Thursday, January 17, 2008

ஆஸ்திரேலியா மெல்போர்ன் சிவவிஷ்ணு கோவிலில் 1008 கலச பூஜை

மெல்போர்ன் சிவவிஷ்ணு கோயிலில் 1008 கலச பூஜை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகர் சிவவிஷ்ணு கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு 1008 கலச பூஜையும் , பொங்கல் திருவிழாவும் நடந்தது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் அருகே பிலிப்பே கடலுக்கு சற்று தொலைவில் பேட்ர்சின் ஆற்றுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்து கலாச்சார முறைப்படி தத்ரூபமாக கட்டட கலை நுணுக்கத்துடன் 1. 5 மில்லியன் டாலர் செலவில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. விக்கோடரியா வாழ் இந்துக்கள் இக்கோயிலை நிறுவியுள்ளனர். இங்கு நாள்தோறும் காலை 7.30 முதல் 12. 05 வரையும், மாலையில் 4 மணி முதல் 9 மணி வரையும் நடை திறந்திருக்கும். புத்தாண்டை முன்னிட்டு மகாவிஷ்ணுக்கு 1008 கலச பூஜை நடத்தப்பட்டது. அந்நாளில் அன்னதானமும் நடந்தது. பொங்கலை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், மகேஸ்வர பூஜையும், உற்சவமும் நடந்தது. 16 ம் தேதி கானும் பொங்கலை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. வரும் 18ம் தேதி இக்கோயிலில் உள்ள சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கவுள்ளது. இக்கோயில் 17 ஆண்டுகளள்முன்னதாக நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி தினமலர்

No comments: