லாகூர் :பாகிஸ்தான் லாகூர் ஐகோர்ட் அருகே பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 26 பேர் பலியாயினர்.
இதில் பெரும்பாலானோர் போலீசார். மேலும், 70 பேர் காயமடைந்துள்ளனர்.இது குறித்து பாகிஸ்தான் உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஐகோர்ட்டில் இருந்து வக்கீல்கள் கண்டன பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக போலீசார் ஏராளமானோர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். லாகூர் ஐகோர்ட் வளாகம் அருகே தபால் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகே நின்றிருந்த பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையே, தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் ஊடுருவி, மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். இதில் 22 போலீசார் உட்பட 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். மேலும், 70 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. குண்டு வெடிப்பு நிகழந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் வரை மனித உடல்கள் சிதறிக் கிடந்தன. மேலும், போலீசாரின் நான்கு பாதுகாப்பு வாகனங்கள் முற்றிலும் சேதமடைந் துள்ளன. காயமடைந்தவர்கள் லாகூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். அங்கு அவர்களுக்கு போதிய வசதி இல்லாததால், பின்னர் அவர்கள் ஜின்னா மருத்துவமனைக்கு மாற்றப் பட்டனர். இதை தொடர்ந்து அங்கு போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், பிரதமர் முகமத் மியான் சூம்ரோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment