Friday, February 09, 2007

திருமலை- திருப்பதியின் சுற்றுச்சூழல் பணி




ஒரு மரம் பத்து சூரியர்களுக்கு சமானம் என்ற தேவி பார்வதியின் சொல்லுடன் திருமலை மரக்கன்றுகளை பிரசாதமாக அளிக்கிறது.

இந்துக்கோவில்கள் காலம்காலமாக கலைகளின் உறவிடங்களாகவும், தாவரங்களின் உறவிடங்களாகவும் அபூர்வமான தாவரங்களையும் மரங்களையும், பூக்களையும் காக்கும் உறவிடங்களாகவும், மக்களுக்கு அவற்றின் முக்கியத்துவத்தை பல்வேறு கதைகள் மூலம் சொல்லும் இடங்களாகவும் இருந்து வந்துள்ளன.

காலத்தின் கோலத்தால், அந்த ஞானமும், உன்னத பழக்கங்களும் அழிந்து அவற்றின் இடத்தில் சடங்காகவேனும் இத்தகைய பழக்கங்கள் இருக்கும் சூழ்நிலையில் அதன் முக்கியத்துவத்தை மீட்டெடுக்கும் முதன்மை கோவிலாக திருமலை உருவாகியிருக்கிறது.

இந்த கோவில் கலாச்சாரம் பல்கிப் பெருகி நம் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தொட்டு உன்னதப்படுத்த வேண்டுமாய் இறையை இறைஞ்சுகிறேன்.

மீண்டும் கோவில்கள் கலை நிலையங்களாகவும், எல்லோரும் கூடும் சமூக கூடங்களாகவும், உபன்யாச நிலையங்களாகவும், உன்னத தாவரங்கள் பாதுகாக்கப்படும் தோட்டங்களாகவும் ஆக விரும்புவோம்

நன்றி

வாஷிங்டன் போஸ்டில் வசுதா நாராயணனின் கட்டுரை

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல விடயத்தை எடுத்துக் காட்டி உள்ளீர்கள் எழில்!

இது பல நாள் திருமலையில் வழக்கமாக இருந்து வருகிறது! விருட்சப் பிரசாதம் என்று பெயர்! மிகவும் சுலபமாக, நீர் அதிகம் தேவைப்படாத செடி கொடிகளையும் தருகிறார்கள்.

அண்மைக் காலங்களில் இது பிரபலமாகி இருப்பது மகிழ்ச்சியான ஒன்று!
இது பற்றிச் செடிகொடிப் பிரசாதம் என்று அடியேனின் பிரம்மோற்சவப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்!
இதோ, http://madhavipanthal.blogspot.com/2006/10/8_02.html

எழில் said...

நன்றி சகோதரர் கண்ணபிரான்

உங்கள் பதிவு சிறப்பாக இருக்கிறது

நன்றி