Thursday, January 17, 2008

போட்ஸ்வானா இந்துக்கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்ரிக்க போட்ஸ்வானாவில் உள்ள ‌ஒரே இந்து கோயில்
போட்ஸ்வானா: ஆப்ரிக்க கண்டத்தில் போட்ஸ்வானாவில் கப்ரோனா என்ற ஒரே இந்து கோயில் மட்டுமே உள்ளது. இங்கு சிவன், ராமர், லட்சுமணனர் , நவக்கிரகம் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் உள்ளது என்பது முக்கியச்சிறப்பு. ஆப்ரிக்க கண்டத்தில் முக்கிய நகரங்களில் இந்துகோயில்கள் பல உள்ளன. ஆனால் போட்ஸ்வானாவில் உள்ள கப்ரோனா என்ற இந்து கோயில் மட்டுமே உள்ளது. இக்கோயிலை மக்கள் இந்துஹால் என்றே அழைக்கின்றனர். இப்பகுதி வாழ் இந்து மக்கள் குவிந்து தங்ள் இஷ்ட தெய்வங்களை வணங்கி வருகின்றனர். இங்கு நுழைவு வாயியில் முதல் பகுதியில் நவக்கிரக கோயில் உள்ளது. தொடர்ந்து பார்வதியுடன் சிவன், அருகில் கணேசர், முருகன் விக்கிரங்கள் உள்ளது. அடுத்து ராமர், லட்சுமணர், சீதாசன்னதி உள்ளது. இங்கு தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும். இங்கு மகாசிவராத்திரி, ராமநவமி, தசரா, தீபாவளி உள்ளிட்ட இந்துக்களின் முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 5 ம் தேதி பிரதோஷமும், 8 ம் தேதி குருபூஜையும், 14 ம் தேதி போகிப் ப‌ண்டிகையும், 14 ம் தேதி திருப்பாவை, திருவெம்பாவை நிறைவு நிகழ்ச்சியும், 15 ம் தேதி மகரசங்கராந்தியும் கொண்டாடப்பட்டது. நாள்தோறும் இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இக்கோயில் நிர்வாத்தினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி தினமலர்

No comments: