Wednesday, August 10, 2011

மூன்று இந்து கிறிஸ்துவ பெண்களை காதலித்து திருமணம் செய்த முஸ்லீம் வாலிபர் கைது லவ் ஜிகாதா?3 பெண்களை காதலித்து மணந்து காமக் களியாட்டம்
சென்னையில் திருமண மோசடி மன்னன் கைது
பரபரப்பு வாக்குமூலம்


சென்னை, ஆக.10-


சென்னையில் 3 பெண்களை காதலித்து மணந்து காமக்களியாட்டத்தில் ஈடுபட்டதாக பிரபல திருமண மோசடி மன்னன் கைது செய்யப்பட்டார்.

2-வது மனைவி ரோஸ்மேரி புகார்

சென்னை முகப்பேர் 3-வது பிளாக்கை சேர்ந்தவர் ரோஸ்மேரி (வயது 27) பி.காம். பட்டதாரியான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன். என்னுடன் ரியாஸ் (வயது 29) என்பவரும் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வருடமாக ரியாசும் நானும் காதலித்து வந்தோம். ரியாஸ் என்னை திருமணம் செய்வதாக கூறினார். என்னை மணப்பதற்காக அவர் தனது பெயரைக் கூட ராபர்ட் என்று மாற்றி வைத்துக் கொண்டார்.

இருவரும் அலைபாயுதே சினிமா படத்தில் வருவதை போல முதலில் ரகசிய திருமணம் செய்து கொண்டோம். பின்னர் முறையாக கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொள்வதாக ரியாஸ் வாக்குறுதி கொடுத்தார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்ள வரதட்சணையாக 25 சவரன் நகைகளையும், 70 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் ரியாஸ் வாங்கிக் கொண்டார்.

முதல் மனைவி புகார்

திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ரியாஸ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற அதிர்ச்சி தகவல் எனக்கு கிடைத்தது. அவர் விஜயா என்ற இந்து பெண்ணை இதேபோல காதலித்து மணந்துள்ளார். ரியாசை மணப்பதற்காக விஜயா தனது பெயரை கூட நஸ்ரின் என்று மாற்றியுள்ளார். அவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தைகூட உள்ளது. விஜயா இதுதொடர்பாக அமைந்தகரை போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அமைந்தகரை போலீசாரும் ரியாசை அழைத்து விசாரித்தார்கள். அப்போது ரியாஸ் விஜயாவோடு வாழ மறுத்து விட்டார். என்னிடமும் மன்னிப்பு கேட்டார். விஜயாவும் ரியாசோடு வாழ மாட்டேன் என்று எழுதி கொடுத்து விட்டு போய் விட்டார். தற்போது விஜயா ஆவடியில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். ரியாசின் இந்த தவறை மன்னித்து நானும் அவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தேன்.

3-வது திருமணம்

இந்த நிலையில் ரியாஸ் 3-வதாக ஒரு இளம் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த திடுக்கிடும் தகவல் எனக்கு கிடைத்தது. நான் வேலை பார்த்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முதலாளியின் மகளையே ரியாஸ் கடத்தி சென்று ரகசிய திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே எங்கள் 2 பேரை திருமணம் செய்த தகவல் தெரியாது. அந்த பெண்ணை கடத்தி சென்று ரியாஸ் திருமணம் செய்து உள்ளார். இதுதொடர்பாக எங்கள் முதலாளி அரும்பாக்கம் போலீசிலும் புகார் கொடுத்துள்ளார்.

இப்படி 3 பெண்களின் வாழ்க்கையில் விளையாடி மிகப் பெரும் காதல் மோசடியை செய்த ரியாஸ் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் வாழ்க்கையில் விளையாடியது போல ரியாஸ் மேலும் பல பெண்களை மோசடி செய்யக்கூடாது என்ற நோக்கோடு இந்த புகார் மனுவை கொடுக்கிறேன். ரியாஸ் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு ரோஸ்மேரி கண்ணீரோடு புகார் மனு கொடுத்தார்.

வழக்குப்பதிவு- கைது

இந்த புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். திருமங்கலம் உதவி கமிஷனர் கலிதீர்த்தான் மேற்பார்வையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். காதல் திருமண மோசடி மன்னன் ரியாசை கைது செய்ய தேடி வந்தனர்.

இந்த நிலையில் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு தனது 3-வது மனைவியை வயிற்று வலி சிகிச்சைக்காக நேற்று முன்தினம் மாலையில் ரியாஸ் அழைத்து வந்திருந்தார். அப்போது பெண் போலீசார் ரியாசை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். போலீசார் ரியாசை கைது செய்ததை பார்த்து அவரது 3-வது மனைவி கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். ரியாசை திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வைத்து பெண் போலீசார் விசாரித்தார்கள். விசாரணையில் அவர் இதுபோல நிறைய பெண்களை மோசடி செய்தது அம்பலமானது.

போலி பட்டதாரி

ரியாசின் தந்தை மீன் வியாபாரி ஆவார். தற்போது அவர் உடல்நலக்குறைவால் உள்ளார். மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ரியாஸ் தான் பணக்காரனாகும் நோக்கத்தோடு இதுபோல் பெண்களிடம் காதல் லீலைகளில் ஈடுபட்டு அவர்களிடம் பணம்- நகைகளை பறித்ததாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ரியாஸ் 8-வது வகுப்பு வரைதான் படித்துள்ளார். ஆனால் தான் பட்டப்படிப்பு படித்துள்ளதாக கூறி பெண்களை காதல் வலையில் விழ வைத்துள்ளார். அவர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரிடம் ஏமாந்த பெண்கள் புகார் கொடுக்கலாம் என்று திருமங்கலம் பெண் போலீசார் அறிவித்துள்ளனர். இவர் இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்துள்ளதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.


2 comments:

IV said...

விடுங்க பாஸு,
கல்யாணத்துக்காக மத்த பொன்னுனுகளை மதம் மாத்துறது தப்புன்னு எத்தன சொன்னாலும் நம்ம பலலுவ கேக்க மட்ட்டேன்க்ரானுங்களுவே(http://thatstamil.oneindia.in/news/2010/05/06/islam-conversion-shariat-marriage.html) ...
என்ன பண்றது அப்படியே கண்டுக்காம விடுங்கக ... இப்ப நம்ம பிரபு தேவ கூட நயன மதம் மாதிடான்னு சொல்றனுங்க.. முன்னாடி ரமலத் இப்ப நயனு... விடுங்க சின்னபுள்ள விஷய்தைஎல்லாம் "லவ் ஜிஹாதுன்னு" பெருசா நியூஸ் போடுக்குட்டு..
ஒன்னங்கிலாஸ் பயன் மாதிரி கண்ண கசக்கிட்டு... விடுங்க.. விடுங்க..

PAATTIVAITHIYAM said...

இளைஞன் இஸ்லாத்துக்கு மாறி 4 பொண்டாட்டி கட்டிக்கிட்டால் தப்பில்லை. இஸ்லாம் ஜனப்பெருக்கத்துக்கு உதவும்.கிழவன் மதம் மாறி கல்யாணம் பண்ணினால் என்ன பிரயோஜனம். எனவே இது கண்டிக்கத் தக்கது.
எழில் உங்கள் பதிவுகள் எனக்கு மெயிலில் வரச்செய்யுங்கள்.