Sunday, August 07, 2011

பாதிரியார் ராஜரத்தினம் மீது தாக்கலான குற்றப்பத்திரிகையை விசாரணை கோர்ட்டிற்கு மாற்ற இடைக்கால தடை

பாதிரியார் ராஜரத்தினம் மீது தாக்கலான குற்றப்பத்திரிகையை விசாரணை கோர்ட்டிற்கு மாற்ற இடைக்கால தடை


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி(36). இவரை கற்பழித்ததாக பாதிரியார் ராஜரத்தினம் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது திருச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜூன் 20ல் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.




இந்நிலையில் பிளாரன்ஸ்மேரி ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

’’ நான் கொடுத்த புகாரில் பதிவான வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக உள்ளது. வழக்கில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தற்போதைய குற்றப்பத்திரிகையை விசாரணை கோர்ட்டிற்கு அனுப்ப தடை விதிக்க வேண்டும்’’ என கோரினார்.


மனு நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் என்.சங்கர்கணேஷ் ஆஜரானார். அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் ராஜராஜன் ஆஜரானார்.


குற்றப்பத்திரிகையை விசாரணை கோர்ட்டுக்கு மாற்ற நீதிபதி இடைக்கால தடை விதித்தார். மனு குறித்து பதிலளிக்க இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.

No comments: