Monday, August 08, 2011

விடுதி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை-கிறிஸ்துவ போதகர், மகன் கைது-ஒருவருக்கு வலைவீச்சு

மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த கிறிஸ்துவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பி மனநலம் பெற்று சிறப்பாக வாழ இவர்களுக்காக முருகனிடமும் பிள்ளையாரிடமும் பிரார்த்தனை செய்வோம்


விடுதி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை-போதகர், மகன் கைது-ஒருவருக்கு வலைவீச்சு



சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே விடுதியில் தங்கி படித்த மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கிறிஸ்தவ போதகர், அவரது மகன் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மணி நகரில் உள்ள தோட்டத்தில் கிறிஸ்தவ ஜெபகூடம் மற்றும் அனாதை விடுதி உள்ளது. இதை அன்புநகரைச் சேர்ந்த போதகர் சவுந்திர ராஜன் என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இங்கு கிருஷ்ணகிரி, ஓசூர், பவானி, தர்மபுரி, ஈரோடு, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் தங்கி அன்புநகர் பள்ளியில் படித்து வருகிறார்கள். மொத்தம் 12 மாணவிகள், 22 மாணவர்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இங்குள்ள மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதில் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த 15 வயது மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும், இது அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததால் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி பாலியல் தொல்லை குறித்து அவரது தந்தையிடம் கூறவே அவர் சென்ற வாரம் தனது மகளை விடுதியில் இருந்து அழைத்து சென்றுவிட்டார். இது குறித்த தகவல் தட்டார்மடம் போலீசுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து சாத்தான்குளம் டி.எஸ்.பி. அந்த விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தியபோது முறைகேடு நடத்திருப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. பாக்கியம் தேவகிருபை, சாத்தான்குளம் தாசில்தார் ஹாரிஸ், வருவாய் ஆய்வாளர் விஜய குமாரி, வி.ஏ.ஓ. வேல்சுந்தரம் ஆகியோர் மணி நகரில் உள்ள அந்த விடுதியை ஆய்வு செய்தனர். அப்போது மாணவிகள் பலர் விடுதியில் நடந்தவற்றை கூறி அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதனையடுத்து அங்கு தங்கி படித்து வந்த 12 மாணவிகள், 22 மாணவர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு விடுதிக்கு நேற்று மாற்றப்பட்டனர். மேலும் இது தொடர்பாக விடுதி காப்பாளர் சவுந்திர ராஜன், அவரது மகன் கிறிஸ்டோபர் ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சவுந்திராஜனின் இன்னொரு மகன் உதய பாலஜெயசி்ங்கை தேடி வருகின்றனர்.

No comments: