மாணவிகள் உள்பட 15 பெண்கள் பலாத்காரம் – என்ஜிஓ அலவலர் மீது பட்டதாரி பெண் புகார்
செவ்வாய், ஆகஸ்ட், 16, 2011, 14:18
1
மாணவிகள் உள்பட 15 பெண்கள் பலாத்காரம் – என்ஜிஓ அலவலர் மீது பட்டதாரி பெண் புகார்
வேலூர், ஆக.16: கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 15 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, படம் எடுத்து மிரட்டுவதாக தொண்டு நிறுவன அலுவலர் ஒருவர் மீது பட்டதாரிப் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
வேலூர் டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு அணைக்கட்டு அருகே உள்ள ஊனை வாணியம்பாடியை சேர்ந்த செண்பகவள்ளி என்ற பெண் டிஐஜியை சந்தித்து புகார் அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஒரு தொண்டு நிறுவனத்தின் வேலூர் கிளை நிர்வாகி ஒருவர் அந்த தொண்டு நிறுவனத்தில் என்னை வேலைக்கு அமர்த்தினார். பின்னர் சென்னைக்கு ஒருநாள் அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை பலாத்காரம் செய்தார்.
பின்னர் அந்த தொண்டு நிறுவன அலுவலர் தன்னுடைய அமைப்பை விரிவாக்கம் செய்வதற்கு என்னுடைய தோழிகளை அழைத்து வரச் சொன்னார். அதை நம்பிய நான் 2 கல்லூரி மாணவிகள் உள்பட 15 பெண்களை தொண்டு நிறுவன அலுவலருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். பிறகு அவரும் வேலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் நிர்வாகியும் சேர்ந்து அந்த பெண்களை பலமுறை பாலியல் பலத்காரம் செய்துள்ளனர்.
மேலும் அதை கேமராவில் பதிவு செய்து வைத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாகவும் மிரட்டினர். அதன்பிறகு நான் அவருடைய தொடர்பை துண்டித்துக் கொண்டேன். இதற்கிடையே எனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் நடந்தது. அதைத் தெரிந்து கொண்டு தொண்டு நிறுவன அலுவலர் நீ பள்ளி நிர்வாகியுடன் செல் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து நான் கடந்த 2-ந்தேதி டி.ஐ.ஜி.யிடம் புகார் கொடுக்க செல்ல இருப்பதை அறிந்து அந்த நிறுவன அலுவலரும், மற்றும் 4 பேரும் புகார் கொடுத்தால் உன் முகத்தில் ஆசிட் வீசி, கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினார்கள் என்று செண்பகவள்ளி கூறினார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்தப் புகார் இன்னும் விசாரணை நிலையில் இருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கை இன்னும் பதிவுசெய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment