்பை வரவேற்கவோ அல்லது பாராட்டவோ முன்வர மாட்டார்கள் என்பது நாமறிந்ததே. இதிலும் ஏதாவது இந்துத்வா அரசியல் சுய இன்பம் கிடைக்குமா என்றே பார்ப்பார்கள்.


என்று உறையூர்காரர் எழுதியிருக்கிறார்.

நல்லதுதான்.

இதில் என்ன எனக்கு வருத்தம் இருக்கமுடியும்?

காங்கிரஸ் அரசு கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களுக்கோ, அல்லது பார்ஸி பள்ளிக்கூடங்களுக்கோ இந்துக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களுக்கோ சொல்லாத ஒரு விஷயத்தை மதரஸாக்களுக்கு மட்டும் ஏன் சொல்கிறது என்றா நான் கேட்கிறேன்?

ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மதரஸாக்களில் இந்திய தேசிய திருவிழாக்கள் ஏதும் கொண்டாடப்படுவதில்லை என்று தெரியுமோ என்னவோ? யார் கண்டது?

சிபிஎம் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூட இதனைத்தான் சொல்கிறார். மதரஸாக்களில் அடிப்படைவாதம் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என்றுசொல்கிறார். அவர்களும்தான் இந்த காங்கிரஸ் கூட்டணி அரசினை தாங்கிப்பிடித்துவருகிறார்கள்

ஆட்சியில் இருக்கும் அவர்களுக்குத்தான் தெரியும், ஏன் இப்படி மதரஸாக்களுக்கு மட்டும் சுதந்திரதினம், குடியரசு நாள் கொண்டாட பணம் கொடுக்கவேண்டும் என்று

எனக்கென்ன தெரியும்?

11 comments:

Anonymous said...

மதரசகளில் மட்டும் அல்ல ,முஸ்லிம்கள் நடத்தும் கல்லுரிகளிலும் இதே நிலை தான் நான் ஒரு முஸ்லீம் கல்லூரியில் படித்தேன் , அங்கு எப்போதும் சுதந்திர மற்றும் குடியரசு தினங்கள் கொண்டடபட்டதில்லை. அவர்களுக்கு எப்போதும் நாட்டு பற்று என்பது எள்ளளுவும் இருந்ததில்லை , இருகபோவதுமில்லை.

சுரேகா.. said...

//அவர்களுக்கு எப்போதும் நாட்டு பற்று என்பது எள்ளளுவும் இருந்ததில்லை , இருகபோவதுமில்லை.//

அப்படி பொதுவாகச்சொல்லிவிடாதீர்கள்.!
இந்த சுதந்திரதினத்துக்கு ஒரு இஸ்லாமியப்பள்ளி மிகப்பெரிய விழா கொண்டாடியது! மற்ற பள்ளிகளைவிட சிறப்பாகவே! - ஆனால் ஏதோ இடறுகிறது. என்னவென்றுதான் தெரியவில்லை..

Anonymous said...

not true. we are also patriotic. ofcourse, our religion doesn't respect artificially created national borders. all muslims constitute one ummah!

Anonymous said...

Salim

See what you wrote. You just contradicted yourself in the same sentence.

So this is the reason why madrassas do not celebrate the Indian national celebrations.

Me said...

ஐயா,

நான் படித்தது திருச்சியிலுள்ள இடையாத்துமங்கலம் ரங்கசாமி ஐயர் மேல்நிலைப் பள்ளி எனும் பிராமண கல்விக் கூடம். அப்பள்ளியில் தேசிய கீதம் ஒலித்ததை விட "வானோர் வணங்கும் அன்னையே" என சரஸ்வதியின் புராணத்தை பாடப் பெற்றதுதான் அதிகம்.

இதற்கு காவி வெறியர்களின் பதில் என்னவோ?.

Mangai said...

I too have muslim friends. They are good and helpful.
But when it comes to patriotism, i have not felt it that they have it. When India and Pak plays cricket my neighbours(muslim) claps when India loses.

I am sorry to say this.

I want my muslim counterparts to understand that this type of thoughts with fellow Indians is not healthy. Please try to work towards clearing our doubts.

எழில் said...

அய்யா உறையூர்காரரே,
உங்கள் பள்ளிக்கூடத்தில் சுதந்திர தின கொண்டாட்டமோ, குடியரசுநாள் கொண்டாட்டமோ நடப்பதில்லையா?

அப்படியாயின் தயவுசெய்து மன்மோகன்சிங், சோனியா, பிரகாஷ் காரட்டிடம் சொல்லி, இந்து பள்ளிக்கூடங்களும் குடியரசு நாள், சுதந்திரநாள் கொண்டாட்டம் கொண்டாட காசு வாங்கித்தாருங்களேன்.

Me said...

நான் படித்த ஐந்து வருடங்களில் சுதந்திர தினமோ, குடியரசு தினமோ கொண்டாடப்படுகிறது மாணவர்கள் தவறாது கலந்துக் கொள்ளவேண்டும் என சுற்றறிக்கை வந்தது இல்லை.சாரண மற்றும் தேசிய மாணவர் படையினருக்கும் மட்டும்தான் சுதந்திர தினம்.

பெரும்பாலும் மத அல்லது சாதி அமைப்புகள் நடத்தும் கல்வி நிலையங்களில் சுதந்திர தின/ குடியரசு தின கொண்டாட்டங்கள் அரசு அங்கீகாரத்தை இழந்துவிடக் கூடாது எனப் பெயரளவிலேயே நடைபெறுகின்றன.

ஆனால் அந்த ஐந்து வருடஙளில் மருந்துக்கு கூட தமிழ்த் தாய் வாழ்த்து பாடப் பட்டதில்லை. அதனால் பிராமண (ஆர்.எஸ்.எஸ்) கல்விக் கூடங்கள் எல்லாம் தமிழின விரோதிகள் என்று முடிவு செய்துக் கொள்ளலாமா?

எழில் said...

என் நண்பர்களோ நானோ படித்த எந்த இந்து பள்ளிக்கூடத்திலும் சுதந்திர தின கொண்டாட்டமோ குடியரசு நாளோ கொண்டாடப்படாமல் இருந்த்தில்லை.

எனக்கு தெரிந்து எல்லா அய்யர் பள்ளிக்கூடங்களிலும் கட்டாயமாக நீராரும் கடலுடுத்த பாடல் பாடப்பட்டுதான் வந்திருக்கிறது.

எதற்கும் மன்மோகன் சிங்கிடமும் சோனியாவிடமும் பிரகாஷ் காரட்டிடமும் சொல்லி, உங்கள் பள்ளிக்கூடம் சுதந்திர தினம், குடியரசு தினம் கொண்டாட காசு வாங்கித்தாருங்கள்.

எழில் said...

அதே போல தமிழக அரசிடம் சொல்லி நீராரும் கடலுடுத்த பாடுவதற்கு உங்கள் பள்ளிக்கூடத்துக்கு காசு வாங்கித்தாருங்களேன்.

Mangai said...

Ezhil

Ningal ippadi pathil solluvathu thavaru enru ninaikiren.

Ithu thirvagathu.

Nam Hindu-Muslin-Christian sandai poduvathu Indiyan enbatharku ethiranathu.

Kutrangal sumathuvathu sandai poda alla, thirvu kana.

Thanks