பொங்கல் நாளில் மதமாற்ற கூட்டம் தடை விதிக்காவிடில் நடவடிக்கை : இந்து முன்னணி பகிரங்க எச்சரிக்கை நமது சிறப்பு நிருபர்
""பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஐந்து நாட்களும், தமிழகமெங்கும் மதமாற்றத்துக்காக கிறிஸ்தவர்களால், நடத்தப்படவுள்ள ஜெபக் கூட்டத்துக்கு அரசு தடை விதிக்க வேண்டும்,'' என இந்து முன்னணி எச்சரித்துள்ளது.
இந்து முன்னணி வேலுõர் கோட்ட அமைப்பாளர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது: தென்காசியில், 2006 டிச., 17ல் கொலை செய்யப்பட்ட குமார் பாண்டியனின் மனைவிக்கு, தமிழக அரசு வேலை கொடுத்ததற்கு நன்றி. 2007 ஆக., 14ல், முஸ்லிம் பயங்கரவாதிகளால் குமார் பாண்டியனின் சகோதரர்கள் மூவர் கொலை செய்யப்பட்டனர். அவர்களது மனைவிகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, பொங்கல் பண்டிகை நாட்களில் தமிழகமெங்கும் ஜெபக்கூட்டம் நடத்த கிறிஸ்தவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கிறிஸ்தவர்கள், போப் கூறியபடி மதமாற்ற அறுவடை தினமாக, இந்த பொங்கல் பண்டிகையை தேர்ந்தெடுத்து, ஜெபக்கூட்டம் நடத்தி, ஒன்றுமறியாத இந்துக்களை மதமாற்றம் செய்யவுள்ளனர். மதக்கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, பொங்கல் பண்டிகை கொண்டாடும் ஐந்து நாட்க ளை, மதமாற்றம் செய்ய தேர்ந்தெடுத் துள்ளனர்.
அவர்களின் ஜெபக்கூட்ட நிகழ்ச்சிகளை, பொது இடங்களில் நடத்த அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக, பொங்கல் தினத்தில், ஜெபக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. இல்லாவிடில், அதை தடுக்க இந்து முன்னணியினர் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவர். தமிழகத்தில் சாமியார்களை கண்காணிக்க, அவர்கள் குறித்த பட்டியலை போலீசார் தயாரிக்கின்றனர். ஆனால், சமூக விரோத செயல்கள், பாலியல் புகாரில் ஈடுபடும் கிறிஸ்தவ பிஷப்புகளை, போலீசார் கண்காணிக்காதது ஏன்? ஓமலுõர் கிறிஸ்தவ பள்ளியில், மாணவி சுகன்யா கற்பழிக்கப்பட்டு கொலை செய்த சம்பவத்தில், தொடர்புடைய உண்மை குற்றவாளியை, கைது செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஊட்டியில், அரசு பூங்காவில், மூன்று ஆண்டுகளுக்கு மத பிரசாரம் செய்ய கிறிஸ்தவர்களுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு, எதிர்ப்பு தெரிவித்த அப்பாவி மக்களின் மீது, போலீசார் பொய் வழக்கு போட்டு, கைது செய்துள்ளனர். இவ்வாறு வெள்ளையன் கூறினார்.
No comments:
Post a Comment