Friday, July 15, 2011

மும்பை குண்டுவெடிப்பு: இந்து முன்னணி கண்டனம்

மும்பை குண்டுவெடிப்பு: இந்து முன்னணி கண்டனம்

First Published : 14 Jul 2011 12:02:04 PM IST


சென்னை, ஜூலை.14: மும்பையில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மும்பையில் நேற்று மூன்று இடங்களில் குண்டு வெடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திக்கின்றனர். பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். அப்பாவி மக்கள் உயிரிழக்கவும், பொருட்சேதமும் ஏற்பட காரணமான இஸ்லாமிய பயங்கரவாதிகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இத்தகைய கொடூர நடவடிக்கைகள் தடுத்திட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத்தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டிக்கிறோம். பயங்கவாதிகள் மேல் நடவடிக்கை எடுக்காததால் பயங்கரவாதிகள் இதுபோன்ற மோசமான சதிச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், உளவுத் துறை, புலானய்வு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.
இஸ்லாமிய பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களைத் திரட்டி, கடும் நடவடிக்கை எடுக்கத் தவறியதாலேயே தொடர்ந்து மும்பை நகரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமும், நக்ஸல், மாவோஸ்ட் இடதுசாரி பயங்கரவாதிகளிடமும் மத்திய அரசு மென்மைப்போக்கைக் கடைப்பிடிப்பதாலேயே இத்தகைய மோசமான விளைவுகளை நாடு சந்திக்க வேண்டியுள்ளது.
பயங்கரவாதத்தைக் கண்டித்து வருகிற 17-7-2011 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி அழைப்பு விடுக்கிறது. இதற்கு நடுநிலையாளர்களும், பொதுமக்களும் ஆதரவு அளித்திட வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: