பாரதிய ஜனதா கட்சி, சிவசேனா தவிர வேறெந்த கட்சியும் பாரதப்பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை ஆட்சேபிக்கவில்லை.
அரசாங்கத்தில் இருப்பதால், திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் பாரத பிரதமர் கூறியதை அங்கீகரித்துள்ளன.
மூன்றாம் அணியில் வரும் சமாஜ்வாதி கட்சி, அதிமுக, தெலுங்கு தேசம் ஆகியவையும் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கூட பாரதிய ஜனதாவை ஆதரிக்கவில்லை.
BJP stalls Parliament over PM's remark
ஒதுக்கி விடப்பட்ட பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் தனியாக புலம்பிக்கொண்டிருக்கின்றன.
ஏதோ இப்படி கத்துவதால், இந்துக்கள் ஓட்டு அவர்களுக்கு கிடைக்கும் என்று நினைத்து செய்துகொண்டிருக்கிறார்களோ என்னவோ?
பாவம் பாஜக. சமாஜ்வாதி கட்சி, அதிமுக, திமுக, தெலுங்கு தேசம் எல்லாம் முழுமையாக முஸ்லீம்களாலா நடத்தப்படுகின்றன? அவைகளில் பெரும்பான்மையும் இந்துக்கள்தானே?
பாஜகவும் இந்த கூட்டத்தோடு ஐக்கியமாகி முஸ்லீம்களுக்கு முன்னுரிமை என்று சொல்லிவிட்டு போகவேண்டியதுதானே? ஆட்சிக்கு வந்தால், பாஜகவும் சிவசேனாவும் அதைத்தானே செய்யப்போகிறார்கள்?
அப்புறம் என்ன வாய்ச்சவடால்? எல்லோரும் சமம் இந்த திருநாட்டில் என்று பாட்டுப்பாடுவதோடு நிறுத்திக்கொள்வது அனைவருக்கும் நலம்.
3 comments:
இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்பது தெரிந்ததுதான் என்றாலும் அதனை அடிக்கடி சொல்லிக்காட்ட தேவையில்லை என்றுதான் நானும் நினைக்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சியினரும் ஆட்சிக்கு வந்தால், முஸ்லீம்களுக்கு வாரிக்கொடுக்கத்தான் செய்வார்கள் என்பது உண்மைதான். தங்களுக்கு வந்திருக்கும் முஸ்லீம் விரோதி பட்டத்தை விலக்கிக்கொள்வதற்காக சென்ற முறை முயற்சித்தார்கள்.
உதாரணமாக, சென்ற முறை ஆட்சிக்கு வந்ததும், பணக்காரர்களே ஹஜ் யாத்திரை போய் கொண்டிருந்ததை மாற்றி, ஓரளவு ஏழைகளும் ஹஜ் யாத்திரை செல்ல, இவ்வளவு பணத்துக்கு மேல் சொத்தாக இருப்பவர்கள் ஹஜ் மானியம் பெறமுடியாது என்று அறிவித்தார்கள்.
ஆனால், காங்கிரஸ் அரசு வந்ததும் செய்த முதல் வேலை, ஹஜ் மானிய முஸ்லீம்களுக்கு இருந்த சொத்து சீலிஙை நீக்கி பணக்காரர்கள் மீண்டும் எல்லாம் ஹ்ஜ் யாத்திரைபணத்தையும் எடுத்துக்கொள்ள வைத்தது.
பாரதப்பிரதமர் திரு மன்மோகன் சிங்கின் முழு பேச்சு
முழு பேச்சு
"We will have to devise innovative plans to ensure that minorities, particularly the Muslim minority, are empowered to share equitably in the fruits of development. They must have the first claim on resources. "
Post a Comment