ஆட்சி மாறும். பொன்னர் சங்கர் வரலாற்றை கேவலப்படுத்தும் இந்த படம் தடை செய்யப்படும்
பாஜக போராடும்.
திரையிடுவதை எதிர்த்து வழக்கு; பொன்னர்-சங்கர் படத்துக்கு தடை இல்லை; ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி
Chennai வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 08, 2:24 PM IST மதிப்பீடு இல்லை இமெயில் பிரதி திரைப்படம் சென்னை, ஏப். 8-
முதல்-அமைச்சர் கருணாநிதி கதை- வனத்தில் உருவான பொன்னர் சங்கர் படம் நாளை வெளியாகிறது. இந்த நிலையில் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் உலகநாதன் வழக்கு தொடர்ந்தார்.
அதில் கூறியிருந்ததாவது:-
பொன்னர் -சங்கரை கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தினர் குல தெய்வமாக வழிபடுகின்றனர். 22 சமூகத்தினர் வழிபாடு செய்கின்றனர். ஆனால் இந்த படத்தில் பொன்னர்-சங்கர் வரலாற்றின் மூலக்கதை மாற்றப்பட்டு உள்ளது.
படத்தில் டூயட் பாடல்களும் இடம் பெற்று உள்ளன. இந்த படம் வெளி வந்தால் எதிர்கால சந்ததியினரிடம் பொன்னர்- சங்கர் வரலாற்றின் உண்மை தன்மை மாறிவிடும் தவறான எண்ணங்களும் ஏற்பட்டு விடும்.
எனவே படத்துக்கு தணிக்கை குழுவினர் அனுமதி அளிக்க கூடாது என கோர்ட்டு உத்தரவிட வேண்டும். படத்தை வெளியிடுவதையும் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
நீதிபதி ஜோதிமணி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அவர் கதையில் மாறுபாடு இருந்தால் சிவில் வழக்காகத்தான் அதை பதிவு செய்ய வேண்டும். எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment