Wednesday, April 20, 2011

கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு கைதியிடம் செல்போன் பறிமுதல்

கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு கைதியிடம் செல்போன் பறிமுதல்
நள்ளிரவில் ரகசியமாக பேசிக் கொண்டிருந்த போது சிக்கினார்


கோவை, ஏப்.19-

கோவை மத்திய சிறையில் நள்ளிரவில் செல்போனில் ரகசியமாக பேசிக் கொண்டிருந்த குண்டு வெடிப்பு கைதி சிக்கினார். அவரிடம் இருந்து செல்போன் ஒன்றை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கோவை மத்திய சிறையில் 2,200 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளும் மற்றும் பிற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளும் விசாரணை கைதிகளும் அடங்குவார்கள்.

செல்போன் பறிமுதல்

கோவை குண்டு வெடிப்பு கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள 11-ம் பிளாக்கில் ஒரு கைதி அடிக்கடி செல்போனில் பேசுவதாக சிறைக்காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சிறைக்காவலர்கள் நள்ளிரவு நேரங்களில் அந்த கைதி அடைக்கப்பட்டு உள்ள அறையை கண்காணித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 111/2 மணிக்கு அந்த கைதி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அதையடுத்து சிறைக்காவலர் பார்த்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். சிறை சூப்பிரண்டு முருகேசன் உத்தரவின் பேரில் உதவி சப்-ஜெயிலர் விஸ்வநாதன் தலைமையில் சிறைக்காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அந்த கைதியை சோதனை செய்தனர்.

பாஷா தம்பி

அதற்குள்தான் செல்போனில் பேசிய விபரம் சிறைக்காவலர்களுக்கு தெரிந்து விட்டது என்பதை அறிந்து கொண்ட அந்த கைதி செல்போனில் இருந்த சிம்கார்டை கழற்றி கடித்து வீசி விட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் சிறை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்ட போது அவரது பெயர் நவாப்கான் (40) என்றும் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர், தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருப்பவர் என்றும் தெரியவந்தது.

மேலும் அவர் குண்டு வெடிப்பு வழக்கில் கோவை சிறையில் உள்ள தடை செய்யப்பட்ட அல்-உம்மா இயக்க தலைவர் பாஷாவின் தம்பி என்றும் விசாரணையில் தெரியவந்தது.

அதிகாரிகள் விசாரணை

அவர் பயன்படுத்திய செல்போன் நம்பர் என்ன? அவர் யாருடன் தொடர்பு கொண்டு பேசினார்? என்ற விபரங்களை அறிய சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

2 comments:

தமிழன் said...

இந்த மாதிரி நாய்களை உடனே சுட்டு கொன்றுவிட வேண்டும்.

mahabooman said...

yes, they deserve to die at all. it will happen very soon my friend!