Friday, December 22, 2006

தலித்துகள் பௌத்தர்களாவது சரியானதா?

Dalits likely to convert to Buddhism

Kendrapara (Orissa), Dec. 21 (PTI): Despite peace brokered by the administration over the vexed issue of Dalit entry into a Hindu temple at Keredagada in this district, about 1000 Dalits have decided to embrace "some other tolerant religion."

Former Union Minister and prominent Dalit leader Bhajaman Behera said at a press conference here yesterday that these Dalits were likely to embrace Buddhism.

He said they were likely to file affidavits with the district administration on January 3 expressing their intention to change their faith as required under the Orissa Freedom of Religion Act.

The Dalits, who included 12 families from Keredagada village, had decided to renounce Hinduism and embrace some other tolerant religion in protest against the "continued humiliation being heaped on them" over their right to have "darshan" of the deities.

The news conference was jointly organised by the newly- formed political outfit Orissa Mukti Morcha, headed by Behera, Ambedkar Mission and Republican Youth and Students Federation.

Behera said the peace formula arrived at by the administration with involvement of senior state officials on December 17 last was not acceptable to the Dalits.

According to consensus reached in the presence of Revenue Divisional Commissioner (Central Range) Suresh Mohapatra, both Dalits and upper caste Hindus were conferred the right to "darshan" at the 300-year-old Jagannath temple from the first step of the sanctum sanctorum.


Also, a barricaded structure would prevent people from both groups to enter the sanctum sanctorum. Besides, the outer wall of the temple with nine holes through which Dalits were earlier allowed to peep at the deities would be demolished and replaced by a new gate through which all devotees would enter.



Behera, accompanied by Ambedkar mission chief Bidyadhar Dehury and RYSF President Ashok Mallick, alleged that the spirit of the order on the issue on December 5 was violated.

Alleging that majority of Dalits were not agreeable to the decision arrived at on December 17, Behera claimed that most of them were now disillusioned and not inclined to assert their religious rights.

Regardless of the High Court ruling, they apprehended confrontation as their demand for entry into the shrine was "not taken in the right spirit by the upper castes," the former Union Minister said.

Meanwhile, another group of Dalits from Keredagada village expressed their happiness over the peace brokered by the administration.

Asserting that they would abide by it, Rabindra Sethi, Rajkishore Muduli and Akshyay Mallick told mediapersons at Bhubaneswar that they had accepted the compromise formula and were keen that construction be completed by December 31.

__
இப்படி ஒரு வழக்கம் இருப்பது தெரிந்திருந்தால், நானே பயணம் செய்து ஒரிஸ்ஸா போய் தர்ணா பண்ணியிருப்பேன்.

அதென்ன தலித்துகளை வெளியே நிறுத்தி தரிசனம் கொடுப்பது?

இந்த வழக்கத்தை எதிர்த்து அவர்கள் கோர்ட்டுக்கு போனாலும் சரி, அல்லது அவர்கள் தர்ணா பண்ணினாலும் சரி. தலித்துகள் பக்கம்தான் நியாயம்

--
ஒரு காலத்தில் குறிப்பிட்ட ஜாதிகளுக்கு உரியதாக கோவில்கள் இருந்தன. அந்தந்த ஜாதிகள் தங்கள் தங்களுக்கு கோவில்கள் என்று கட்டிக்கொண்டிருந்தார்கள். தங்கள் ஜாதிகளுக்கு என்று இருக்கும் கோவில்களுக்கு பலர் தங்களது சொத்துக்களை எழுதி வைத்தார்கள். அந்த சொத்துக்களையும் நிலங்களையும் அந்தந்த ஜாதியினர் மேற்பார்வை செய்துகொண்டார்கள்.

அப்படிப்பட்ட கோவில்களில் அந்தந்த ஜாதியினருக்கு முதல்மரியாதை வழங்கப்பட்டது.

இப்போது குறிப்பிட்ட ஜாதிகளுக்கு என்று கோவில்கள் இருப்பது நியாயமல்ல. இது ஜனநாயக யுகம். இன்று எல்லோருக்கும் இந்த கோவில்களில் சம பாத்தியதை உண்டு என்றுதான் கருதுகிறேன். கோவில் அந்த ஜாதியினருக்கு சொந்தமானதாக இருந்தாலும், இன்னாரை உள்ளே விடமாட்டேன் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

ஒரு தனிநபர் பௌத்தமதத்துக்கு செல்வது சரியானதா தவறானதா என்பதை நான் பேசவில்லை. அது அவரவர் விருப்பம். அவருக்கு இந்து தத்துவங்கள் பிடித்திருந்தால் தன்னை இந்து என்று கூறிக்கொள்ளட்டும். தனக்கு இஸ்லாமிய தத்துவங்கள் பிடித்திருந்தால் தன்னை இஸ்லாமியர் என்று கூறிக்கொள்ளட்டும்.

ஆனால், ஒரு சமூக வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக "நான் கட்சி மாறிவிடுவேன்" என்று பயமுறுத்துவது போல மதத்தை பாவிப்பது சரியல்ல என்பது என் கருத்து.

தலித்துகள் பௌத்த மதம் சென்றுவிட்டால், தலித்துகளை உள்ளே விடமாட்டேன் என்று சொன்னவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். அதற்கு அனுமதிக்கவே கூடாது.

உரிமைகளுக்காக போராட வேண்டும்.

ஓடுவது அழகல்ல.

12 comments:

கால்கரி சிவா said...

//உரிமைகளுக்காக போராட வேண்டும்.

ஓடுவது அழகல்ல.//


இதில் நான் தலிதுகள் பக்கம்தான். யார் அந்த முட்டாள் இந்துக்கள் அவர்களுக்கு தண்டனை வழங்கி கோவிலை விட்டு வெளியேற்றவேண்டும். கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை அறியாத மூடர்கள் கடவுளின் அருகில் இருப்பது அவமானம்

Anonymous said...

//ஒரு காலத்தில் குறிப்பிட்ட ஜாதிகளுக்கு உரியதாக கோவில்கள் இருந்தன. //

NOT ONCE! SOFAR THE SAME CONDITION EMAINS IN MOST OF THE TEMPLES.

//தலித்துகள் பௌத்த மதம் சென்றுவிட்டால், தலித்துகளை உள்ளே விடமாட்டேன் என்று சொன்னவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். அதற்கு அனுமதிக்கவே கூடாது. உரிமைகளுக்காக போராட வேண்டும்.//

WHY DALIT SHOULD SUFFER FROM THE UPPER CASTE. THE BEST SOLUTUIN IS GET RID FROM THE ORIGIN OF THE SUFFER.

MY OVERALL SUGGESTION IS IF YOU STUPID HINDU REALIZED THE ROUTE CAUSE, YOU COULD HAVE SAVED AT LEAST 20 MILLION DALITS THOSE WHO GAVE UP BLOODY HINDUISM

Anonymous said...

//தலித்துகள் பௌத்தர்களாவது சரியானதா?//

of course it is right decision! Good bye to Hinduism! Bye! Bye!!

Anonymous said...

இஸ்லாம் கிருத்தவம் என்ற அன்னிய மதங்களுக்கு மாறாமல் இருந்தால் சரி.

இந்த "அப்னு இப்னு லப்னு திப்னு" ன்னு வாயில் நுளையாத பெயர்களை வைக்காமல் பௌத்தத்திற்கு மாறுவதால் அழகான சமஸ்கிருதப் பெயர்கள் வைத்துக் கொள்வார்கள்.

எழில் said...

ஒரு பிரச்னையைக் கண்டு ஓடுவது கோழைத்தனம்.
சம உரிமைக்காக போராட வேண்டுமே ஒழிய, பிரச்னையிலிருந்து ஓடுகிறேன் என்பது தீர்வாகாது.

இந்த பிரச்னை இந்தியாவில் மட்டுமல்ல, இந்து மதத்தில் மட்டுமல்ல எந்த மதத்திலும் எந்த நாட்டிலும் வரலாம்.

கிறிஸ்துவத்திலும் சாதி ஒடுக்குமுறை வரலாம். வெள்ளை இன ஒடுக்குமுறை வரலாம். வெள்ளை இன ஒடுக்குமுறை இருந்தது. சாதி ஒடுக்குமுறை எனக்கு தெரிந்தே கிறிஸ்துவத்தில் இருக்கிறது.

இஸ்லாமியர்களை பற்றி எனக்கு தெரியாது. அவர்களோடு பழகியதில்லை. இஸ்லாமிலும் ஒடுக்குமுறை வரலாம். ஏற்கெனவே இருக்கிறது என்று நேச குமார் கூறுகிறார்.

இன்றைக்கு பிரச்னையைக் கண்டு பயந்து ஓடினால், தலித்துகளை கண்டு யாரும் மதிக்க மாட்டார்கள்.

கிறிஸ்துவத்தில் இந்த பிரச்னை இருந்தால் என்ன செய்வது?

அங்கிருந்தும் ஓடப்போகிறோமா? இஸ்லாமில் இந்த பிரச்னை இருந்தால் அங்கிருந்தும் ஓடப்போகிறோமா?

பிரச்னை என்பதால் அந்த மதத்துக்கு ஓடுகிறேன் இந்த மதத்துக்கு ஓடுகிறேன் என்று ஓடியவர்கள் கோழைகள்

மரியாதை வேண்டும் என்று கேட்பவனுக்குத்தான் மரியாதை கிடைக்கும்.

சிறில் அலெக்ஸ் said...

//மரியாதை வேண்டும் என்று கேட்பவனுக்குத்தான் மரியாதை கிடைக்கும்.//

நீ யாருடா எனக்கு மரியாத கொடுக்கிறதுன்னு கேட்டா?

போராட்டங்கல் பலவைகைப்படும் எழில். இது ஒரு மறுப்பு போராட்டம்.

கூத்தாடி said...

இன்னமும் எல்லா ஊரிலும் குலதெய்வக் கோவில்கள் இரு சமுதாயத்துக்கோ அல்லது ஒரு குடுப்பத்துக்கோ சொந்தமாக இருக்கிறது .அதன் தினசரி செலவுகள் அந்த சமுதாய டிரஸ்டுகள் மூலமாகத் தான் நடைபெறுகிறது ..அந்த மாதிரியானக் கோவில்களில் யாரையும் உள்ளே விட மாட்டேன் எனப் பொதுவாகச் சொல்லமாட்டார்கள் ,ஆனால் தலித்துக்கள் பூசைப் பொருள் அல்லது அர்ச்சனை பொங்கல் போன்றவைகளை செய்ய அனுமதிக்க மாட்டார்கள் ..நானேப் பார்த்து இருக்கிறேன் ..அது அவர்களின் private கோவில் போலத் தான் செயல் படுவார்கள் .

இந்த மாதிரியானச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கலாம் ,கற்பிக்கவும் ஆள் இருக்கிறார்கள் .சில ஊர்களின் சர்சுகளிலும் இதே மாதிரியானப் பிரச்சினைகள் உண்டு என நண்பர் சொல்லியிருக்கிறார்..

//உரிமைகளுக்காக போராட வேண்டும்.

ஓடுவது அழகல்ல./

யாருடன் போராடுவது ? தலித்துகள் மதிப்புக்காக பெளத்ததிற்குப் போவது அந்த மதத்திற்கு அழகல்ல தான் ..
ஆனால் போராட வேண்டும் என்பது சரிதான் ,ஒரு சமூகத்தில் எந்த மதிப்பும் இல்லாமல் இழிந்த நிலையில் வைத்து இருப்பது சக இந்து சகோதரர்கள் தானே ..போரட்டத்தின் ஒரு வழி இந்த மிரட்டலாய் கூட இருக்கலாம் ..

சிவாவின் கருத்துதான் சரியானது .

//WHY DALIT SHOULD SUFFER FROM THE UPPER CASTE. THE BEST SOLUTUIN IS GET RID FROM THE ORIGIN OF THE SUFFER//

என்னத் தப்பு ?இந்து மதத்தின் மேல் அக்கறை உள்ளவர்கள் இந்த மாதிரியான அணுகுமுறை உள்ள உயர்சாதி இந்துக்களை நோக்கித் தான் போராட வேண்டும் .சொல்லுங்கள் எத்தனை முறை உயர் சாதி இந்துக்களை நோக்கி இந்து மத ஆர்வலர்கள் போராடியிருக்கின்றனர் .

எழில் said...

நன்றி சிறில் அலெக்ஸ்,

போராட்டங்கள் பலவகைப்படும் என்பதும் உண்மைதான். ஆனால், எதிராளிக்கு வெற்றி தருகிற மாதிரியான அணுகுமுறையை எப்படி போராட்டம் என்று சொல்வது?

தலித்துகளை கோவிலுக்குள் விடமாட்டேன் என்று சொன்னால், சரி நான் வேறொரு மதத்து கோவிலுக்கு போய்க்கொள்கிறேன் என்று சொன்னால் போராட்டமா அல்லது சுணக்கமா என்று சொல்லுங்கள்.

நான் கோவிலுக்குள் வருவேன். என்னை யார் நீ தடுக்க என்றல்லவா கேட்க வேண்டும்? சுணங்கி வேறொரு இடத்துக்கு போனால், வெற்றி யாருக்கு?

போராட்டத்தின் முடிவு அனைவரும் சமமாக கோவிலில் வணங்குவோம் என்பதாக இருக்க வேண்டுமே ஒழிய, சரி உன் கோவிலை நீ வைத்துக்கொள், நான் எனக்கு சர்ச் கட்டித்தரும் இன்னொருவரிடம் போகிறேன் என்றால், கோவிலுக்குள் வந்து நான் என் கடவுளை கும்பிடுவேன் என்பதற்கான கோரிக்கைக்கே அர்த்தம் இல்லையே?

சர்ச்சுக்கு போக விருப்பமுள்ளவர்கள் ஏன் கோவிலுக்கு வருகிறேன் என்று சொன்னார்கள் என்று கேட்டால் பதில் என்ன?

சீனு said...

//இதில் நான் தலிதுகள் பக்கம்தான். யார் அந்த முட்டாள் இந்துக்கள் அவர்களுக்கு தண்டனை வழங்கி கோவிலை விட்டு வெளியேற்றவேண்டும். கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை அறியாத மூடர்கள் கடவுளின் அருகில் இருப்பது அவமானம்//
மிகச் சரி சார்!

சீனு said...

//இதில் நான் தலிதுகள் பக்கம்தான். யார் அந்த முட்டாள் இந்துக்கள் அவர்களுக்கு தண்டனை வழங்கி கோவிலை விட்டு வெளியேற்றவேண்டும். கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை அறியாத மூடர்கள் கடவுளின் அருகில் இருப்பது அவமானம்//
மிகச் சரி சார்!

சீனு said...

//இதில் நான் தலிதுகள் பக்கம்தான். யார் அந்த முட்டாள் இந்துக்கள் அவர்களுக்கு தண்டனை வழங்கி கோவிலை விட்டு வெளியேற்றவேண்டும். கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை அறியாத மூடர்கள் கடவுளின் அருகில் இருப்பது அவமானம்//
மிகச் சரி சார்!

எழில் said...

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரிஸ்ஸா கோவிலின் so called "மேல்ஜாதிக்காரர்களுக்கு" எதிராக...

http://timesofindia.indiatimes.com/RSS_rips_into_temple_ban_on_Dalits/articleshow/1040404.cms

RSS rips into ban on Dalits entering temples
[ 3 Jan, 2007 1932hrs ISTINDIATIMES NEWS NETWORK ]


NEW DELHI: Following up on its radical call last year to train and appoint Dalits as priests in Hindu temples, the Rashtriya Swayamsevak Sangh (RSS) has severely condemned the barring of Dalits from a temple in Orissa recently.

An year-end editorial in the Sangh mouthpiece Panchjanya termed as unfortunate the discriminatory attitude of temple authorities at the Jagannath temple in Kerdagarh saying it was “shameful that even in 2006 there are temples where Dalits are disallowed ... Even God will desert the temple that Dalits cannot enter.”

The sanctum sanctorum of the temple was closed in mid-December with upper caste Hindus refusing to perform puja after three groups of Dalits, armed with a High Court order, entered the premises.

The entry of the Dalits into the temple put an end to a 250-year-old ban, but the upper caste Hindus immediately closed the temple down saying it had been “desecrated”. The imbroglio was later resolved by religious leaders, but deep-rooted resentment on both sides continues to simmer.

The editorial further states that after the intervention of several senior religious leaders, Dalits have been allowed to enter the Kerdagarh temple. However, there are two paths leading up to the area from where devotees offer prayers – one for the “so-called upper castes” and one for Dalits. This, it says, is wrong and has to be amended forthwith. “There should be one path for all Hindus.”

The RSS has castigated what it repeatedly calls the “so-called uppers castes” for their discriminatory ways saying they are in fact of the “lowest levels” for doing so. “Those who are against allowing Dalits inside temples are against the Hindu Samaj”, it states emphatically. “There should be no Hindu temple which discriminates against people on the basis of caste.”

Further, it says, “those Dalits who are being provoked to change their views through such incidents have to be assured that crores of Hindus are with them.

It has also come down strongly on leaders of the “Hindu Samaj” for allowing situations which political opportunists can exploit. “The moment this controversy happened, political vultures started fuelling it ... Upholders of the Hindu Samaj have to ensure they allow no incident to occur that can be used by political opportunists. Nor should there be occasion for such an issue going to court.” --a direct comment on the fact that Dalits had to approach the High Court for an order to enter the temple.

Orissa temples have for long been embroiled in controversies arising out of incidents of caste or communal discrimination. The Jagannath temple in Puri famously turned away the then Prime Minister Indira Gandhi for being married to a non-Hindu. She had to view the temple from a building across the road.