என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே!
மனித இனத்தைப் பற்றி இந்து மதத்தின் உயர்ந்த ரிஷிகளில் ஒருவர் கூறுகையில் ....
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் ...செல்லாஅ நின்ற இத்தாவிர சங்கமத்துளெல்லாப் பிறப்பும்
..
என்று பரிணாமவியலை உணர்ந்து பாடுகிறார்.
இந்துமதம் என்பது மற்ற மதங்களைப் போல இன்று நேற்றுப் பிறந்த மார்க்கமல்ல.. மாறாக இந்த பேரண்டம் தோன்றிய போதே அதுவும் தோன்றி விட்டது. ஒவ்வொரு காலத்திலும் இந்தமதத்தில் பெரும் ரிஷிகளும் ஞானிகளும் தோன்றி அதனைப் பிரகாசிக்கச் செய்து வந்தார்கள். இனிமேலும் இந்த இந்துமதத்தில் இறையருள் பெற்றவர்கள் வருவார்கள். ஒரு சில மதங்களில் இவர்தான் இறுதியானவர் அவர்தான் இறுதியானவர் என்றும், இவரை அனுப்பிய பின்னர் இறைவன் தன் வாயை மூடிக்கொண்டுவிட்டான் என்றும் சொல்லி கற்காலத்திலேயே சமுதாயத்தை வைத்திருக்கவும் வன்முறையை வளர்க்கவும் முயல்வார்கள். அது போலன்றி, அணுவிலும் பேரண்டத்திலும் உறையும் வரையறுக்க முடியாத இறையை வரையறுக்க முடியாது என்றே ஒப்புக்கொள்ளும் இந்துமதம், சமுதாயத்தில் அல்லன நீக்கி நல்லன போற்றும் ஞானியரையும் ரிஷிகளையும் ஒவ்வொரு காலத்திலும் இறையருளால் பெற்றே வந்திருக்கிறது. ஒரு சிலர் இந்தியாவுக்கு மட்டுமே உரியது இந்துமதம் என்றும் கூறுவார்கள். அது உண்மையல்ல. அகிலத்தார் அனைவருக்கும் பொதுவான மார்க்கம் தான் இந்துமதம்.
அதாவது இப்பிரபஞ்சம் அனைத்துக்கும் ஒரே இறை தான், அது அணுவிலிருந்து அண்டம் வரை யாவிலும் வியாபித்துள்லது. அதனை வரையறுக்கவோ, ஒரு புத்தகத்துக்குள் அடக்கிவிடவோ முடியாது. அப்படி அடக்கிவிட்டேன் என்று கூறும் மார்க்கங்கள் அஞ்ஞானத்தில் விழுந்து கிடக்கும் மனிதனின் உற்பத்திகள் தானே?
உலக சமயங்களைக் கற்பதால் நாம் அடையும் பெரிய இலாபம் யாதெனில் சமயங்களுக்கு மத்தியில் எத்தகைய வேற்றுமைகள் இருந்த போதிலும் அனைத்திலுமே அடிப்படை உண்மை ஒன்றாக இருப்பதைக் காண முடிகின்றது. இந்த அடிப்படை உண்மையின் மூலம் ஏற்படும் ஒற்றுமையானது சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற குரோதம், விரோதம், துவேசம் ஆகியவற்றைப் போக்கி சாத்வீகத்தை உண்டாக்கி மனிதனை மனிதப் புனிதனாக ஆக்கும் நிலையைக் காண முடிகின்றது. தான் என்னும் அகங்காரத்தினை விலக்கி, தான் உருவாக்கிய மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, தான் நம்பும் மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, யாரை வணங்கினாலும் மனிதன் இறையையே வணங்குகிறான் என்ற பேருண்மையை இந்து மதம் உணர வைப்பதன் மூலம், மதங்களுக்கு இடையேயான குரோதத்தையும், விரோதத்தையும் துவேசத்தையும் போக்குகிறது.
உண்மையில் மிகப் பெரும் சமயங்களில் ஒன்று இந்து சமயம். இதில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், முருகனை வணங்குபவர்கள் கணபதியை வணங்குபவர்களை வெட்டிக்கொலை செய்ததுமில்லை. கணபதியை வணங்குபவர்கள் விஷ்ணுவை வணங்குபவர்கள் மீது குண்டு வீசியதுமில்லை. விஷ்ணுவை வணங்குபவர்கள் காளியை வணங்குபவர்களது கோவிலின் உள்ளே சென்று சிலைகளை உடைத்ததுமில்லை. ஏன் எனில், எல்லா இந்துக்களும் அடிப்படையில் எந்த் உருவத்தில் இறைவனை வணங்கினாலும் வணக்கத்தை பெறுவது ஒரே இறைவனே என்ற பேருண்மையை அறிந்திருப்பதுதான். கல்வியை வேண்டுபவன் சரஸ்வதி என்ற உருவில் இறையை வணங்குகிறான். செல்வத்தை வேண்டுபவன் இலக்குமி என்ற வடிவில் இறையை வணங்குகிறான். மனிதனின் வேண்டுதல் மாறலாம். இறை மாறுவதில்லை என்பதை இந்து அறிந்திருக்கிறான்.
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் என்று இந்துமத வேதங்கள் இறையை குறிப்பிடுகின்றன. நல் வினை தீவினை ஆகிய இரண்டுமே தொடாத இறையை இந்து மதம் கூறுகிறது. இறை வரையறைக்குள் வராது. வரையறுக்கவும் முடியாது.
இறை இதுதான் என்று நாம் வரையறுக்கும் எல்லா வரையறைகளும் இறையை கட்டுப்படுத்துகின்றன என்பதை இந்து ரிஷிகள் உணர்ந்திருக்கிறார்கள்.
தன்னை நம்பாதவர்களோடு தன்னை நம்புபவர்கள் போர் புரிய வேண்டும் என்று கடவுள் கூறியதாக ஒரு சில மதங்கள் கூறும். தனக்கு ஆடுகளை பலிகொடு என்று கடவுள் கேட்டதாக ஒரு சில மதங்கள் கூறும். நான் தான் கடவுள் என்னைப்பற்றி பலரிடம் எடுத்துச்சொல்லி அவர்களை என்னை கும்பிடச்சொல்லு என்று கடவுள் சொன்னதாக சில மதங்கள் சொல்லும். இப்படி மனிதனை இறைஞ்சும் கடவுள் கடவுளாக இருக்க முடியுமா? மனிதனுக்குத்தான் கடவுளின் தேவை இருக்கிறது. என்ன தேவையோ அந்த தேவை காரணமாக கடவுளை ஒரு உருவகப்படுத்திக்கொள்கிறான். சரஸ்வதியாக கடவுளை பார்ப்பவனுக்கு கடவுள் கல்வியை அளிக்கிறார். நீங்கள் யார்? உன் தந்தைக்கு நீங்கள் மகன், உங்கள் அண்ணனுக்கு நீங்கள் தம்பி. உங்கள் மகனுக்கு நீங்கள் தந்தை. உங்கள் மனைவிக்கு நீங்கள் கணவன். ஆள் ஒரே ஆள்தானே? ஒரு சாதாரண மனிதனான உங்களுக்கு இத்தனை முகங்கள் இருக்குமென்றால், இப்பேரண்டத்தை படைத்த,கற்பனைக்கும் எட்டாத இறைக்கு எத்தனை முகங்கள் இருக்கும்? சாதாரண மக்கள் நாம். அந்த பணிவுடன் தான் நாம் இறைக்கு திருமணம் செய்துவிக்கிறோம். பாடல்களை பாடுகிறோம். அது நம்மால் சந்தோஷப்படுகிறதா? அல்ல. நாம் சந்தோஷப்படுகிறோம். நம் சந்தோஷத்துக்காக இவற்றை செய்கிறோம்.
நம் சந்தோஷமே மக்களின் சந்தோஷமாக சமுதாயத்தின் சந்தோஷமாக விரிகிறது.
தெய்வமென்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான் என்று கண்ணதாசன் இந்துமதத்தின் ஆணி வேரை சொன்னார்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுதான் திருமூலரும் சொன்னார்.
அசலன், அனாதி, ஆதி, ஏகன் என இந்துப் புராணம் இறைவனை அழைத்தாலும் அது இறைவனை எந்த உருவிலும் வணங்குவதை தடை செய்வதில்லை. தடை செய்வதன் மூலம் வன்முறையே பெருகும். நான் சரி நீ தவறு என்ற வாதமும் பிரதிவாதமுமே வரும். அது வன்முறையிலேயே முடியும். ஏனெனில், ஒரு சாதாரண மனிதனுக்கு பல முகங்கள் இருப்பதுபோல, இறைவனுக்கு எண்ணற்ற உருவங்களில் வணங்கினாலும் ஒரே இறைவனையே அத்தனை வணக்கங்களும் அடைகின்றன என்பதை இந்து ரிஷிகள் கூறி மக்களை வளப்படுத்தி சமுதாயத்தினை வளப்படுத்தியிருக்கின்றனர்.
இதனால்தான் இந்து மதத்தை சார்ந்த அம்பேத்கார், காந்தியடிகள் போன்ற பெரியவர்கள், ஞானிகள் இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகிய மதங்களை பாராட்டவும், அந்த மதங்களை நிறுவியவர்களை பாராட்டவும் அஞ்சியதில்லை. ஏனெனில், எந்த உருவில் வணங்கினாலும் இறை ஒன்றுதான் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், அந்தந்த மதத்தினரோ, தங்கள் மதங்களை பரப்ப விளம்பரங்களாக அவற்றை பயன்படுத்திக்கொள்வதன் மூலம், தங்களது குறுகிய மனத்தையே காட்டுகிறார்கள்.
எனதன்பின் இஸ்லாமிய நண்பர்களே..
இந்து வேதம் உபநிஷதம், கீதை, திருமந்திரம், திருவாசகம், பிரபந்தம் போன்ற நூல்களில் கடவுளைப் பற்றிய அகமன வெளிப்பாடுகளுக்கும், பல உருவங்களில் இறையை வணங்கும் மக்களுக்கும் எந்த வித்தியாசங்களும் வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். இந்து மூல நூற்களிலும், முந்தைய இந்து மத அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்று நேரமெடுத்து நீங்கள் படிக்க முன் வந்தால் நிச்சயம் உங்களுக்கு இவ்வுண்மை புலப்படும். அப்போது, தனது மதம் மட்டுமே உண்மையான மதம் என்று அறிவிலிகள் பேசுவதையும், தனது நிறுவனரிடம் மட்டுமே இறை பேசினார் என்று பீலா விடும் மதங்களையும் எளிதில் இனங்காண முடியும்.
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
முடிவாக..
இந்து மதம் ஒர் அறிவுப் பூர்வமான பகுத்தறிவுக்கு ஏதுவான மார்க்கம். மனித சமுதாயம் இவ்வுலகில் சாந்தி சமாதானம் ஒற்றுமையுடன் வாழ்வதற்குரிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டத்தினையே இந்து மதம் தன் அடிப்படையாக உலக மக்களுக்கு முன்வைக்கின்றது. இந்துக்கள் சிலரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் இந்து ஆன்மீக பாரம்பரியத்துக்கு மாற்றமாகக் கூட சில வேளை இருக்கக் கூடும். அதற்காக இந்து மதத்தைக் குறைகூற முடியாது.
இந்து மதம் எவரையும் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென வற்புறுத்துவதில்லை. மற்ற மதங்களை போல அமைதி மதம் என்று பேசிக்கொண்டே அடுத்தவர் வழிபாட்டு தளங்களில் குண்டு வைப்பதில்லை. இம் மார்க்கத்தில் பலவந்தம் கிடையாது என்று பேசிக்கொண்டே, இந்த மதம் தவிர வேறொன்று மனிதனிடமிருந்து ஒப்புக்கொள்ளப்படாது என்று முரண்பாடுடன் பேசுவதில்லை.
உங்களது வழிபாட்டை தடுக்காத ஒருவரின் வழிபாடு நிச்சயமாக இறைவனிடமே செல்லும் என்று ஒப்புக்கொள்ளும் அனைவரும் இந்துக்களே. மற்றவர்களது வழிபாட்டை தடுத்து தனது வழிப்பாட்டு முறையையே எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று பேசும் மனிதர்கள் சமுதாயத்தின் மீது வன்முறையை திணிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பெயர் சொல்லாவிடினும் இந்துக்களே என்றாலும், அதிலுள்ள மேலான சிந்தனைகளையும், ஆன்மீக பாரம்பரியத்தையும், ஞானத்தையும் உலக மாந்தர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றது. அழைப்பு விடுக்கின்றது.
அன்புள்ள நண்பர்களே,
உங்கள் சிந்தனையைக் கொஞ்சம் தூண்டி விடுங்கள், உங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள். இந்தியாவில் மனிதர்கள் மலம் அள்ளுவதை கொண்டுவந்தவர்கள், அதற்கு காரணம் இந்துமதம் தான் என்று பிரச்சார மாயை செய்து உண்மையை மறைக்கப்பார்ப்பார்கள். அதன் மூலம், எங்கள் மார்க்கத்திலேயே ஆண்டான் அடிமை போன்ற வித்தியாசம் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து, 6 வயதுள்ள பெண் பிள்ளைகளை அடிமைப்படுத்தி நாலாந்தாராமாக 60 வயது கிழவனுக்கு மணம் செய்து கொடுப்பதையும், பள்ளி செல்லும் சிறுவன் இடுப்பில் குண்டு கட்டி மார்க்கத்துக்காக தற்கொலை செய்வதையும் நியாயப்படுத்தி பேசுவார்கள்.
இந்துமதம் வாருங்கள். இறை வழி சேருங்கள்.
நன்றி தியாகு
--
இந்த மிகச்சிறப்பான கட்டுரையை பின்னூட்டமாக எழுதி அளித்து அதனை தனி பதிவாக வெளியிட அனுமதித்த தியாகு அய்யா அவர்களுக்கு நன்றி
52 comments:
இந்துமதத்துக்கு அழைக்கும் இப்படிப்பட்ட ஆன்மீகப்பதிவுகள் நிறைய வரவேண்டும்
சிறப்பான பதிவு
எங்கோ படித்தது...
இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை,"அது வாழும் முறை" அவ்வளவு தான்.
ஒரு ஊரில் ஒரு கணேசன் இருந்தால் அவன் வெறும் கணேசன் தான்,பலர் இருந்தால் தான் தனியாக ஒரு அடையாளம் வேண்டும்.அந்த விதத்தில் வந்தது தான் "இந்து மதம்" என்ற சொல்.
பலர் கூடி வாழ்ந்த முறைக்கு அன்றைய நாளில் பெயர் இல்லை.பிற மதங்கள் வந்த போது வித்தியாசப்படுத்தவே இந்த பெயர்.
முக்கியமாக ஒன்று, யாரும் மற்ற இடங்களில் இருந்து இந்து மதத்துக்கு கடத்தப்படுவதில்லை என்று நினைக்கிறேன்.
நல்ல கருத்துக்கள் எல்லா மதத்திலும் உண்டு. மதம் என்ற பெயரில் அதை அடக்க முயற்சிப்பதால் தான் 'கூவி கூவி' விற்றக்கவேண்டி இருக்கிறது. உங்கள் தலைப்பும் அதுதான்.
நல்லதைச் சொல்லலாம், அதை மதத்தின் பெயரால் சொல்வதால் அது புறக்கணிக்கப் படலாம்.
உங்களோட தியாகு லிங்க் அந்த பதிவுக்குதான் போகுது. அந்த பின்னூட்டத்திற்கு போகவில்லை.
கீழேயுள்ளது அதற்கானது.
http://ezhila.blogspot.com/2006/11/blog-post_12.html#c116534373683569951
தியாகு அவர்கள் சிறந்த முறையில் எழுதியிருக்கிறார். நல்ல கருத்துக்கள். தெளிவான சிந்தனை. ஆனால் மதம் சார்ந்த பார்வை ரசிக்கும்படி இல்லை. இவ்வளவு நன்றாக சிந்திப்பவர், மதம் கொள்ள வாருங்கள் என்று அழைத்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.
கருத்து அளித்த அனைவருக்கும் நன்றி
அனானி, கோவிகண்ணன், நாடோடி, அனானி ஆகியோர் அனைவருக்கும் நன்றி
நாடோடி, உங்கள் இணைப்பு எடுத்து திருத்திவிட்டேன்
தியாகு அவர்களது கட்டுரை ஒரு முன்மாதிரியான (pioneering) கட்டுரை என்று சொல்லவேண்டும்.
இந்துவாக இருப்பவர்கள் இப்படியெல்லாம் எழுதமாட்டார்கள். அதனால், இது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆகையால் இந்துக்களிடமிருந்து மெல்லியதாகவேணும் எதிர்ப்பு வருவது புரிந்துகொள்ளக்கூடியது
ஒவ்வொரு முயற்சியும் 5 நிலைகளில் செல்வதை அறிவோம். கிண்டல், எதிர்ப்பு ஆகியவைதான் முதல் இரண்டு படிகள்.
நன்றி
"தனது மதம் மட்டுமே உண்மையான மதம் என்று அறிவிலிகள் பேசுவதையும், தனது நிறுவனரிடம் மட்டுமே இறை பேசினார் என்று பீலா விடும் மதங்களையும் எளிதில் இனங்காண முடியும்.
"
நச்!
Even though I am a muslim I could immediately understand the truth in your posts. But what to do? In our religion they will not tolerate me to speak or practice truth. I admire hinduism. It is not only the oldest religion in ths earth but also it is giving out the best truths about god. God almightly will bless you my brother for this great post.
நன்றி அப்துல்காதர்,
உங்கள் வாழ்த்துக்கள் அனைத்தும் தியாகு அய்யாவுக்கே உரியவை
தியாகு அய்யா,
சகோதரர் மரைக்காயர் இந்து மதம் பற்றிய தவறான கருத்துக்களை கொண்டிருந்தால் திருத்துவது நம் கடமை.
அதற்காக, அவர் எழுதும் மொழியில் அவருக்கு பதில் தர வேண்டாமே?
இறை என்பது எந்த கதைகளாலும் கட்டுரைகளாலும் விளக்கிவிட முடியாதது.
1. கடவுள் யார்? அல்லது யாவர்?
{- இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? ஒரு ரிஷியே தனது மகளை நம்பி ஒப்படைத்து விட்டு போக முடியாத இந்தக் கடவுள்களையா?
- இந்துவாகவே இருந்தால் கூட ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வணங்க முடியும் என்றிருக்கும் இந்தக் கடவுள்களையா?
- அல்லது பெருந்தலைவர் காமராஜர் சொன்ன இந்தக் கடவுள்களையா?}
புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை.
அவை இறை அல்ல.
உபநிஷதமும் திருவாசகமும் விதந்தோதும் இறைவன்,விஷ்ணுமயம் ஜகத்து என்றும், சர்வம் ஈசம் என்றும் கூறுகின்றன.
ஒரு கருத்தை குருக்கள் சுட்டிக்காட்டும்போது விரலை பார்க்கக்கூடாது. ஒரு கருத்தை விளக்க கதை கூறும்போது, கதையை பிடித்து தொங்கக்கூடாது.
நன்றி
எழில், கார்த்திகை பற்றிய எனது
இந்தப் பதிவிலும் இதே பின்னூட்டத்தை தியாகு போட்டிருக்கிறார்.
நல்ல, தைரியமான கருத்துக்கள். இதைத் தனிப் பதிவாகவே போட்டு பலரும் படித்துப் பயன்பெற வழி செய்யும் உங்களுக்கு நன்றி.
2. ஆன்மீக வழிகாட்டிகள் யாவர்?
{- இந்து மதத்தில் ஆன்மீக வழிகாட்டிகளாக யாரை எடுத்துக் கொள்வது?
- துறவு என்ற அறத்தைக் கூட கடைப்பிடிக்க வக்கற்றவர்களையா?
- பெண்பித்து, கூடாஉறவு, கொலை போன்ற மாபாதகங்களை செய்பவர்களையா?
- சக மனிதன் தன்னைத் தொட்டால் தீட்டு பட்டுவிடும் என்று காலுறை அணிந்து கொள்பவர்களையா?
- கஞ்சா போன்ற போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்களையா?
சரி இந்தப் பிரச்னைகளில் எதிலும் இன்னும் மாட்டாத ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் அவர் சரியான வழியைத்தான் காட்டுகிறார் என்பதற்கு என்ன ஆதாரம்?}
துறவு என்னும் அறத்தை பின்பற்ற வேண்டியது குருவாக இருக்கும் அனைவருக்கும் தேவையில்லை.
ஒரு குடும்பத்தலைவியிடமிருந்து உபதேசம் பெற்ற கொங்கணவர் என்னும் முனிவர் கதை அதனைத்தான் கூறுகிறது.
துறவு ஒரு முயற்சி. ஞானம் என்பது விளைவு. விளைவை நோக்கி பல முயற்சிகள் இருக்கலாம். கர்ம வீரராக இருப்பவர் கர்மயோகத்தை பின்பற்றியும் ஞானத்தை அடையலாம். துறவின் மூலமும் ஞானத்தை அடையலாம்.
பல்வேறு பாதைகள் இருக்கின்றன. அவற்றில் உங்களதை தேர்ந்தெடுத்துக்கொள்வது உங்களது சுதந்திரம். உங்களது ஸ்வதர்மம்.
ஒருவர் குருவிடமிருந்துதான் ஞானம் பெறவேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை. ஜாபால் சத்தியகாமர் புல் பூண்டு தாவர விலங்குகளிடமிருந்தும் ஞானம் பெற்றார். அறியக்கூடிய மனம் இருந்தால், ஞானம் சித்திக்கும்.
ஞானம் அற்றவர்கள் நீங்கள் கூறுவது போன்ற வெளிவேடக்காரர்களாக இருக்கலாம். அவர்கள் நீங்கள் அடையாளம் கண்டுகொண்டது போலவே மக்களால் உதாசீனம் செய்யப்பட்டு விடுவார்கள்.
சரியான வழிதான் காட்டுகிறார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டிருக்கிறீர்கள்.
எது தர்மத்தை போற்றுகிறதோ, எது தர்மம் தழைத்தோங்க வைக்கிறதோ அது நல்வழி. தர்மம் என்பது எது மக்களை இணக்கத்துடன் வாழ வைக்கிறதோ அது தர்மம். எது இந்த மனித குலமும் ஜீவராசிகளும் புல்பூண்டுகளையும் வாழ வைக்கிறதோ அது தர்மம்.
எது மக்களுக்கு இடையே சண்டையையும் பூசலையும் தோற்றுவிக்கிறதோ அது அதர்மம்.
ஒரே ஒரு குருவின் வார்த்தைகளை இறையின் வார்த்தையாக எடுத்துக்கொள்ளும்போது இது பிரச்னை. அந்த குரு சொன்ன வார்த்தைகளைப் பிடித்து தொங்கும்போது அவை பூசலையும் பிரச்னையையும் உருவாக்குகின்றன.
//
4. இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்?
- 'சக மனிதர்களுடன் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள்' என்று உரிமைக்குரல் எழுப்பும் ஜாதியிலா?
- "They need respect" என்று எகத்தாளம் பேசும் ஜாதியிலா?
- 'எப்படி பரிமாற வேண்டும் என்ற சம்ஸ்காரம் இல்லாத அபிஷ்டுக்களையெல்லாம் ஆத்துக்கு ஏண்டா கொண்டு வரே?' என்று சக மனிதர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத ஜாதியிலா?
மற்ற நண்பர்களும் உங்களுக்கு தோன்றும் கேள்விகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
//
பார்ப்பனர்களில் ஒரு சாரார் அவ்வாறு மற்ற சாதியினரை எகத்தாளமாக பேசுவதை தமிழ் வலைப்பதிவுலகில் பலரும் விமர்சித்திருக்கிறார்கள். அதற்காக பல பார்ப்பனர்களும் வருந்தி அதுதவறு என்று கூறியிருக்கிறார்கள்.
ஏன் இந்துமதத்தையும் ஜாதியையும் இணைத்து பார்க்கவேண்டும்?
இந்துமதம் என்பது ஆன்மீகம். அது இறையை மனிதன் உணர அழைக்கிறது.
மனுதர்மம், இந்திய அரசியலமைப்பு சட்டம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் போன்றது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தையும் கிறிஸ்துவத்தையும் போட்டு குழப்பிக்கொள்வது இல்லை. அது போல, மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.
மனுதர்மம் அன்று ஜாதிக்கு ஒரு நீதி என்று எழுதியது போல இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம், மதத்துக்கு ஒரு நீதி என்று எழுதி வைத்திருக்கிறது.
அது எப்படி தவறோ அது போல இதுவும் தவறுதான். ஜாதிக்கு ஒரு நீதியை எதிர்க்கும் அதே கூட்டத்தார் மதத்துக்கு ஒரு நீதியை ஆதரிக்கிறார்கள். இதனை எதனால், ஆதரிக்கலாமோ அதே போல அதே காரணங்களால் ஜாதிக்கு ஒரு நீதியையும் ஆதரிக்கலாம்.
அன்று ஜாதியை தாண்டி மனிதர்களை மனிதர்களாக மதிக்க அறைக்கூவல் விடுத்தவர்கள் இந்துக்கள், ராமானுஜர், பஸவேஸ்வரர், நாராயனகுரு போன்ற எண்ணற்ற இந்து ஞானியர். அதே போல இன்றும், மதத்துக்கு ஒரு நீதி என்று இருப்பதை எதிர்ப்பவர்களும் இந்துக்களே.
சரி உங்கள் கேள்விக்கு வரலாம். இந்துமதத்துக்கு வருபவர்கள் எந்த ஜாதியில் சேரவேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். ஏன் உங்கள் ஜாதிக்கு என்ன குறை? மரைக்காயர் என்பது ஒரு ஜாதிமாதிரி வைத்துக்கொண்டு சிவபாலன் மரைக்காயர் என்று பெருமையாக இருக்கலாமே?
An extremely good set of answers by you, Elzil.
It is very convincing
Ravi
நேசக்குமார் அய்யா,
1) இந்து மதத்துக்கு வாருங்கள் என்ற அழைப்பு இந்துமதத்தின் அடிப்படைகளைப் பொறுத்தமட்டில் தேவையில்லாததுதான். ஆனால் தியாகு அய்யா என்ன கூறியிருக்கிறார் என்பதை பாருங்கள்.
தன்னை நம்பாதவர்களோடு தன்னை நம்புபவர்கள் போர் புரிய வேண்டும் என்று கடவுள் கூறியதாக ஒரு சில மதங்கள் கூறும். தனக்கு ஆடுகளை பலிகொடு என்று கடவுள் கேட்டதாக ஒரு சில மதங்கள் கூறும். நான் தான் கடவுள் என்னைப்பற்றி பலரிடம் எடுத்துச்சொல்லி அவர்களை என்னை கும்பிடச்சொல்லு என்று கடவுள் சொன்னதாக சில மதங்கள் சொல்லும். இப்படி மனிதனை இறைஞ்சும் கடவுள் கடவுளாக இருக்க முடியுமா?
உங்களது வழிபாட்டை தடுக்காத ஒருவரின் வழிபாடு நிச்சயமாக இறைவனிடமே செல்லும் என்று ஒப்புக்கொள்ளும் அனைவரும் இந்துக்களே.
அப்படியென்றால், அவர்கள் இந்துக்களாக அடையாளப்படுத்திக்கொண்டால்தானே அவர்கள் சில மதங்களில் அடுத்த மதங்களை பற்றிய வெறுப்பு பிரச்சாரங்களை ஒதுக்கி ஆன்மீக வழியில் முன்னேற முடியும்?
2) எல்லா மதங்களிலும் குறைகள் உள்ளன என்று சொல்வது தவறு. இந்துமதத்தில் குறை ஏதும் இல்லை. சுதந்திரமே குறை, என்னை சிந்திக்கச்சொல்லாதே, கட்டளைகளை கொடு நான் மிஷின் போல நடக்கிறேன் என்று கூறுபவர்களுக்கு மட்டுமே இந்து மதத்தின் சுதந்திரம் ஒரு குறை.
மனுநீதியில் உள்ள குறைகளை இந்துமதத்தின் குறைகளாக கூறும் அஞ்ஞானிகள் வசம் தாங்கள் செல்லவேண்டாம். மனுதர்மத்தில் உள்ள குறைகளையும் இந்துக்கள்தான் எதிர்த்தனர். மனுதர்மத்தில் உள்ள குறைகளை எதிர்க்கவும் இந்துக்களுக்கு அனாதிகாலம் தொட்டு சுதந்திரம் இருந்தது. மனுதர்மமும் மாற்றமுடியாதது அல்ல. அதன் இறுதி பகுதியில் அதிலுள்ள சட்டங்களை கற்றறிந்தவர்கள் எப்படி மாற்றுவது என்ற வழிமுறையையும் கொடுத்திருக்கிறது.
3) என்னைப் பொறுத்தமட்டில் ஜாதிகள் இருப்பது தவறில்லை. ஜாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் கற்பிப்பதும் போதிப்பதும்தான் தவறு.
4) ஆம். சமீபத்தில் ராஜ்புத் முஸ்லீம்கள் மீண்டும் இந்துமதத்தில் இணைந்திருக்கிறார்கள். வடக்கில் சில மாநிலங்களில் குஜ்ஜார் முஸ்லீம்கள் மீண்டும் இந்து மதத்தில் இணைந்திருக்கிறார்கள்.
இஸ்லாமிய சகோதரர்களுடம் விவாதம் பற்றி..
எனது பதிவு அதற்கு உகந்ததல்ல என்று கருதுகிறேன்.
ஆயினும், இஸ்லாமிய சகோதரர் பதில் எழுதினாலும் அதனை நீக்க மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.
வேறு மதத்தவர் இந்துவாக முடியுமா? இந்து ஆக ஒரே வழி இந்துவாக பிறப்பதுதானே! மேலும் ஒரு இந்து எத்தனை முறை மதம் மாறினாலும் சாகும் வரை, ஏன் செத்த பின்னும் கூட அவன் இந்துதானே!
இரண்டு மத கலப்புமண பெற்றோர்களுக்குப் பிறந்தவர்களே தங்கள் பெற்றோரின் மதங்களில் ஒன்றைத் தேர்தெடுக்கும் உரிமை பெற்றவர்களாகிறார்கள் என்று நான் கருதுகிறேன்.
தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
//ஓகை கூறியது...
வேறு மதத்தவர் இந்துவாக முடியுமா? இந்து ஆக ஒரே வழி இந்துவாக பிறப்பதுதானே! மேலும் ஒரு இந்து எத்தனை முறை மதம் மாறினாலும் சாகும் வரை, ஏன் செத்த பின்னும் கூட அவன் இந்துதானே!
//
தாராளமாக ஆகலாம். இஸ்க்கான் அமைப்பு, ஹவாய் சிவாச்சாரியார் அமைப்பு ஆகியவை உலகெங்கும் மாற்று மதத்தவரை இந்துமதத்தில் இணைத்து வருகிறார்கள்.
Hinduism Today அமைப்பு முழுக்க முழுக்க தென்னெறி சைவ சித்தாந்திகளால் முழுக்க முழுக்க ஆங்கிலேயரால் நடத்தப்படுகிற பத்திரிக்கை.
//தன்னை நம்பாதவர்களோடு தன்னை நம்புபவர்கள் போர் புரிய வேண்டும் என்று கடவுள் கூறியதாக ஒரு சில மதங்கள் கூறும். தனக்கு ஆடுகளை பலிகொடு என்று கடவுள் கேட்டதாக ஒரு சில மதங்கள் கூறும். நான் தான் கடவுள் என்னைப்பற்றி பலரிடம் எடுத்துச்சொல்லி அவர்களை என்னை கும்பிடச்சொல்லு என்று கடவுள் சொன்னதாக சில மதங்கள் சொல்லும். இப்படி மனிதனை இறைஞ்சும் கடவுள் கடவுளாக இருக்க முடியுமா? //
Very good question! It seems all the abrahamic religions do this!
Poor deluded souls!
எழில், மிக்க நன்றி.
நேசக்குமார், விரிவான பதிலுக்கு மிக நன்றி.
ஆனால் இது போன்ற ஐயங்கள் பலருக்கும் இருக்கின்றன.
மதமே ஒரு உடாண்ஸ்...அதைச்சொல்லி கற்காலத்திலிருந்து அடிச்சிக்கிட்டானுங்க...சிலுவைப்போருன்னு பல உயிர்களை கொன்று குவிச்சானுங்க...வாதம் செய்து பலரை கழுவில் ஏத்தினானுங்க...இன்னும் ஏன் அதை வெச்சி அடிச்சிக்கறீங்க...இணையத்திலும்...என்னமோ போங்க...
அதனை வரையறுக்கவோ, ஒரு புத்தகத்துக்குள் அடக்கிவிடவோ முடியாது. அப்படி அடக்கிவிட்டேன் என்று கூறும் மார்க்கங்கள் அஞ்ஞானத்தில் விழுந்து கிடக்கும் மனிதனின் உற்பத்திகள் தானே?
--
Good thought
This article has opened my eyes. I was having some inferiority complex so far. Our religionis definitely better than the fake religion called islam. Thanks to thiyagu, ezhil and everyone who has contributed to this wonderful and worthwhile discussion.
//செந்தழல் ரவி கூறியது...
மதமே ஒரு உடாண்ஸ்...அதைச்சொல்லி கற்காலத்திலிருந்து அடிச்சிக்கிட்டானுங்க...சிலுவைப்போருன்னு பல உயிர்களை கொன்று குவிச்சானுங்க...வாதம் செய்து பலரை கழுவில் ஏத்தினானுங்க...இன்னும் ஏன் அதை வெச்சி அடிச்சிக்கறீங்க...இணையத்திலும்...என்னமோ போங்க...//
செந்தழல் ரவி,
அதென்ன "வாதம் செய்து கழுவில் ஏற்றினாங்க"? வாதம் செய்து தோற்றுவிட்டால் கழுவில் ஏறுகிறேன் என்று சொல்லி வாதம் செய்தார்கள். வாதில் தோற்றதால் அவர்கள் கழுவில் ஏறினார்கள். கழுவில் ஏற விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அப்போதும் சம்பந்தர் அவர்களிடம் கழுவில் ஏறவேண்டாம், திருநீறு பெற்று இறைவழி சேருங்கள் என்றுதான் கோரினார். பிடிவாதமாக சொன்ன சொல் தப்பமாட்டேன் என்று சமணர்கள் கழுவேறினார்கள். அது பிடிவாதம். அது தேவையில்லை. "வாதம் செய்து கழுவில் ஏறிக்கொண்டார்கள்" என்று சொல்லுங்கள். அது தான் சரி.
மற்றபடி நீங்கள் சொல்வது மதம் என்ற பெயரில் நடக்கும் அரசியல்.
அது உடான்ஸ். இந்த கடவுளை கும்பிட்டால், இப்படி டிரஸ் போட வேண்டும், இந்த மாதிரி தாடி வைத்துக்கொள்ள வேண்டும், இந்த மொழி பேச வேண்டும், இப்படி வேற்று மொழி பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆளை மாற்றி அரசியல் பண்ணுகிறார்களே அது உடான்ஸ்.
இப்படி டிரஸ் போட்டு இப்படி தாடி வைத்து ஆங்கில மொழி அல்லது அரபி மொழி பெயர் வைத்து என்னை குனிந்து கும்பிடு அல்லது முட்டிகால் போட்டு கும்பிடு என்று கடவுள் கேட்பாரா?
அதெல்லாம் சும்மா அரசியல். அதனால்தான் சிலுவைப்போர்களும் ஜிகாதும் நடக்கிறது. தன் மதத்துக்கு ஆள் பிடிக்கும் போர் ரொம்ப ஓவராக போகும்போது அதெல்லாம் நடக்கும்.
ஆனால் ஆன்மீகம் என்று ஒன்று இருக்கிறது. அது உடான்ஸ் அல்ல. ஆப்ரஹாமிய மதங்கள் அரசியலை பேசுகின்றன. இந்து மதம் ஆன்மீகத்தை பற்றி பேசுகிறது
//இவரை அனுப்பிய பின்னர் இறைவன் தன் வாயை மூடிக்கொண்டுவிட்டான் என்றும் சொல்லி கற்காலத்திலேயே சமுதாயத்தை வைத்திருக்கவும் வன்முறையை வளர்க்கவும் முயல்வார்கள்.//
இறைவனின் வாயை இவர்கள் மூடுகிறார்களா? வேடிக்கைதான்!
//ஆனால் ஆன்மீகம் என்று ஒன்று இருக்கிறது. அது உடான்ஸ் அல்ல. ஆப்ரஹாமிய மதங்கள் அரசியலை பேசுகின்றன. இந்து மதம் ஆன்மீகத்தை பற்றி பேசுகிறது//
பாபர் மசூதியை இடிச்சுப்புட்டு இன்னைக்கி வரை ராமர் கோயில் கட்டாம அரசியல் செஞ்சு ஆட்சியைப் பிடிச்சது... மறுபடியும் ஆட்சியப் புடிக்க கலவரங்களைத் தூண்டுறதும் எந்த மதத்துக்காரங்க அய்யா.... முதல்ல மதம் மதம்னு மதம்பிடிச்சுப் பேசுறத நிப்பாட்டுங்கய்யா...
மாற்று மதங்களையும் அவர்தம் நம்பிக்கைகளை தூற்றி எனது இந்து மதமே உயர்ந்தது என்று சொல்லுவதை எந்த இறைவன் சொல்லிக் கொடுத்தான்.
இறைநம்பிக்கையாளர்களே ...!
இறைவன் சித்தம் இல்லாமல் எதுவும் தோன்றியிருக்காது என்று நீங்கள் நம்பினால் அதற்கு மதங்களும் விதிவிலக்கல்ல. மதங்களும் இறைவனின் சித்தமே.
இதில் என் மதமே உயர்ந்தது என்று நீங்கள் சொல்லத் துனிவது இறைவனுக்கு அவன் செயலுக்கு செய்யும் இழுக்கு.
அருமையாக எழுதப்பட்ட பதிவில், அர்த்தமற்ற மதத்தாக்குதல்களை உள்ளடக்கிய பின்னூட்டங்களைப் பிரசுரித்து, பெரிய இழுக்கைத் தேடிக் கொண்டுவிட்டீர்கள்.
பதிவின் தரத்தை இறக்கும் பின்னூட்டங்களை முதலில் நீக்குங்கள்.
எவரையும் இறக்கித்தான் அடுத்தவர் உயர முடியும் என்னும் தவறான கொள்கையைக் கைவிடுங்கள்.
எனது தாழ்மையான வேண்டுகோள்!
நல்ல அனானி,
மிக நல்ல கேள்வி.
இந்துக்களை அரசியல் படுத்துவதை பற்றி தருமி அய்யா பதிவில் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன்.
பெரும்பாலான இந்துக்களுக்கு இந்து என்ற உணர்வு அரசியல் அடையாளம் அல்ல. ஆனால் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அது அரசியல் அடையாளம். அதனால்தான் அவர்களிடம் ஓட்டு வங்கி தானாக உருவாகியிருக்கிறது.
ஆனால், அவ்வாறு முஸ்லீம் தலைவர்களும் கிறிஸ்துவ தலைவர்களும் ஓட்டு வங்கியாக உருவாகி தங்களது வாக்குக்களை பயன்படுத்தி இதுவரை இந்தியாவில் அரசியல்தான் செய்து வந்திருக்கிறார்கள். இஸ்லாமை பயன்படுத்தி இந்தியாவை பிரித்ததும், இன்றும் கோவா போன்ற இடங்களிலும் கிறிஸ்துவ பெரும்பான்மை இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்துவர் ஓட்டு கிறிஸ்துவருக்கே என்று பொதுக்கூட்டங்களிலேயே பேசுவதும் இந்துக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு உருவாக்காமல் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
முஸ்லீம் கிறிஸ்துவ பிரச்சாரங்களும், அதன் அடிப்படையில் பெரும் சலுகைகளை பெற்றுக்கொள்வதும் இந்துக்கள் மத்தியில் நிச்சயம் ஒரு எதிர்ப்புணர்வை தோற்றுவிக்கும். ஆனால், இவ்வளவு காலமாக அவை நடந்து வந்திருந்தாலும் இன்னமும் பாரதிய ஜனதா கட்சி 90 சதவீதம் இந்துக்களாக இருக்கும் இந்தியாவில் ஒரு முறை கூட அறுதிப்பெரும்பான்மை பெற முடியவில்லை என்பதை பார்த்தால், இந்துக்கள் இந்து மதம் என்பதை அரசியல் படுத்த விரும்பவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.
இன்றும் இந்துக்கள் ஒரு சீக்கிய பிரதமர் கீழும், ஆளும் கட்சியின் தலைவராக கிறிஸ்துவரையும், இந்திய ஜனாதிபதியாக ஒரு முஸ்லீமையும் ஏற்றுக்கொள்வதை பாருங்கள்.
அதனை பாராட்டுங்கள்.
இந்து மதம் ஆன்மீக உள்ளடக்கம் பொருந்தியது என்பதாலேயே எந்த மதத்தினரையும் இந்துக்கள் மதிக்கிறார்கள். ஏனெனில், எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் நீங்கள் இறையையே வணங்குகிறீர்கள் என்பதால் அவர்கள் எல்லோரையும் மதிக்கிறார்கள்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆப்ரஹாமிய மேற்குலகு மதங்களுக்கு அப்படிப்பட்ட உணர்வு இல்லை. அதுவே உலகெங்கும் பெரிய கலவரங்களையும் உள்நாட்டு போர்களையும் உருவாக்கி வருகிறது. ஏன் ஷியா சுன்னி கலவரங்களுக்கும், புரோடஸ்டண்ட் கத்தோலிக்க போர்களுக்கும் அவைகள் உருவாக்கிய பெரும் அழிவுகளையும் கவனியுங்கள். ஷியா மதத்து தலைவரை ஏற்க மறுத்து சுன்னி பிரிவினர் ஷியா பகுதிகளுக்குள் சென்று தினந்தோறும் சாதாரண மக்களை கொலை செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட மதமாச்சரியங்களை கடந்தது இந்துமதம்.
அப்படிப்பட்ட இந்து மதம் உலகெங்கும் பரவுவதே உலகம் அமைதிவழி திரும்ப ஒரே வழி
எஸ்.கே அய்யா, கோவிக்கண்ணன் அய்யா
உங்கள் கருத்தோடு உடன் படுகிறேன்.
அதனால் தான். அந்த கருத்தை பிரசுரித்துவிட்டு அதனை கண்டித்தேன்.
உங்கள் கருத்து ஏற்புடையது என்பதால், அவற்றை நீக்குவதும் எனக்கு உகந்ததே.
மிக்க நன்றி, திரு. எழில் !
//ஷியா மதத்து தலைவரை ஏற்க மறுத்து சுன்னி பிரிவினர் ஷியா பகுதிகளுக்குள் சென்று தினந்தோறும் சாதாரண மக்களை கொலை செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட மதமாச்சரியங்களை கடந்தது இந்துமதம்.
//
மிகச்சிறப்பான கருத்து எழில்.
இந்துமதம் உலகெங்கும் பரவும் என்று விரும்புவோம். அதற்காக உழைப்போம்.
அதுவே உலகில் சமாதானம் நிலவ வழி
I am interested to know if there are any arya samaj conversion centers in Pollachi. I have developed doubts about my religion and want to return to our ancestral faith. We have been hindus before 3 generations.
முகம்மது யுனுஸ்,
ஆர்ய சமாஜம் பற்றி தெரியவில்லை.
அமெரிக்காவில் இருக்கும் தமிழ் முஸ்லீம்கள், தமிழ் கிறிஸ்துவர்கள் எவ்வாறு இந்துக்களாக ஆகலாம் என்பதற்கான வழிமுறைகள் நிறைந்த இணையப்பக்கம் இது
How to become Hindu
வருக வருக இறையருள் பெருக
Anwar Shaikh
(1928-2006)
Another great mind of 20th century, whose grim discoveries about Islam shook the world, passed away on November 25, 2006. Anwar Shaikh was born on June 1, 1928 in Gujrat, the then greater India. His family was extremely religious, which influenced him to follow Islam with passion. In 1947, India was in a process of independence from Britain,and Muslims and Hindus were in a civil war. At this time, Anwar Shaikh, a young Muslim zealot killed two Sikhs and one Hindu without any remorse. His religious conviction was akin to that of a typical Muslim Jihadist, of the sort we see today.
However, at the age of 25, Anwar saw the light of humanity and left Islam.
Anwar was a schoolmaster in Pakistan but he migrated to Britain in 1956 and became a successful businessman. He married a Welsh lady and integrated himself into British society. Perhaps his guilt of killing three people haunted him rest of his life. He embraced Hinduism.(((He embraced Hinduism.)))
In 1973, Anwar went public with his mission to eradicate Islam. Since then he became vocal against Islam, wrote several books and went for a mission of educating the world about the danger of Islam. Though a serious critic of Islam but having most of his family members Muslims, he had full sympathy for them because, as he rightly noted, "The problem is not Muslims, the problem is Islam". During the 1990s, Anwar Shaikh became the recipient of a fatwa for the content of his books.
Anwar Shaikh has died but his legacy will live on through his words.
Anwar Shaikh
During my UK trip I met with Anwar Shaikh, an important scholarly critic of Islam. Originally a Pakistani, an Islamic Mullah and a Sufi Sheikh, he returned to the Vedic fold by his own thought and experience. Shaikh was a warm and friendly character with a great sense of humor and hospitality. He was not physically well at the time but was still working hard on various books and articles.
Shaikh has an evolutionary concept of the Godhead, that the Divine was a collective formation of cosmic evolution, not an aloof God outside of the cosmos. This corresponds to the Hiranyagarbha or collective subtle body of Vedantic thought. We are all creating God as God is living through us. Buddhist and Jain ideas of liberation as something that we develop on an individual level rather than as something that comes from a deity beyond reflect a similar trend in Indian thought.
Shaikh regards Islam as a political movement under a religious guise, a ploy for Arab nationalism. For him Mohammed was a masterful general, politician and diplomat who skillfully used religion to further his worldly aims. Allah is an alter ego for Mohammed and the Koran is more the thought and life of Mohammed than a real communion with God.
Anwar Sheikh
excellant post and excellant replies..
Proud to be HIndu
//ஆனால் ஆன்மீகம் என்று ஒன்று இருக்கிறது. அது உடான்ஸ் அல்ல. ஆப்ரஹாமிய மதங்கள் அரசியலை பேசுகின்றன. இந்து மதம் ஆன்மீகத்தை பற்றி பேசுகிறது//
உங்களுடைய கட்டுரையில் முன்பின் சறுக்கல்கள் அதிகம் உள.
எல்லா மதத்திலும் அரசியல் உண்டு. இந்து மதத்திலும் தான். ஹிந்து கடவுள்கள் போர்கள் செய்யவில்லையா. நீங்கள் கடவுளாக வணங்கும் ராமர் அரசாலவில்லையா, உங்கள் கடவுளர்களுக்கிடையே போர்களில் ஈடுபடவில்லையா?
ஒருமுறை //இந்து மதம்// என்கிறீர்கள், மற்றொருமுறை //மார்க்கம்// என்கிறீர்கள், மார்க்கத்திற்கும் மதத்திற்கும் உங்களுக்கு பொருள் சரியாய் தெரியாது போல. முதன் முதலில் இந்து மதத்தை மார்க்கம் என்று சொன்ன பெருமை(?) உங்களுக்குத்தான்.
அதுபோல் இந்து மதத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் அழைப்பு விடுக்கிற சமயத்தில் தியாகு என்பவர் எழுதிய கட்டுரை என்று நீங்கள் மேற்கோள் இடும்பொழுது அதே தியாகு என்பவர் மற்ற மதங்களை கொச்சைப்படுத்துவது எவ்வகையில் சரியானது. குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு என்பது போல் அழைப்பு விடுப்பவரே முன்னுக்குப்பின் முரனாக எழுதுவது அவரின் நம்பகத்தன்மையும் அவரின் தரத்தையும் படம் பிடிப்பதாக உள்ளது.
"உங்கள் மார்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு" என்கிறது குர்ஆன். வீணாய் மதங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்.
நன்றி.
உங்கள் சகோதரன்.
"உங்கள் மார்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு" என்கிறது குர்ஆன்./
பிறகு ஏன் மதம் மாறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கிறீர்கள்?"உங்கள் மார்க்கம் உங்களுக்கு" என விட்டு விட வேண்டியது தானே?
பதிலெழுதிய சகோதரருக்கு,
கட்டுரைகளில் உள்ள சறுக்கல்களை சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
மார்க்கம் என்றால் வழி என்றுதான் பொருள் என்று நினைக்கிறேன். மார்க்கத்துக்கும் மதத்துக்கும் என்ன வித்தியாசம் என்று சொன்னால் புரிந்துகொள்கிறேன்.
தியாகு என்பவர் எழுதிய பின்னூட்டத்தைத்தான் நான் பதிவாக எழுதினேன். ஆனால் பின்னால் வந்த தியாகு பின்னூட்டங்கள் முந்தைய தியாகு பின்னூட்டங்கள் அல்ல. அவை அதர் ஆப்ஷன் அனானி வழியாக எழுதப்பட்டவை. அதனால், போலி தியாகு எழுதியிருக்கலாம். இந்த பதிவின் தரத்துக்கு அந்த பின்னூட்டங்கள் இல்லை.
//"உங்கள் மார்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு" என்கிறது குர்ஆன். வீணாய் மதங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்.//
இந்த வரியை பற்றி முன்பு ஒரு முறை சகோதரர் இப்னு பஷீர் அவர்களுக்கு எழுதினேன். நேரமிருந்தால் படித்துப்பாருங்கள்
Christian priest converts to Hinduism
Gaurav Saigal in Varanasi
A Catholic priest, Father Anthony Fernandes, converted to Hinduism here on Tuesday.
The Jesuit priest was converted at a public ceremony at Ram Krishna Temple in the ancient Hindu city.
"Today is a day of great joy for me, as I am no more attached to any church; from today, Fr Anthony is no more and Shankar Dev has taken birth," Anthony told rediff.com just after Hindu priests formally declared him as a member of the community.
The shuddhikaran (purification) of Fr Fernandes was followed by mundan (ceremonial headshaving) carried out under the auspices of the Hindu Sanskar Kendra, a religious body of priests - amid chanting of Vedic hymns and sacred Sanskrit couplets, after which he was given the name Shankar Dev.
After a Dasvidh Snan (holy bath), Fernandes was draped in a saffron robe with sandalwood paste on his forehead.
"The change is not a publicity stunt nor just a religious transformation for me. I have gone for this change only to rid the corrupt society I had been living in all these years," remarked the middle-aged priest.
"It is out of my personal experience that I can tell the wrong deeds of Indian missionaries where I spent three decades; they have created a situation where one can easily raise questions about their working; those sitting on high positions whom people consider as spiritual leaders, in fact play a dubious role," said the former father, who served in the Christian missions of Goa and Gujarat since childhood.
"For 400 years our family has served as true Catholics and I too grew up in Majorda (Goa), where 80 per cent people are Christians; after education at St Xavier's, Ahmedabad, I opted to serve as a priest," he pointed out.
He said, "What I have been watching since the early 70s is a big fraud being played with Christianity itself," adding, "Christianity is being misused by some in India and people like the bishops are the most corrupt. In the name of minorities, they are grabbing donations for themselves; only a deep probe can expose the real faces behind the spotless white robes," remarked Fernandes.
However, it was not the end of the rough ride for Fernandes, who now fears the wrath of his four brothers, who are still staunch Christians. "They may oppose me, but time will certainly tell them what I did was right; after all, I have adopted a religion that was not only the most ancient and practiced by our own ancestors, but also a culture in itself," he added.
http://www.rediff.com/news/2001/apr/17fr.htm
Title: Three Muslims embrace Hinduism
Author:
Publication: The Deccan Chronicle
Date: April 7, 2000
Tiruvanantapuram - Amid tight security and chanting of mantras, young Muslim scholar Hassan Palakkode and two others, including a woman, on Thursday embraced Hinduism at a ceremony held here according to vedic rites. After the "ganapathi homam" and purification ceremony, the trio, Hassan Palakkode, Akbar and Jama, were formally converted to Hinduism and adopted new names Kamala Hassan, Raju and Uma respectively.
The ceremony, organised by the State unit of the Shiv Sena which, was held under the leadership of Acharya Yogananda Swami and was attended by sanyasis from several ashrams besides local people from the district.
A large posse of policemen stood guard outside the venue, near the famous Sree Padmanabha Swami temple, as Hassan, who completed a course to be eligible to become a Maulavi, had attracted the wrath of Muslim fundamentalists for writing "secular" articles and questioning polygamy.
He is reportedly facing threats to his life after he announced his decision to embrace Hinduism. While the woman, Jama, is a Christian married to a Hindu, Akbar is Hindu-converted Muslim.
//
இவ்வளவு காலமாக அவை நடந்து வந்திருந்தாலும் இன்னமும் பாரதிய ஜனதா கட்சி 90 சதவீதம் இந்துக்களாக இருக்கும் இந்தியாவில் ஒரு முறை கூட அறுதிப்பெரும்பான்மை பெற முடியவில்லை என்பதை பார்த்தால், இந்துக்கள் இந்து மதம் என்பதை அரசியல் படுத்த விரும்பவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.
//
உலகத்திலேயே தன்னைப் பற்றி சுய ஏளனப் பிரச்சாரம் செய்துகொண்டு தன்னையே தாழ்த்திக் கொள்ளும் ஒரு இனம் உண்டென்றால் அது இந்துக்கள் தான்.
இந்த சுய ஏளனப்பிரச்சாரத்தை வெற்றிகரமாகச் செய்துவரும் இடது சாரிகள், தங்களுக்குள் சாதி உருவாக்கி அடுக்குகள் பல வைத்துக்கொண்டு அதை பாரதிய ஜனதா செய்கிறது என்று திரும்பத் திரும்பச் சொல்லி அச்சு, மற்றும் இதர ஊடகங்களை பலவாறு கையகப் படுத்தி அதிலும் பிரச்சாரங்கள் செய்து இந்துக்கள் மூளையை மழுங்கடிக்கவைத்துவிட்டனர்.
இஸ்லாமிய ஆட்சிக்காலத்துக் கொடுமைகளை வெள்ளையடிக்கின்றனர் இடது சாரி வரலாற்றாளர்கள். அதையே பள்ளிகளில் சிறு பிள்ளைகளுக்குப் பாடமாகப் புகட்டுகின்றனர்.
பொய்யான ஆரிய-திராவிடம் பேசி வட நாட்டையும் தென்னாட்டையும் பிரிக்கின்றனர்.
இந்தியாவின் எல்லா பிரச்சனைக்கும் பார்ப்பான் தான் காரணம் என்று சொல்கின்றனர்.
இதெல்லாம் இந்துக்கள் ஏன் விழித்துக் கொண்டு திருப்பி அடிக்காமல் இருக்கிறார்கள் என்பதற்கு முக்கிய காரணங்கள என்று நான் நினைக்கிறேன்.
திரு. எழில் அவர்களுக்கு பாராட்டுக்கள்! ஹிந்து மதத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்த முயற்சித்துள்ள தாங்கள் மதம் என்று கூறத் தகுதி அற்ற ஆபிரமாகிய மார்க்கங்களின் கீழ்த்தரமான பற்றி அறிய புதுவை சரவணன்(www.puduvaisaravanan.blogspot.com) பதிவை பார்க்க வேண்டுகிறேன்.
//கல்வியை வேண்டுபவன் சரஸ்வதி என்ற உருவில் இறையை வணங்குகிறான். செல்வத்தை வேண்டுபவன் இலக்குமி என்ற வடிவில் இறையை வணங்குகிறான்//
சரஸ்வதியை வணங்கினால் கல்வியும் , லெட்சுமியை வணங்கினால் செல்வமும் கிடைக்கும் என்பது உண்மையானால் அமெரிக்கா , ஜெர்மனி , இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கல்வியையும் , செல்வத்தையும் அள்ளிக்கொடுக்கும் ஏசு சாமியை நாம் வணங்குவதே அறிவுடைமையாகும்.
ஜாலிஜம்பர்..
உங்கள் கருத்துக்கு நன்றி.
செல்வம் வேண்டுபவன் இலக்குமியாக இறையை வணங்குகிறான் என்றால், செல்வம் வைத்திருப்பன் எல்லாம் இலக்குமியை வணங்குபன் என்று பொருள் இல்லை. நன்றாக படிப்பவன் எல்லாம் சரஸ்வதியை வணங்குபவன் என்று பொருள் இல்லை. உங்கள் முயற்சிக்கு ஒரு குவித்த உருவகம் சரஸ்வதி.
அதே ஏசு சாமியை வணங்கும் பிலிப்பைன் மக்களும், தென் அமெரிக்க மக்களும், ஆப்பிரிக்க மக்களும் பஞ்சை பனாதைகளாகவும் பஞ்சத்தில் செத்தும், ஒருவரை ஒருவர் தினந்தோறும் அடித்து சாவதும் ஏன்? எத்தியோப்பியா என்ற ஒரு பஞ்சத்தில் அடிபட்ட நாட்டை கேள்விப்பட்டிருப்பீர்களே. அது முழுக்க ஏசு சாமியை கும்பிடும் நாடுதான்.
இந்துமதம் உன் கரும வினைதான் உன்னை மேலே கொண்டு செல்லும் என்று சொல்கிறது. முயற்சி திருவினை ஆக்கும் என்று சொல்கிறது. வாழ்க்கை என்னும் போராட்டத்தில் இடைவிடாது அறத்துக்காக போராடு என்று கண்ணன் சொல்கிறான். அதையெல்லாம் விட்டுவிட்டு மூலையில் சோம்பிக்கிடந்தால் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். நம் மக்களுக்கு அநியாயம் நடக்கும்போதும் அவர்களை காப்பாற்றாமல் வெள்ளைக்காரர்களுக்கு சொம்படித்ததால் இந்த நாடுகள் ஏழை நாடுகளாக ஆயின. அதேதான் இந்தியாவிலும் நடந்தது. நம் மக்களுக்கு அநியாயம் நடக்கும்போது, உன் சகோதரர்களே எதிரில் இருந்தாலும் அறத்துக்காக போராடு என்று சொல்வதுதான் கண்ணனின் வழி. அதுதான் இந்தியாவை முன்னேற்றும்.
அரபு நாடுகளுக்கு சொம்படிப்பதோ, அவர்களது சாமியை கும்பிடுவதோ, வெள்ளைக்காரர்களுக்கு சொம்படிப்பதோ அவர்களது சாமியை கும்பிடுவதோ உங்களை முன்னேற்றாது.
There are many learned Christians and Muslims. They know the Hinduism is best. But the problem is that there is no support structure for the people who convert to Hinduism.
Good job!
இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமுமே முதல் /அ/ முக்கிய எதிரி என்று சொல்பவர்களுக்கு சில கேள்விகள்
நாம் சரித்திரத்தில் படிப்பது என்ன ? அவுரங்கசீப் இந்தியாவில் பல பாகங்களை ஆண்டான். பல ஊர்களில் கண்மூடித்தனமாய் மதமாற்றம் செய்தான். அல்லவா ?
நான் சரித்திரத்தை குறை கூறவில்லை. ஒப்புகிறேன். எனினும் இஸ்லாமே இந்துக்களுக்கு முதல் எதிரி, எனும் வாதத்தை மறுக்கிறேன் ஆகவே இந்த கேள்விகள்
1. அவுரங்கசீப் காலத்தில் நடந்த பலாத்கார மத மாற்றத்தை விட இன்று இந்தியாவில் அதிக மதமாற்றம் நடந்துவிடவில்லை... நடக்கவும் இயலாது
அவுரங்கசீப் வாழ்ந்து சுமார் 300 வருடங்களுக்கு பின்னும் .. சமீபத்திய காலம் வரை, இந்தியாவில், இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருந்தது ... அது எப்படி
அவ்ரங்கசீப் (மாலிக்காபூர்.. சரித்திரத்தில் இடம் பெற்ற ..பெறாத இன்ன பிற இஸ்லாமிய மன்னர்கள் ) காலத்தில் பிழைத்த இந்து மதம் எப்படி (எதனால்) பிழைத்தது ??
அன்று பிழைத்த இந்து மத்துக்கு .. இன்று சுதத்திர இந்தியாவில், இஸ்லாம் [அல்லது கிறித்துவம்] அப்படி என்ன ஊறு விளைவிக்க முடியும் ?
2. இன்று இருப்பதை காட்டிலும், வெள்ளையர் ஆட்சியில், கிறித்துவத்துக்கு, செல்வாக்கும் சலுகையும் அதிகம். எனினும் வெள்ளையரின் முழு ஆட்சியை இந்து மதம் எப்படி தாங்கியது ?
இந்த 200 ~ 250 ஆண்டுகளிக் ஏன் இந்தியர் எல்லோரும் கிறித்துவர் ஆகிவிடவில்லை ? அல்லது இந்து மதம் ஏன் அழிந்துவிடவில்லை ?
கிறித்தவர் ஆண்டபின்னும் 1950களில் இந்துக்கள் எப்படி 80%க்கும் மேல் சதவிகிதம் இருந்தனர் ?
3. கடந்த 10 ஆண்டுகளில், தமிழ் நாட்டில் எத்துனை தமிழ் இந்துக்கள் இன்னபிற மத்ததவரால் கொல்லப் படடு அல்லது தாக்கப் பட்டு இருக்கிறார்கள். இத்தகைய கேஸ்கள் எத்துனை கேஸ்கள் கோர்ட்டில் இருக்கின்றன ?
அதேசமையம் எத்துனை விவாகறத்து [இந்து ஆண் vs இந்து பெண்] கேஸ்கள் கோர்ட்டில் நடக்கின்றன ? கோர்ட்டில் தங்கிஇருக்கின்றன ?
யாருமே மத வெறியால் தாக்கப்பட / கொல்லப்படவில்லை என்று வாதிக்க வரவில்லை. இரண்டு பட்டியல்களையும் [இஸ்லாம் Vs இந்து, மற்றும் இந்து Vs இந்து, ஆகிய இரண்டு பட்டியல்களையும்] இடுங்கள் என்றே கூறுகிறேன்
இஸ்லாம் 1000 வருடம் முன்பு இங்கே வந்தது ... 100 வருடம் முன்பு இதை செய்தது, துருக்கியல் இது நடந்தது, 20 வருடம் முன்பு கிறித்துவம் அதை செய்தது என்று சொல்லி சொல்லி சாகும் வேளையில், நம் வீட்டில், அதாவது இந்துக்களில் வீட்டில், நித்தம் நித்தம் என்ன நடக்கிறது என்று சற்றே சிந்திக்கவும்
இன்று இந்து குழந்தைகளை விட இந்து முதியோரே அனாதைகளாய் நிற்கின்றனர்
- முதியோர் இல்லங்கள் நிறம்பி வழிகின்றன
- மருமகள் விரட்டிவிட்டாள் என்று தெருவில் நிற்போர் ...
- அனாதைகளான அருமை பெற்றோர்,
- அனாதைகளாய் போன நேற்றைய இந்தியா....
இவர்களில் இந்துக்களே அதிகம்
Family courtக்கு ஒரு முறை விஜயம் செய்யுங்கள். இந்து கேஸ்கள் அத்துனை, முஸ்லீம் கேஸ்கள் எத்துனை என்று தெரியும்...
சிந்திப்பீர்...செயல் படுவீர்
நான் எந்த மதத்துக்கும் சப்பை கட்டு கட்ட வரவில்லை. எனக்கு தென்படும் உண்மை நிலையை எழுதுகிறேன்
நான் ஒரு இந்து, அதனால் தான் இதை எழுதுகிறேன்
ஞாயமான, ஆபாசமற்ற வாத்தை எதிர் நோக்கி நிற்கிறேன்
நண்பன்
விநாயக்
Post a Comment