Thursday, April 07, 2011

நேபாளில் இந்து கோயில் வளாகத்தில் கிறிஸ்துவ கல்லறை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உண்ணாவிரதம்

வாடிகனில் இந்துக்களுக்கு ஒரு முருகன் கோவில் அமைத்துகொடுங்கள்
பிறகு பார்க்கலாம்.


நேபாளில் இந்து கோயில் வளாகத்தில் கல்லறை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

..
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2011,02:57 IST
கருத்தை பதிவு செய்ய

காத்மாண்டு: நேபாள் நாட்டில் இந்து ‌கோயில் வளாகத்தில் கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு இடம் ஒதுக்க கோரி அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஏப்ரல் 11-ம் தேதி ஒத்தி வைத்தது. நேபாள் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் எனும் இந்து கோயில் சேல்ஷி்மான்டக் வனப்பகுதியில் உள்ளது. இப்பகுதியில் தங்களுக்கு கல்லறைக்கு இடம் கோரி பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.இதற்கு கோயில் அறக்கட்டளை மேலான்மை நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது. இதனால் கிறிஸ்தவ அமைப்புகம் ‌கோயில் நிர்வாகத்தி‌னை கண்டித்து கடந்த 2 வாரங்களாக கிறிஸ்தவ அமைப்புகள் உண்ணாவிரதம் இருந்து வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக சுப்ரீ்ம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தன. இதனை எதிர்த்து பாரத்ஜாங்கம் என்ற இந்து அமைப்பினர் பதிலுக்கு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கோயில் வளாகத்தில் கல்லறைக்கு அனுமதி வழங்கக்கூடாது என கூறப்பட்டிருந்தது. இரு மனுக்களும் நேற்று நேபாள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன மனு மீதான விசாரணை ஏப்ரல் 11-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைததார்.

No comments: