Saturday, November 24, 2007

தமிழ் இந்துவும் இங்கிலீஷ் தீக்கதிரும் சொல்லும் தஸ்லிமா செய்திகள்

ஆங்கில தி இந்து செய்தி, தஸ்லிமா நஸ்ரீன் கட்டாயமாக ஜெய்ப்பூருக்கு மேற்கு வங்க போலிஸால் அனுப்பப்பட்டதாகவும், ஜெய்ப்பூரில் தங்க விருப்பமில்லாத நஸ்ரின் டில்லிக்கு சென்றதாகவும் கூறுகிறது

தமிழ் தீக்கதிர், தஸ்லிமா நஸ்ரின் சுய விருப்பத்த்துடன் ஜெய்ப்பூர் சென்றதாகவும், பாஜக அரசு அவரை டில்லிக்கு அனுப்பியதாகவும் கூறுகிறது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் அரசு உருவானால் எப்படி செய்திகள் எழுதப்படும் என்பதற்கு தீக்கதிர் ஒரு உதாரணம்


அத்துமீறும் அடிப்படைவாதிகள்
வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தமது சொந்தவிருப்பத்தின் பேரில் கொல்கத் தாவிலிருந்து வெளியேறி ராஜஸ்தான் சென் றார். பின்னர் அவர் பலத்த பாதுகாப்புடன் டில்லிக்கு சென்றுள்ளார்.

தஸ்லிமா நஸ்ரீனின் விசாவை ரத்து செய்து அவரை வங்கதேசத்திற்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்று நவம்பர் 21ம் தேதியன்று கொல்கத்தாவில் அகில இந்திய சிறு பான்மையோர் அமைப்பு என்ற பெயரில் மத அடிப்படைவாத சக்திகள் பெரும் வன்முறை யில் ஈடுபட்டன. மார்க்சிஸ்ட் கட்சி அலு வலகங்கள் சிலவற்றை அடித்து நொறுக்கிய தோடு பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத் தினர். மாநில அரசு உறுதியாகவும், துரிதமாக வும் செயல்பட்டு வன்செயல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்தது. இதேபோன்ற சம்பவங்கள் வேறு எங்காவது நடந்திருந்தால் அது மதக்கலவரமாக உருவெடுத்திருக்கக் கூடும். ஆனால் மதவன்முறைகளுக்கு இட மளிக்காத மேற்குவங்க இடதுமுன்னணி அரசு வன்செயல்களை சாதுரியமாக முடிவுக்குக் கொண்டுவந்தது. கொல்கத்தாவில் சில பகுதி களில் ஏற்பட்ட பதட்டம் நீங்கி இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

இந்த பின்னணியில்தான் தஸ்லிமா நஸ் ரீன், கொல்கத்தாவிலிருந்து வெளியேறி ராஜஸ் தான் சென்றார். இது அவர் தாமாக எடுத்த முடிவு என்றும் மேற்குவங்க அரசு அவரை வெளியேறுமாறு கூறவில்லை என்றும் மேற்கு வங்க மாநில அரசின் உள்துறை செயலாளர் பி.ஆர்.ராய் தெளிவுபடுத்தியுள்ளார்.
கொல்கத்தாவில் மத அடிப்படைவாதிகள் தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வன்செயல்களில் ஈடுபட்டபோது, தஸ்லி மாவுக்கு ஆதரவாகவும் கருத்துச் சுதந்திரத் திற்கு ஆதரவாகவும் இருப்பதுபோன்று பாஜகவினர் நாடகமாடினர். ஆனால், அவர் பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தானுக்கு சென்றவுடன் அங்குள்ள மதஅடிப்படைவாதி கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அவரை நாசுக்காக வெளியேற்ற முயன்றனர்.
தஸ்லிமா இந்தியாவில் தங்க அனுமதி வழங்கி விசா அளித்துள்ளது மத்திய அரசு தான். கொல்கத்தா தமக்கு பாதுகாப்பான நகர மாக இருக்கும் என்று கூறி தஸ்லிமா அங்கு தங்கியிருந்தார். அவர்அங்கு இருந்தவரை அவருக்கு மாநில அரசு முழுபாதுகாப்பு அளித்தது. ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தஸ்லிமா தாக்கப்பட்டபோது மார்க்சிஸ்ட் கட்சி அந்த தாக்குதலை வன்மை யாகக் கண்டித்தது.

மேற்குவங்க இடதுமுன்னணி அரசுக்கு எதிராக பல்வேறு பிற்போக்கு சக்திகள் கரம் கோர்த்துள்ளன. இதன் ஒரு பகுதியாகவே சம்பந்தமில்லாமல் நந்திகிராமம் பிரச்சனை யையும் இணைத்துக்கொண்டு மத அடிப்படை வாதிகள் வன்செயல்களில் ஈடுபட்டனர். இதை ஒரு மாநில அரசுக்கெதிரான பிரச்சனையாக பார்க்கக்கூடாது. மத்திய அரசு இந்தப்பிரச் சனையை கவனமாக கையாள வேண்டியது அவசியம். அதே நேரத்தில் எழுத்தாளர்களின் கருத்துச்சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதும் முக்கியமானது.

இந்தப்பிரச்சனையில் பாஜகவின் கபடநாடகம் முற்றிலும் அம்பலமாகியுள்ளது. கருத்துச் சுதந்திரம் குறித்து கொஞ்சமும் கவலைப்படாதவர்கள்தான் இவர்கள். சேது சமுத்திர திட்டத்திற்கு குரல் கொடுத்தமைக்காக தமிழக முதல்வரின் தலையையும் நாக்கையும் துண்டிக்க வேண்டும் என்று குரூரமாக கொக் கரித்தது இந்தக் கூட்டத்தை சேர்ந்தவர்தான். ‘வாட்டர்’ படப்பிடிப்பை தடுத்தது துவங்கி எம்.எப்.உசேன் ஓவியங்களை சிதைத்தது வரை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் நடத்திய காட்டுமிராண் டித்தனத்தை நாடு நன்கறியும்.

தஸ்லிமா நஸ்ரீன் பிரச்சனையை மேற்கு வங்க அரசுக்கு எதிரான பிரச்சனையாக மாற்ற முயன்றவர்கள் பரிதாபமாக தோல்வியடைந் துள்ளனர். மத நல்லிணக்கத்திற்கும் மக்கள் ஒற்றுமைக்கும் மதச்சார்பின்மைக்கும் பாது காப்பு அரணாக விளங்கும் இடதுமுன்னணி அரசுக்கு எதிராக அவதூறு கக்கி வரும் ஊடகங்கள் இந்தப் பிரச்சனையையும் பயன் படுத்த முயன்றார்கள். ஆனால் அது வெற்றி பெறவில்லை.


Taslima confined to Rajasthan House, future uncertain

New Delhi (PTI): After being hounded from Kolkata and shifted out of Jaipur, Bangladeshi writer Taslima Nasreen on Saturday kept herself confined to the Rajasthan government guest house here meeting senior central government officials even as her future course of action remained uncertain.

The Rajasthan government is awaiting a direction from the Centre on where Nasreen, accorded the status of a state guest by Rajasthan, would go and stay.

Home Minister Gulab Chand Kataria said "we are awaiting the direction from the Union Home Ministry on Nasrin".

Enconsced in high-security Rajasthan House on Prithivraj Road, Nasreen, who was brought here from Jaipur late Friday night, spent the day today meeting government officials and BJP leader Prakash Javdekar.

Those who met her returned with the impression that she is being asked by the Centre to go out of India for sometime to allow cooling of temperature over the demand for her expulsion.

Some officials of the Home Ministry met the 46-year-old doctor-turned-writer to discuss about her permanent stay in the country and she told them that she would like to continue to stay on here.

Nasreen, who had appeared "tense and harried" when she arrived here late Friday night from the Pink City ending mystery about her whereabouts, appeared "happy and relaxed", sources in touch with her said.

Nasreen refused to have dinner when offered on Friday night but on Saturday morning she was talking freely with officials and had her breakfast, they said.

According to the sources, the writer said she was sent to the Pink City against her wishes and she did not want to return to Jaipur.

Muslim fundamentalists in Bangladesh have issued death threats to Nasreen for allegedly hurting religious sentiments through her writings after which she left the country and went into a self-imposed extile abroad.

1 comment:

Anonymous said...

அப்டி போடுங்க எழில்

கம்யூனிஸ வரலாறே இப்படிப்பட்டதுதானே?

இவர்கள் எழுதுவதுதான் செய்தி என்று இருக்கவேண்டும் என்பதற்காகத்தானே, சர்வாதிகாரம் என்று கூறுகிறார்கள்?