Monday, August 01, 2011

இளம்பெண்ணுடன் பாதிரியார் மாயம்கிறிஸ்தவ ஆலயத்திற்கு தீ வைப்பு

இளம்பெண்ணுடன் பாதிரியார் மாயம்கிறிஸ்தவ ஆலயத்திற்கு தீ வைப்பு

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2011,01:08 IST
கருத்துகள் (9) கருத்தை பதிவு செய்ய


புளியங்குடி:புளியங்குடி அருகே இளம்பெண்ணுடன் பாதிரியார் மாயமானதையடுத்து கிறிஸ்துவ ஆலயத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புளியங்குடி அருகேயுள்ளது நெற்கட்டும்செவல் கிராமம். இங்கு சுமார் 200க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் கடந்த மூன்று மாதங்களாக நாகர்கோவிலை சேர்ந்த மோகன்தாஸ் (29) என்பவர் பாதிரியாராக இருந்து வருகிறார். அவர் தேவாலயத்தின் அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த ஆலயத்தில் திருமணம், ஞானஸ்நானம் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மதியழகன் மகள் பரிமளாகாந்தி (22) தேவாலயத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில் பாதிரியாருக்கும் பரிமளாகாந்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி இருவரும் திடீரென மாயமாயினர். இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இச்சூழ்நிலையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. இதில் தேவாலயத்தில் இருந்த பிளாஸ்டிக் சேர்கள், திரை மற்றும் பொருட்கள் தீயில் எரிந்தன. இதுகுறித்து புளியங்குடி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு புளியங்குடி டி.எஸ்.பி. ஜமீம், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய பரிமளாகாந்தி தந்தை மதியழகனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தேவாலயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.CUMBUM P.T.MURUGAN - trichy,இந்தியா
2011-08-01 07:44:24 IST Report Abuse
சின்ன பசங்களை பாதிரியாராக போட்டால், இப்படித்தான் தடுமாற்றம் வரும். இதற்கு பாவ மன்னிப்பு , இல்லவே இல்லை.
Share this comment
kaarigan albert - berlin,ஜெர்மனி
2011-08-01 06:30:03 IST Report Abuse
கிருஸ்துவ பாதிரியார் என்று நீங்கள் போட்டிருப்பது தவறு.கத்தோலிக்க குருமார்களைத்தான் பாதிரியார் என்று அழைப்பார்கள். இதுபோல குடும்பத்தோடு கூத்தடிக்கும் சாமியார்களை போதகர்கள் என்று சொல்லுங்கள்.இவர்கள் பெண்டிகொஸ்ட் என்று அழைக்கப்படும் ஒருவித தீவிர மத பிரிவை சேர்ந்தவர்கள்.இவர்கள் செய்யும் அட்டூளியங்களால்தான் கிருஸ்துவ மதத்திற்கே கெட்ட பெயர் வருகிறது.
 • Rate it:
 • 18
 •  
 • 11
Share this comment
AA Jeyaseelan - sivagangai,இந்தியா
2011-07-31 09:42:52 IST Report Abuse
மோட்சத்துக்கு பதில் "சொர்க்கத்தை" காட்டுறது தான் புது ஸ்டைல் போல இருக்கு.
 • Rate it:
 • 33
 •  
 • 7
Share this comment
Samuvel Mdu S - madurai,இந்தியா
2011-07-31 08:37:28 IST Report Abuse
இந்த சாமியார்களின் அட்டகாசம் தாங்கமுடியல பா
 • Rate it:
 • 28
 •  
 • 1
Share this comment
madurai virumaandi - san jose, ca,யூ.எஸ்.ஏ
2011-07-31 02:23:29 IST Report Abuse
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் இறைவன் இருக்கிறானோ, இல்லையோ... !! அவன் பெயரைச் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுபவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்..!! கடவுள் வேறே ஏதோ வேளையிலே பிசியா இருக்காருன்னு நெனைக்கிறேன்...!!
 • Rate it:
 • 37
 •  
 • 1
Share this comment
parasuraman sharma - jeddah,சவுதி அரேபியா
2011-07-31 01:31:41 IST Report Abuse
எந்த அளவுக்கு புலனடக்கம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவை தீனி கேட்கும்! இதில் சங்கராச்சாரியார் என்ன??? பாதிரியார் என்ன?
 • Rate it:
 • 34
 •  
 • 6
Share this comment
Pamaran A - chennai,இந்தியா
2011-07-30 07:35:08 IST Report Abuse
நமது நாட்டில் நித்யானந்தா-களுக்கு பஞ்சமில்லை போலும். எல்லா மதத்திலும் பரவி கிடக்கின்றனர்.
 • Rate it:
 • 42
 •  
 • 2
Share this comment
Govind - delhi,இந்தியா
2011-07-30 04:46:28 IST Report Abuse
மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ ?
 • Rate it:
 • 28
 •  
 • 1
Share this comment
madurai virumaandi - san jose, ca,யூ.எஸ்.ஏ
2011-07-31 02:26:52 IST Report Abuse
காதலில் தோற்றுப் போய் தாடி வளர்த்து "சாமியார்" ஆறது ஓல்டு ஸ்டைல்... !! சாமியாரா வேஷம் போட்டு பல பேருக்கு மோட்சத்துக்கு பதில் "சொர்க்கத்தை" காட்டுறது தான் புது ஸ்டைல் போல இருக்கு..!! ...
 • Rate it:
 • 44
 •  
 • 0
Share this comment

No comments: