Thursday, July 21, 2011

இந்து பெயரில் பிகார் முஸ்லீம் கூடங்குளம் அணு உலையில் ஆள்மாறாட்டம்: பயங்கரவாதியா?

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆள்மாறாட்டம்; பயங்கரவாதியா என்று போலீசார் விசாரணை
புதன், 20 ஜூலை 2011( 10:50 IST )



கூடங்குளம் அணு மின்திட்ட நிலையத்தில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த மொகமட் மெராஜ் கான் என்ற 25வயது முஸ்லீம் நபர் வேறு ஒருவர் பெயரிலும், அடையாளத்திலும் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பணியாற்றிவந்ததாகக் கைது செய்யபட்டுள்ளார்.

கூடங்குளத்தில் பல்வேறு ஒப்பந்த நிறுவன பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதுபோன்ற தனியார் நிறுவனம் ஒன்றில் மெராஜ் கான் பணியாற்றிவந்தார்.

இப்போது இவர் வேறு ஒருவர் பெயரில் இங்கு பணியாற்றியுள்ளமை தெரியவந்துள்ளதால் இந்திய உளவுப்பிரிவான ஐ.பி. மற்றும் கியூ-பிரான்ச் விசாரணை அதிகாரிகள் இவருக்கும் பயங்கர்வாத அமைப்பிற்கும் தொடர்புகள் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

கேஃபர் பஞ்ச் லாய்ட் என்ற நிறுவனத்தின் கீழ் கூடங்குளத்தில் வெல்டராக மெராஜ் கான் பணியாற்றிவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிறுவனம் கூடங்குள அணு மின் திட்ட ஒப்பந்த நிறுவனமாகும்.

சுபோத் பஷ்வான் என்ற பெயரில் கூடங்குளத்தில் மெராஜ் கான் பணியாற்றி வந்துள்ளார்.மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் இவரைக் கைது செய்து கூடங்குளம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தவறான முகவரியையும் மெராஜ் கான் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுபோத் பாஷ்வான் என்ற பெயருடைய அடையாள அட்டையில் மெராஜ் கான் தனாது புகைப்படத்தை ஒட்டி ஆள்மாறாட்ட வேலை செய்துள்ளார்.

இதனால் இவர் மீது பயங்கரவாத தொடர்பு குறித்த பலத்த சந்தேகம் காவல்துறையினரிடையே எழுந்துள்ளது.

ஆனால் விசாரணையில் இதுவரை மெராஜ் கானுக்கும் தீவிரவாதிக் குழுக்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என்றும் கூடங்குளம் காவலதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க

No comments: