Thursday, August 25, 2011

பாகிஸ்தானில் பள்ளிக்கூடத்தை அமைதி மார்க்கத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்ப்பு

பாகிஸ்தானில் பள்ளிக்கட்டடம் குண்டு வைத்து தகர்ப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 04:04.47 மு.ப GMT ]

பாகிஸ்தானில் பள்ளிக் கட்டடத்தை தலிபான் தீவிரவாதிகள் வெடி குண்டு வைத்து தகர்த்தனர்.
இச்சம்பவத்தில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் வட மேற்குப் பகுதியில் பழங்குயிடின மக்கள் வசிக்கும் ஹைபர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பள்ளிக்கட்டடம் ஒன்றின் முன்பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் வெடி குண்டுகளை மறைத்துவைத்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு அக் குண்டுகள் வெடித்துச் சிதறியதில் பள்ளிக் கட்டடம் அடியோடு இடிந்து விழுந்தது.

இரவு நேரமாதலால் பள்ளிகளில் குழந்தைகள் இல்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் மக்கள் நடமாட்டமில்லாததால் இச்சம்பவத்தால் உயிரிழப்பு ஏதும் இல்லை என உள்ளூர் அரசு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதி முழுவதிலும் பொலிசார் தீவிர சோதனை நடத்தினர். இந்தநாசவேலையில் ஈடுபட்டோரை கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டில் இதுவரை ஹைபர் பகுதியில் 55 அரசு பள்ளி கட்டடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: