Thursday, December 28, 2006

அன்பு சகோதரர் மரைகாயர்

அன்பு சகோதரர் மரைகாயர் கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டிருக்கிறார்.
//ஒரு நண்பர் என்கிட்ட சொன்னார், "உங்க வீட்டை விட என் வீடு உயர்வானது. அதனால உங்க வீட்டை விட்டுட்டு எங்க வீட்டுக்கு வந்துடுங்க"

'சரி, அதையும்தான் பாக்கலாமே'ன்னு அவர் வீட்டை பாக்குறதுக்கு என்னை அழைச்சுகிட்டு போகச் சொன்னேன்.

ஒரு நாள் அவர் என்னை கூட்டிக்கொண்டு போனார். போய்ப் பார்த்தால்....
அவர் வீடு என்று சுட்டிக் காட்டிய இடத்தில் பொட்டல்வெளிதான் இருந்தது! ஆமாங்க. வெறும் திடல்.

"என்ன நண்பரே? வீடுன்னு சொல்லி திடலை காட்டுறீங்களே?" என்றேன்.

"இதுதாங்க வீடு. இதை நீங்க கண்ணால பார்க்க முடியாது. உணரத்தான் முடியும்"னாரு அந்த நண்பர்.

"வீடுன்னா கதவு, சுவர், கூரை இதெல்லாம் இருக்கணுமே?" - இது நான்.

"ஏன் நாலு சுவத்துக்குள்ளேயே கட்டுப்பெட்டித் தனமா அடைஞ்சு கிடக்குறீங்க? இங்க அந்தக் கட்டுப்பாடெல்லாம் கிடையாது. நீங்க சுதந்திரமா இருக்கலாம்" - அந்த நண்பர்//


இரண்டு விஷயங்களை குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.

முதலாவது உணரவேண்டியது. இரண்டாவது அதற்கான வழி.

வழிகள் தெளிவானவை. அவைகள் யோகங்கள். கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் இன்னும்பல ஆகியவை இறையுணர்வை அடைவதற்கான வழிகள்

பலயோகங்களுக்கு மிகவும் கடினமான இறுகப்பட்ட அமைப்புகளும் உருவங்களும் உண்டு. மிகவும் துல்லியமான ஆகம விதிகளோடு கோவில்கள் கட்டப்படுகின்றன. மிகவும் துல்லியமான ஆகம விதிகளோடு விக்கிரகங்கள் வடிக்கப்படுகின்றன. இவையெல்லாம் கண்ணுக்குத் தெரியாதவையா என்ன? கோவிலும் அதனைச் சார்ந்த அமைப்பும் பொட்டல்காடா என்ன?

கோவிலில் எல்லா கலைகளும் இருப்பதை பாருங்கள். இசை ஒலிக்கிறது. ஓவியம் இருக்கிறது. சிற்பம் இருக்கிறது. கட்டிடக்கலை இருக்கிறது. தோட்டக்கலை இருக்கிறது. சமையல் கலை இருக்கிறது. உபன்யாச கலை இருக்கிறது. அலங்கார கலை இருக்கிறது. நாட்டியக்கலை இருக்கிறது.

இது பொட்டல்காடா என்ன?

ஆனால் சுதந்திரம் இருக்கிறது. எந்த யோகத்தை எவன் பயில வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. கர்மயோகம், ஞானயோகம் பக்தி யோகம் என்று தனக்கு விரும்பிய தனக்கு இசைந்த யோகத்தை பயின்று இறையுணர்வை பெற முடியும்.

//"அப்படின்னா கண்ட மிருகங்களும் வேஷம் போட்டுட்டு வந்து உங்களை தாக்குனா என்ன செய்வீங்க?"

"அதுங்கள்லாம் எங்களை வந்து தாக்குன பிறகு அதை நாங்கள் அடையாளம் கண்டு உதாசீனம் செய்து விடுவோம்"
//

இப்படிப்பட்ட கலாச்சாரத்தை பல மிருகங்கள் தாக்கியிருக்கின்றன. இன்னமும் தாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த கும்பலில் இந்த கலாச்சாரத்தை புரிந்துகொள்ளாத இந்துக்களும் சேர்த்திதான். ஆனால், இந்த கட்டிடமும் அதன் அமைப்பும் அசாதாரணமானது. இன்னமும் தாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை பலரும் அடையாளம் கண்டுகொண்டுதான் வருகிறார்கள். அதற்கெல்லாம் இது அசராது. ஏனெனில், இது வாழ வைக்கும் கலாச்சாரம். அழிக்கும் கலாச்சாரம் அல்ல. இதன் தேவைதான் மக்களுக்கு இருக்கிறதே தவிர, இது தன்னை காப்பாற்று என்று மக்களிடம் இறைஞ்சிக்கொண்டிருக்கவில்லை.

//"இந்த 'வீட்டுக்கு' பெரிய மனுசங்கன்னு யாரும் இருக்காங்களா? உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தா, ஆலோசனை வேணும்னா யார் கிட்டே கேப்பீங்க?"

"அதெல்லாம் தேவையேயில்லை. பல்வேறு பாதைகள் இருக்கின்றன. அவற்றில் உங்களதை தேர்ந்தெடுத்துக்கொள்வது உங்களது சுதந்திரம். உங்களது ஸ்வதர்மம்."//

இந்த வீட்டுக்கு பெரிய மனுஷர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காலம் காலமாக எழுதிவைத்திருக்கும் பல்வேறு ஆன்மீக புத்தகங்களும் அந்த ஆன்மீக புத்தகங்களிலிருந்து வியாக்கியானம் சொல்லும் கற்றறிந்தவர்களும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறார்கள்.

//"ஒரே வீடுன்னு சொல்றீங்க. ஆனா, அங்கங்கே தனித்தனி கூட்டமா இருக்காங்களே, அவங்கள்லாம் யாரு? ஒரு கூட்டத்தில இருந்து வர்றவரை இன்னொரு கூட்டத்துல சேர்த்துக்க மாட்டேங்குறாங்களே, ஏன்?"

"அவங்க அப்படித்தான். அவங்களையும் இந்த வீட்டையும் ஏன் இணைச்சு பார்க்கணும்?"
//

இந்துமதம் எல்லோரையும் ஒரே குலோன்களாக பார்ப்பதில்லை. பல்வேறு மலர்கள் ஒரு தோட்டத்தில் இருக்கின்றன. அந்த தோட்டத்தில் பல்வேறு மலர்கள் இருப்பதுதான் அழகு. ஒருவர் தனக்கு ரோஜா பிடிக்கும் என்பதற்காக, உலகத்தில் உள்ள எல்லா மலர்களையும் அழித்துவிட்டு ரோஜா மட்டுமே இருக்கவேண்டும் என்று சொன்னால், அவரை கிறுக்கன் என்று அழைக்க மாட்டீர்களா?

அது போலத்தான் இதுவும். மனிதர்களும் மனிதக்கூட்டங்களும் பலவகையானவை. அவர்களது கலாச்சாரமும் மொழியும் பழக்க வழக்கங்களும் மதிக்கப்பட வேண்டும். இத்தாலிய குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக வரும் சில வழிமுறைகள், சில சமையல் குறிப்புகள், சில பண்டிகைகள் இருக்கும். நாடார் குடும்பங்களிலும் கொண்டாட்டங்கள், சில சமையல்கள், சில வழிமுறைகள் இருக்கும். செட்டிநாட்டு குடும்பங்களில் சமையல் வித்தியாசமாக இருக்கும். ஆனால், எல்லோரையும் அழித்து எல்லோரும் இத்தாலிய குடும்பங்கள் மாதிரித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வது மற்ற கலாச்சாரங்களை மதிக்காத ஒரு அநாகரிகம்.

அதற்காக ஜாதி கடந்து திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. உங்களுக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தால், அந்த பெண்ணுக்கு உங்களை பிடித்திருந்தால் தாராளமாக திருமணம் செய்துகொள்ளுங்கள். அப்படி வேறு ஜாதிகளில் திருமணம் செய்துகொண்டு அந்த ஜாதிநபராக மாறிக்கொண்டவர்களையும் தெரியும். வேறு மதம் வேறு ஜாதியிலிருந்து இந்துஜாதியாகி வாழ்பவர்களையும் தெரியும். எந்த நீதிமன்றமும் அவர்களை தடைசெய்யாது.

//"சரி இந்த வீட்டுக்கு ஒருத்தர் புதுசா வந்தா அவரை எந்தக் கூட்டத்துல சேர்ப்பீங்க?"

"ஏன் அவர் ஒரு கூட்டத்துல போய் சேரணும்? அவரு தனியாவே இருந்துக்கலாமே?"

எனக்கு ஒன்னுமே புரியலை. உங்களுக்கு?//


நீங்கள் மதம் மாறி இந்து மரைக்காயராக ஆனால், யாருக்கு என்ன பிரச்னை? உங்கள் மனைவியாரும் விரும்பினால், நீங்கள் குடும்பத்தோடு இந்து மதம் சேர்ந்து இந்து மரைக்காயராக இருப்பதில் யாருக்கு என்ன பிரச்னை இருக்க முடியும்? உங்கள் கலாச்சாரமும் உங்கள் மொழியும் உங்களுக்கு முக்கியமானவை அல்லவா? அதனை ஏன் மதம் மாறியதற்காக விட்டுக்கொடுக்க வேண்டும்?

7 comments:

Anonymous said...

//இப்படிப்பட்ட கலாச்சாரத்தை பல மிருகங்கள் தாக்கியிருக்கின்றன. இன்னமும் தாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த கும்பலில் இந்த கலாச்சாரத்தை புரிந்துகொள்ளாத இந்துக்களும் சேர்த்திதான்.//

உண்மையான வார்த்தை

Anonymous said...

brilliant. People who can't argue logically try to use analogy and try to fool people who are even incapable of analogical reasoning on their own. Replying to them through proper analogy probably shows up the tawdry reasoning for what it is- bankruptcy of imagination, bankruptcy of culture, bankruptcy of tolerance and well basiclly nothing but an empty head full of jargons and hatred toward the unusual, vibrant and lively. But to expect someone whose religion thinks music is satanic, women are to be boxed up to protect men from their 'animality' to understand the need for multiplicity and variety in life is a bit of an overoptimism. They do not understand that their religion does not really trust either man or woman or their desire for life lived at its aesthetic best, and considers all human beings as potentially beasts. The lack of imagination is quite evident in the way they wiped out all other civilizations, cultures and cloned everyone in their own desert culture. It is ironic that a religion which was born among nomadic camel riders, in a desert is accusing a religion rooted in the lush vibrantly alive tropical fertile land as empty thidal. How poor can this person's reasoning powers? How much of a hatred of their own nation, people and culture should have seeped in his imagination to make him talk like this? How much of a poverty of imagination should be there to even think of such analogies to talk of Hinduism like this? Or is it a wilful ignorance that talks like this?

எழில் said...

நன்றி அனானி
நன்றி ஆங்கிலத்தில் பதிலெழுதிய அனானி
//But to expect someone whose religion thinks music is satanic, women are to be boxed up to protect men from their 'animality' to understand the need for multiplicity and variety in life is a bit of an overoptimism.//

We are all humans. We can always understand. That is where our hope resides.

Anonymous said...

//கோவிலில் எல்லா கலைகளும் இருப்பதை பாருங்கள். இசை ஒலிக்கிறது. ஓவியம் இருக்கிறது. சிற்பம் இருக்கிறது. கட்டிடக்கலை இருக்கிறது. தோட்டக்கலை இருக்கிறது. சமையல் கலை இருக்கிறது. உபன்யாச கலை இருக்கிறது. அலங்கார கலை இருக்கிறது. நாட்டியக்கலை இருக்கிறது.

இது பொட்டல்காடா என்ன?//

வெறுப்பு கக்கும் பதிவுகளுக்கும் அன்பே பதிலாக தரும் உங்களது பண்பு பாராட்டுக்குறியது.

எதிர்காலம் சிறப்புடைத்து என்பது உங்களது பதிவை படிக்கும்போது தோன்றுகிறது.

நன்று

Anonymous said...

நல்ல பதிவு

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

இஸ்லாமும் கிறிஸ்துவமும் தொட்ட எந்த ஒரு நாட்டிலும் பாரம்பரிய மதம் வாழ்ந்ததில்லை.

இந்தியாவைத் தவிர.

எகிப்திய மதம் அழிந்தது. ஜொராஸ்டிரிய மதம் அழிந்தது. அமெரிக்க பழங்குடிகளின் மதம் அழிந்தது. மாயன் சமூகம் அழிந்தது. கிழக்கே பிலிப்பைன்ஸிலிருந்து ஹவாயிலிருந்து ஆப்பிரிக்க பழங்குடி மதங்கள் வரைக்கும் எந்த மதமும் இந்த மதங்களின் ஆக்கிரமிப்பில் உயிர் பிழைக்கவில்லை.

ஆனால், இந்துமதம் மட்டும், ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு இந்த மதங்களுக்கு சவால் விட்டு நிமிர்ந்து நிற்கிறது.

இத்தனைக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சாரங்களுக்கு நடுவே, பல கோடி டாலர் பணத்துக்கு எதிராக, எந்த வித ஆக்கிரமிப்பு உணர்வும் இன்றி வந்தாரை வரவேற்று வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

தன்னுடைய சுயத்தை இழக்காமல், எத்தனையோ குரூரங்களையும் தாங்கிக்கொண்டு, மதம் மாறி தாயின் மார்பிலேயே எட்டி உதைக்கும் எத்தனையோ முன்னாள் இந்துக்களையும் அன்போடு அரவணைத்துக்கொண்டு தாய் போல பாதுகாத்து வளர்க்கிறது. எங்கெங்கிருந்தோ முஸ்லீம்களால் துரத்தப்பட்ட ஜொராஸ்டிரியர்களையும், சிரிய கிறிஸ்துவர்களையும், யூதர்களையும் வரவேற்று அரவணைத்து அவர்களுக்கு வாழ வசதி செய்து தருகிறது.

இது தெய்வீக மதம் என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்?

தொடர்ந்து எழுதுங்கள் எழில்.

இது வளமையான தோட்டம். இங்கே அன்புதான் விளையும். அதற்கு உதாரணம் நீங்கள்.

இங்கே வெறுப்பை விதைத்தாலும் விளைவது பொன்போன்ற அன்புதான்.

இது கடவுளின் பூமி.

கால்கரி சிவா said...

//இங்கே வெறுப்பை விதைத்தாலும் விளைவது பொன்போன்ற அன்புதான்.

இது கடவுளின் பூமி.
//

மிக விவர அனானியாக இருப்பார் போலிருக்கிறது.

இந்த வரிகள் சிலிர்க்க வைக்கின்றன