//சகோதரர் எழிலிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் தனது பதிவில் பதில் அளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவரது விளக்கங்களை பார்ப்பதற்கு முன்பாக, எனது டிஸ்கிளைமரை மறுபடியும் நினைவு படுத்திக் கொள்கிறேன். "இந்தப் பதிவில் எந்த விதமான எள்ளலும் இல்லை. கண்ணியமான எனது இந்து மத சகோதரர்களின் மனதை புண்படுத்தும் நோக்கமும் இல்லை. எழில் என்பவர் 'இந்து மதம் வாருங்கள்' என்று இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்ததால் அவரது பாணியிலேயே சிலதை தெளிவு படுத்திக் கொள்ளலாமே என்பதற்காக கேட்கும் சில கேள்விகள்தான் இவை." இந்து மதம் பற்றி நான் அதிகம் அறியாதவன். எனது கேள்விகள் யாரையும் புண்படுத்தி விடக்கூடாதே என்ற அச்சத்தினால்தான் இதை இங்கே வலியுறுத்துகிறேன்.
//
அன்பு சகோதரர் மரைக்காயர்,
நீங்கள் நிச்சயமாக என் மனத்தை புண்படுத்தவில்லை என்று கூறுகிறேன். நான் மட்டுமல்ல, பல கோடி இந்துக்களும்கூட பெரியார் இதனைவிட மிகவும் அசிங்கமாக இந்து மதத்தை திட்டியதை கேட்டார்கள். அவரை யாரும் அடிக்கவில்லை. முதிர்ந்த வயதில்கூட அவருக்கு நெருங்கிய நண்பர்களாக ராஜாஜி காந்திஜி போன்றவர்கள் இருந்தார்கள். அவரது விமர்சனத்தை காதுகொடுத்து கேட்டார்கள். முடிந்த இடத்தில் தங்களை திருத்திக்கொண்டார்கள். அவரது விமர்சனம் சரியானது என்றுபட்ட இடத்தில் இந்து சமூகம் திருந்த வேண்டும் என்று ராஜாஜி காந்திஜி உட்பட அனைவரும் கூறினார்கள். அம்பேத்கார் கூட இந்துமதத்தையும் ராமாயணத்தையும் விமர்சித்திருக்கிறார். அவருக்கு இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் என்ற பெருமையை இந்து தலைவர்கள்தான் கொடுத்தார்கள். அவர் கொடுத்த சட்டத்தைத்தான் இன்றுவரை இந்தியா பயன்படுத்தி வருகிறது.
//எனது முதல் கேள்வி, கடவுள் யார்? அல்லது யாவர்? இந்தக் கேள்வியில் புராணங்கள் மற்றும் நடைமுறையில் இருக்கும் சில கருத்தாடல்கள் மூலமாக அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் கடவுள் தொடர்பான சில விஷயங்களை சுட்டி விளக்கம் கேட்டிருந்தேன்.
//
கடவுள் யார் என்பது உங்கள் கேள்வியாக இருக்கும்பட்சத்தில் அது தனி கேள்வி. அதற்கான விடையை ஒருவராலும் அளிக்க முடியாது. விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர். கடவுள் தன்னிடம்வந்து பேசினார் என்று கூறுபவர்களிடம் கடவுள் பேசவில்லை. இறையை கண்டவர்கள் அதனை பேசமாட்டார்கள்.
இறை என்பது விளக்கத்துக்கு அப்பாற்பட்டது. விளக்கத்துக்கு அப்பாற்பட்டது என்பதே விளக்கமாகும்போது, விளக்கத்துக்குள்ளும் அடங்கியது.
சுகப்பிரம்ம ரிஷி பிரம்மத்தை ஒரு கடலாக கண்டார். அதன் ஒரு துளியை ருசித்தவுடன் வாழ்நாள்முழுவதும் பிதற்றித்திரிந்தார் என்பது இதிகாசம் சொல்லும். பிரம்மத்தை உணர்ந்தவர்களே பிரம்ம ரிஷிகள். பிரம்மத்தை உணரத்தான் முடியும். விளக்க முடியாது.
ரால்ப் வால்டோ எமர்ஸன் உபநிஷதங்களை படித்து முடித்ததும் அவர் சொன்னார். "கடவுள் கூட்டமாக ரட்சிப்பதில்லை". ("God does not save souls in bundles" )
இந்த கடவுள் என்ற பதத்துக்கும் கடவுள் என்ற பதத்தில் சொல்லப்படும் கர்த்தர், அல்லா போன்றவற்றுக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. உபநிஷதத்தை படித்து புரிந்துகொண்டால்தான் அது புரியும். அத்தனையையும் நான் இங்கே கூறுவது என்பது என்னால் முடியாதது. ஆகவே உபநிஷதத்தை படித்து பாருங்கள். படிப்பதினால் என்ன ஆகிவிடப் போகிறது? தைரியமாக படித்துப்பாருங்கள்
//
அதற்கு எழிலின் பதில்: "புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை. அவை இறை அல்ல. உபநிஷதமும் திருவாசகமும் விதந்தோதும் இறைவன்,விஷ்ணுமயம் ஜகத்து என்றும், சர்வம் ஈசம் என்றும் கூறுகின்றன.ஒரு கருத்தை குருக்கள் சுட்டிக்காட்டும்போது விரலை பார்க்கக்கூடாது. ஒரு கருத்தை விளக்க கதை கூறும்போது, கதையை பிடித்து தொங்கக்கூடாது."
கருத்தை விளக்க கதை கூறும்போது கதையை பிடித்து தொங்கக் கூடாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விப்ர புராணம் சொல்லும் இது மாதிரியான உதாரணங்கள் மூலம் வலியுறுத்தப்படும் கருத்து என்ன என்பதை எழில் விளக்க முடியுமா? அதுவல்லாமல் என் கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கவில்லையே! என் கேள்வி 'கடவுள் யார்? அல்லது யாவர்? '. இதற்கு உதாரணங்கள் இல்லாத நேரடியான பதில் என்ன?
//
புராணத்தில் வருவதை கேட்டதும், அதனை சொன்னேன். விப்ரபுராணம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது பற்றியும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், விப்ரபுராணம் போன்ற ஏராளமான புராணங்கள் கடந்த 600 வருடங்களில் அன்னியர் ஆட்சியின் போது, இந்துக்களை கேவலப்படுத்தவும், அவர்களது தெய்வங்களை அவமரியாதை செய்யவும், சமஸ்கிருதம் அறிந்த முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் அவர்களது கைக்கூலிகளால் இயற்றப்பட்டன. வேதங்கள் வரிவடிவமாக்கப்பட்டு அதற்கு திருகுத்தனமான விளக்கங்கள் எழுதப்பட்டன. ஆட்சியும் அதிகாரமும் முஸ்லீம்கள் கிறிஸ்துவர்கள் கையில்தான் இருந்தது. அடிமைகளாக இருந்த இந்துக்களால் அவற்றினை சகித்துக்கொண்டுதான் வாழ வேண்டியிருந்தது.
ஆனால், உண்மை எப்போதும் வெல்லும். இன்று பகவத்கீதையும், உபநிஷதமும் உலகமெங்கும் தனித்தனியாக பல்வேறு மக்களுக்கு ஆன்மீக அறிவை கொடுத்து வருகின்றன. உங்கள் வெளிவேஷத்தை மாற்றவில்லை. உள்மனத்தை மாற்றுகின்றன. படிக்க தெம்பும், புரிந்துகொள்ளக்கூடிய மூளையும், அறிந்துகொள்ளக்கூடிய மனமும் இருந்தால் உங்களுக்கும் அந்த ஆன்மீக உணர்வு கிடைக்கும்.
கடவுள் என்பது பற்றி மேலே எழுதியிருக்கிறேன். அது வரையறைக்குள் சிக்காதது. யாரேனும் வரையறைக்குள் கொண்டுவந்துவிட்டேன். இந்த புத்தகத்துக்குள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி காத்து அழிக்கும் கடவுளை அடக்கிவிட்டேன் என்று சொன்னால், நகைக்கத்தான் முடியும் என்று சொல்லி விலகுங்கள்.
கடவுளின் அம்சம் இருக்குமா? நிச்சயம் இருக்கும். இந்துக்களை பொறுத்தமட்டில் இந்த பிரபஞ்சமே கடவுளுக்குள்தான் இருக்கிறது. ஒவ்வொரு துளி அணுவிலும் இறை இருக்கிறது. அதனால் உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கிறது. நீங்கள் பேசும் உண்மையில் இருக்கிறது பொய்யில் இருக்கிறது. அதனை விளக்க ஒரு வார்த்தை தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்கிறது. அதுவே இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி காத்து அழித்து மீண்டும் உருவாக்கி காக்கிறது.
அந்த பிரபஞ்ச ஊழிக்கூத்தில் நாம் விவாதிக்கிறோம். ஏன் விவாதிக்கிறோம். நமக்கு ஏன் நாம் இறை என்ற உணர்வு இல்லை? அதனைத்தான் மாயை என்று சங்கரர் அழைக்கிறார்.
இருட்டான ஒரு மாலை நேரத்தில் ஒரு கயிறு கிடக்கிறது. அந்த கயிற்றை நாம் பாம்பு என்று அஞ்சி விலகுகிறோம். அது சற்றுவெளிச்சம் போட்டதும். அது பாம்பல்ல . அது கயிறுதான் என்று தெரிகிறது.
அது போல, நாம் இருட்டான இந்த தினசரி வாழ்க்கைக்குள் நமக்கு ஆகவேண்டிய பிரச்னைகள், உயிராதார பிரச்னைகள் என்று தினசரி ஓடுகிறோம். அதனால் இறை உணர்வை நாம் உணர்வதில்லை.
ஏன் உணர்வதில்லை?
உங்களுக்கு நாக்கில் ருசி உணர்ச்சி இல்லை என்று வைத்துக்கொள்வோம். எதனை போட்டாலும் வெறுமே சாப்பிட்டுவிடுவீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இருக்கிறது. அது உப்பு ருசியா அல்லது இனிப்பு ருசியா என்று உங்களால் சொல்ல முடியுமா? இனிப்பு ருசி எப்படி இருக்கும் என்று ஒருவர் உங்களுக்கு விளக்க முடியுமா?
"இனிப்பு ரொம்ப ருசியாக இருக்கும். இனிக்கும். நல்லா இருக்கும்" என்றுஆயிரம் வார்த்தைகள் சொல்லலாம். அந்த ருசியை உங்களுக்கு கொடுக்க முடியுமா?
அது போலத்தான் இறை உணர்வு. அது பேரின்பம் என்று சொல்வார்கள்.
அதனை தெரிந்துகொள்ள முடியும் என்று இந்து ஆன்மீகப்பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அதற்கு வழிமுறைகளை கூறியிருக்கிறார்கள். அதனையெல்லாம் தொகுத்து பகவத் கீதையில் அவற்றை யோகங்களாக கிருஷ்ணர் கூறுகிறார். தமிழ்நாட்டு சித்தர்களும் அதனையே கூறுகிறார்கள். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையிலே என்று கேட்பதும் அதனால்தான். நாதன் கல்லினுள்ளும் இருக்கிறான் நம்மின் உள்ளும் இருக்கிறான் என்பதுதான் பொருள்.
எனக்கு தெரிந்துகொள்ள அவசியமில்லை. எனக்கு அந்த பேரின்பம் வேண்டாம் என்று சொல்லி மறுதலித்துவிடலாம். உங்கள் இஷ்டம். அது வேண்டும் என்று பலர் முயற்சி செய்யலாம். அது அவர்கள் இஷ்டம்.
மிக எளிமையாக சிலருக்கு பிறவியிலேயே இறை உணர்வு அபூர்வமாக இருக்கும். அவர்கள் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியவர்களாகவும், ஞானவான்களாகவும் இருக்கலாம். ஆனால், பலர் அப்படி அற்புதங்களை நிகழ்த்துவதில்லை. இறை உணர்வு என்ற ஒன்றை பெற்றதும். அப்படிப்பட்ட அற்புதங்கள் எனக்கு செய்யமுடியும் என்று காட்டிக்கொள்வது தேவையற்றதாக ஆகிவிடுகிறது. இறை என்று உணர்ந்ததும், தன்னை யாருக்காக விளம்பரப்படுத்திக்கொள்ள வேண்டும்? எப்போது ஒருவர் தன்னிடம் உள்ள இறை உணர்வை விளம்பரப்படுத்திக்கொள்கிறாரோ அப்போது அது போய்விடுகிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இறை உணர்வு என்பதற்கான வழிமுறைகள் என்பதை குரு சொல்லித்தர முடியுமே தவிர, அந்த குருவின் சீடனாக இருப்பதாலோ, அந்த குருவின் தனிப்பட்ட குணநலன்களோ உங்களை கடைத்தேற்றாது.
எத்தனை எத்தனையோ ரிஷிகள் வேதம், ராமாயணம், மகாபாரதம், உபநிஷதம், திருவாசகம், பிரபந்தம் ஆகியவற்றை நமக்காக தந்திருக்கிறார்கள். அதனை படியுங்கள். அவற்றில் பல முத்துக்கள் இருக்கின்றன. அவை மனிதர் அனைவரின் சொத்து. அவைகளை படிப்பதன் மூலம் உங்களுக்கு இறை உணர்வு வந்துவிடாது. ஆனால், அது இது இனிப்பு என்று ஒருவர் உங்களிடம் விளக்க முயற்சிப்பது போன்ற முயற்சி அது. உங்களுக்கு இறை அருளிருந்தால், நீங்களும் இறை உணர்வை அடையலாம். அதற்கு எந்த குருவும், எந்த மடாதிபதியும் அனுமதி தரவேண்டியதில்லை.
எல்லோரிலும் இறை உள்ளது என்பதனை உணர்ந்த இந்து ஞானிகள் தலித்துளின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் சமத்துவத்துக்காகவும் தங்கள் வாழ்நாள் தோறும் போராடி வந்திருக்கிறார்கள். ராமானுஜரின் குரு ஒரு தலித். சங்கரரின் குருவும் தலித்தே. சங்கரரின் மனத்தில் இருந்த ஏற்றத்தாழ்வு சிந்தனையை போக்க சிவபெருமான் புலையர் வேடத்தில் வந்து அவரிடம் பேசினார் என்று சொல்வார்கள். இவையெல்லாம் தெரிந்த இந்துக்கள் இங்கே குறைவு. ஆனாலும் அவர்கள் இந்துக்கள் என்ற பெயரில் இருப்பதால், ஆன்மீகத்துக்கான வழியை திறந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்று சொல்கிறார்கள். ஒருவர் சாமியாராகி துறவு பூண்டுவிட்டால் அவருக்கு ஜாதி மதம் ஏதும் இல்லை என்று சொல்கிறார்கள். அதனால்தான் பிறப்பால் முஸ்லீமான ஷீரடி சாயிபாபாவும், கபீர்தாஸ் போன்றவர்களும் ரிஷிகளாக வணங்கப்படுகிறார்கள்.
800 ஆண்டுகளுக்கு முன்னால், தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் இல்லை. அதன் பின்னர் வந்தவர்களான சுல்தான்கள் மொகலாயர்கள் போன்றவர்கள் தங்களை எதிர்த்தவர்களது சொத்துக்களையும் நிலங்களையும் பிடுங்கி அவர்களது நிலத்தை முஸ்லீம் ஜமீன்தார்களிடம் கொடுத்தார்கள். அடிமைகளாக்கப்பட்டவர்களும் தோற்றவர்களும் தாழ்த்தப்பட்டவர்களாக ஆனார்கள். இது இந்தியாவெங்கும் நடந்தது. தோற்றவர்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டார்கள். மாற மறுத்தவர்கள் நிலங்கள் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு தோற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டு கொத்தடிமைகளாக மாற்றப்பட்டார்கள். (பாகிஸ்தானில் ஹரி என்றால் இந்து தலித்துகளை குறிக்கும் வார்த்தை. ஹரி என்றால் தோற்றவர்கள் என்று உருதுவில் பொருள் என்று சொல்வார்கள்) இது போல அரசியல்காரணங்களுக்காக பல சமூகங்கள் தாழ்த்தப்பட்டும், தாழ்த்தப்பட்ட சமூகங்கள் பின்பு மேலெழுந்து அரசாள வந்ததும் நடந்திருக்கிறது. அரசியலை தாண்டி இந்து ஞானிகள், எல்லோருள்ளும் இருக்கும் இறைவனை கண்டவர்கள், சமத்துவத்தையும் சமநீதியையுமே போதித்திருக்கிறார்கள்.
இந்து மதத்திலிருந்து பல்வேறு மக்கள் மதம் மாறினார்கள். அவ்வாறு மாறுவதை யாரும் தடுக்கவில்லை. ஏன் என்றால், அப்படி தடுக்கக்கூடிய சக்தி எந்த இந்துவுக்கும் இல்லை. அப்படி தடுத்தவர்கள் கூட கலாச்சார காரணங்களுக்காகத்தான் தடுக்க முனைந்தார்கள். முஸ்லீம் அல்லது கிறிஸ்துவன் ஆனதும் நடை உடை பாவனை அனைத்தும் மாற்றப்பட்டு தன்னுடைய முன்னாள் சமூகத்துக்கே எதிராக அவன் திருப்பப்படுகிறான். இதனைத்தான் எதிர்த்தார்கள். ஆனால், இந்துக்கள் சர்ச்சுக்கு போவதையோ மசூதிக்கு போவதையோ இப்போதும் யாரும் தடுப்பதில்லை.
இந்து மதத்தின் படி, நீங்கள் எந்த வழியில் இறை உணர்வை தேடுகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்த விஷயம்.
இப்படிப்பட்ட ஞானம் இந்தியாவில்தான் வருமா? என்பது உங்கள் கேள்வியாக இருக்கலாம்.
இல்லை. பிறவியிலேயே இறைஉணர்வு பெற்றவர்கள் எந்த தேசத்திலும் பிறக்கலாம்.
மன்சூர் அல் ஹல்லாஜ் பெர்ஷியாவில் பிறந்த ரிஷி. அவர்தாம் சூபியிஸத்தின் ஸ்தாபகர்.
http://en.wikipedia.org/wiki/Mansur_Al-Hallaj
தன்னுடைய சட்டையை காண்பித்து "இந்த சட்டைக்குள் இறைவனைத்தவிர வேறு யாரும் இல்லை" என்று சொன்னார்.
அவர் சித்திரவதை செய்து கொல்லப்படும்போது அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார் என்று சொல்வார்கள்.
இதே போல, ஒரு காலத்தில் தமிழ்நாட்டில், அரசாங்கத்தில் பலம் பெற்றிருந்த சமணர்கள் அப்பர் என்னும் திருநாவுக்கரசரை சுண்ணாம்பு களவாயில் போட்டு சுட்டபோது சிரித்துக்கொண்டே "மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே" என்று பாடினார்.
அதுவே இறைஉணர்வு. அந்த இறைஉணர்வு பொதுவானது.
தான் என்னும் உணர்வு அழிந்து இறையுணர்வோடு கலக்கும் நிலையை பேரின்பம் என்று இந்து ஞானிகள் கூறினார்கள். அதையே சூபிகள் ·பானா ·பிலா என்று கூறுவார்கள். தான் என்னும் உணர்வு அழிந்து இறையுணர்வோடு கலந்த நிலையை குறிப்பார்கள்.
ஆக இந்த இறையுணர்வு கூட்டம் கூட்டமாக வராது. ஒவ்வொரு தனி மனிதரும் முயற்சி செய்து அடைய வேண்டிய நிலை. விரும்பினால்.
நீங்கள் சொல்லலாம். நான் முஸ்லீம் என்ற பெயரில் இருந்தாலும் நான் இந்த இறையுணர்வை அடையமுடியுமென்றால் ஏன் நான் இந்துவாக வேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று என்னை கேட்கலாம்.
மிகச்சரியான கேள்வி.
உங்களை யாரும் தடுக்கப்போவதில்லை. அந்த இறையுணர்வை நீங்கள் இன்று இந்தியாவில் இந்துக்கள் நிறைந்த இந்தியாவில் அடையலாம்.
முஸ்லீம்கள் நிறைந்த பெர்ஷியாவில் மன்சூர் ஹல்லாஜ் அவர்களுக்கு என்ன ஆயிற்று? சமணர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் இருந்த திருநாவுக்கரசருக்கு என்ன ஆயிற்று? இப்படிப்பட்ட இறையுணர்வு பெற்ற மனிதர்கள் போற்றத்தகுந்தவர்கள். சித்திரவதை செய்யப்பட வேண்டிய மனிதர்கள் அல்ல.
அப்படிப்பட்ட மனிதர்களை போற்ற வேண்டுமென்றால், அல்லது நீங்களே அப்படிபட்ட முயற்சியில் ஈடு பட வேண்டுமென்றால், அப்படிப்பட்ட இறையுணர்வு என்பதை புரிந்துகொண்ட சமூகம் வேண்டும்.
அதுவே அமிர்ந்தானந்த மயி அம்மா மீனவக்குடும்பத்திலிருந்து வந்தாலும் போற்றுகிறது. அதுவே ஷீரடி சாயிபாபா முஸ்லீம் குடும்பத்திலிருந்து வந்தாலும் அவரை போற்றுகிறது.
இப்படிப்பட்ட ஞானிகளுக்கு சமூகத்தில் இடம் இருக்க வேண்டும். அவர்களை பின்பற்ற வேண்டுமென்ற கட்டாயம் உங்களுக்கில்லை. ஆனால், அவர்கள் சமூகத்தில் தோன்றவும் தங்களது ஆன்மீக உணர்வுகளை கூறவும் இடம் வேண்டும்.
ஆகவே இந்தியாவில் இருக்கும் இந்து மதம் உலகெங்கும் பரவி அங்கும் ஆன்மீக சுதந்திரத்துக்கு வழி செய்துகொடுக்க வேண்டும்.
23 comments:
சபாஷ்
சரியான விளக்கங்கள். மெய்சிலிர்க்க வைக்கும் ஆன்மிக கருத்துக்கள். நன்றி எழில்
Excellent and crisp definition of hinduism for both hindus and non-hindus. appreciate your understanding of knowlwdge on hinduism.
மதம் என்ற சொல்லாடல் இல்லாமல் பார்க்கும்போது உங்கள் கருத்துக்கள் ஏற்புடையதே!
உங்கள் விளக்கங்கள் அழகானவைதான்.
இயற்கையே கடவுள்.
இந்த பிரபஞ்சம், அண்டம் இவைகளே கடவுள்.
இவற்றிற்கு வெளியில் இருந்து கொண்டு இயற்கையின் ஓர் அங்கமான மனிதனை ஆட்டிப் படைப்பவன்தான் கடவுள் என்று நம்பிக்கைக் கொள்வது அறியாமை.
'அதனை' வணங்குவதும், வணங்கினால்தான் மோட்சம் என்று 'நம்பிக்கை' கொள்வதும் 'அதன்' பெயரைச் சொல்லி புனிதச் சண்டை புரிவதும் அறியாமையின் உச்சம்.
மனித ஜீவராசிகள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களின் extinction ன் துவக்கம்.
இந்த பூமிப்பந்து அழிந்து, பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் (அதாவது, நாம்) வாழ்ந்ததை foot print கள் மூலம் கண்டறியும் அன்றைய உயிரினம், அழிந்த உயிரினம் (அதாவது, நாம்) எதனால் அழிந்தது என்று தெரியாமல் குழம்பித் தவிக்கும்.
பாவம்!
இங்கு நடக்கும் மத மாச்சரியங்கள் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
அது போகட்டும்,
நண்பர்களே!
cosmology பற்றியும் evolution பற்றியும் மனம் திறந்து படிக்கும் போதும், புரிந்துகொள்ளும் போதும் இந்த இருளும் நீங்கும், அதன் காரணமாக தோன்றும் மருளும் நீங்கும் என்பது என் அனுபவம்.
அன்பார்ந்த எழில்,
உங்கள் முயற்சி நலம் பயக்க வாழ்த்துக்கள்.
பேராசிரியன்.
எழில்
அற்புதமான விளக்கம். பொன்னெழுத்துக்களில் பொறிக்கப் பட வேண்டியவை. முஸ்லிம்களுக்கு நீங்கள் சொல்லும் பதிலை அவர்கள் உதாசீனப் படுத்தி விடுவார்கள் ஆனாலும் தொடர்ந்து சொல்லுங்கள் எங்களைப் போன்ற இந்துக்களுக்கு இது அவசியம் தேவை.
நன்றியுடன்
கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்கும் ஒரு காஃபிர் ஹிந்து
இந்த விளக்கம் சரியாக இருந்தால் சொந்தப்பெயரிலேயே கருத்து எழுதலாமே. என்னை திட்டுவது கூட நீங்கள் அனானியாக திட்ட தேவையில்லை. நான் எதுவும் செய்யப்போவதில்லை. :-))
பாராட்டுக்களுக்கு நன்றி. ஆனால் இந்த பாராட்டுக்கள் இதனை என்னிடம் எழுதச் சொல்லி கூறிய என் நண்பருக்கே.
// அன்பு சகோதரர் மரைக்காயர்,
நீங்கள் நிச்சயமாக என் மனத்தை புண்படுத்தவில்லை என்று கூறுகிறேன். //
எழில், நீங்கள் கூறியதை வழி மொழிகிறேன். மரக்காயரின் ஒரிஜினல் பதிவைப் படித்துப் பார்த்தேன். மிகவும் பண்பட்ட முறையில் தன் கேள்விகள், வாதங்களை வைத்திருக்கிறார். Mayt his tribe increase!
உங்கள் விளக்கங்களை தர்க்க மொழியில் சொல்லாமல் இந்து ஆன்மீக மொழியில் சொன்னது மிகவும் அழகு.
சமய நூல்கள் என்பன ஆன்மிக, ஞானத் தேடலில் ஒரு பகுதியே, முடிவு அல்ல.
முண்டக உபநிஷதத்தில் வேத நூலறிவு, வேதாந்த விசாரம் என்பது கூட மற்ற எல்லா உலகியல் அறிவுத் துறைகளையும் போலத் தான், இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதே மேலான ஞானம் என்று கூறப்படுகிறது. இப்படி, தங்கள் தத்துவ அறிவின் எல்லையத் தாங்களே உணர்த்தி, மனிதன் அவற்றையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற கருத்தையும் வேத ரிஷிகள் உணர்த்தினர்.
உபநிஷத் பற்றி அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இந்தப் பதிவைப் படிக்கும் சகோதரர்களுக்காக எளிய நடையில் தமிழ் உபநிஷத நூல்கள் பற்றி நான் எழுதிய பதிவின் சுட்டியையும் தருகிறேன் -
http://jataayu.blogspot.com/2006/09/blog-post_115838522757044930.html
ஞானத் தேடல் பற்றிய ஆழ்ந்த கருத்துக்கள் உபனிஷதங்களில் உள்ளன.
// ஆகவே இந்தியாவில் இருக்கும் இந்து மதம் உலகெங்கும் பரவி அங்கும் ஆன்மீக சுதந்திரத்துக்கு வழி செய்துகொடுக்க வேண்டும். //
ஆம். உலக முழுதும், நிறுவனப் படுத்தப் பட்ட இந்து மதப் பிரிவுகள் எதையும் சாராமல் கூட, எத்தனையோ பேர் இந்து ஆன்மீகம், யோகம், தியானம் இவற்றைக் கடைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அரபு நாட்டு மக்களில் கூட எத்தனையோ பேர் ஆர்ட் ஆஃப் லிவிங் யோக, தியானப் பயிற்சிகள் தங்கள் மனதை அமைதிப் படுத்துவதாகக் கூறியிருக்கிறார்கள்.
இந்து மதம் பல நாடுகளிலும் மேலும் பரவினால், சமய வெறுப்புக்களும், வன்முறையும் மறைந்து அமைதி உருவாகும்.
நன்றி ஜடாயு
இந்தப் பதிவைப் பற்றிய என்னுடைய கருத்தை சொல்கிறேன். கொஞ்சம் brutal truth வகையைச் சார்ந்தது.
வெகு சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. எழுத்து நடை சிறப்பு எவ்வளவு சிறப்பாக எனக்குப் படுகிறதோ அதே அளவு சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்கள் தவறாக எனக்குப் படுகின்றன.
பொதுவாக இந்தப் பதிவைப் பற்றிய அபிப்பிராயம் சொல்ல வேண்டுமெனில் சில உண்மைகள் தொடப் படவே இல்லை.
பல இடங்களில் வெகுவாக பொதுமை படித்திக் கூறப் பட்டிருகிறது. ஒரு பொது ஜன இந்து மதக் பார்வையாக எனக்குப் படவில்லை.
நான் பதிவுகளில் சிலர் எழுதி வருவதைப் போல இஸ்லாம் என்பது மிகக் கொடிய மதம் என்பதையோ இல்லை கிறிஸ்துவம் மிகக் கொடிய மதம் என்பதையோ இல்லை இந்து மதம் தீமையானது என்றோ நம்பவில்லை.
இஸ்லாம் மதத்தில் பிரச்சனை இருக்கிறது. கிறிஸ்துவத்திலும் பிரச்சனை இருக்கிறது. இந்து மதத்திலும் பிரச்சனை இருக்கிறது.
எல்லாவற்றிலும் சிறப்பான கருத்துகளும் இருக்கின்றன.
ஆனால் இந்து மதத்தின் மூலம் இறைவனை சிறப்பாக உணர முடியும் இல்லை இஸ்லாம் மூலம் சிறப்பாக உணர முடியும் என்பதை எல்லாம் படிக்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது.
உங்களின் பதிவைப் படிக்கும் போதும் அதே போல தான் சிரிப்பு வந்தது.
சிறு பிள்ளை போல பேசிக் கொண்டால் என்ன பண்ணுவது.
யாருக்கும் தெரியாத புரியாத ஒன்றை நான் செய்வது போல பிராத்தனை செய் நீ செய்வது போல பிராத்தனை செய் இந்த வகையில் செய்தால் சரியாக இருக்கும் அந்த வகையில் செய்வது தவறு என்றெல்லாம் சொல்லுவது, அதனால் உணர முடியும், இதனால் உணர முடியாது என்பதெல்லாம் நகைப்புக்குறியதாக இருக்கிறது.
பைபிளை விட உபநிஷத் பெரியது இல்லை குரானை விட வேதம் பெரிது என்பதெல்லாம் மூடத்தனம்.
ஞானம் என்று ஒன்று இருந்தால் அதனை அடைவதற்கு மதமே தேவையில்லை.
இங்கு மதத்தின் பெயரால் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் யாருக்கும் ஞானம் பற்றியோ இல்லை இறைவனை அறிவது பற்றியோ கவலையில்லை என்றே தோன்றுகிறது.
தன்னுடைய ஐடியா ஆப் டெய்டி என்பது சரி என்று நிலை நிறுத்தவே முயல்கிறார்கள். என்ன மூடமதி? என்ன ஈகோ?
எல்லா மதங்களிலும் நன்மைகள் இருக்கின்றன தீமைகளும் இருக்கின்றன.
எந்த மதத்தைப் பின்பற்றினாலும் தனி மனிதனைப் பொறுத்தே அவன் வாழ்க்கை எப்படி அமைகிறது இல்லை அவன் வாழ்க்கை எப்படி நடத்துகிறான் என்பது அமையும்.
ஹிந்து மதத்தில் பால் தாக்கரேவும் இருக்கிறார், விவேகானந்தரும் இருக்கிறார். அப்துல் கலாமும் பின் லேடனும் இஸ்லாமியர்களே.
மதம் என்பது ஒரு அமைப்பு இதற்கும் தனி மனிதனின் ஒழுக்கத்திற்கும் பெரு அளவில் சம்பந்தம் இல்லை.
இறை உணர்தலும் அது போலவே.
குழந்தைகள் என் பென்சில் அழகாக இருக்கிறது உன் பென்சில் அழகாக இருக்கிறது என்பது போல பேசிக் கொள்வது மூடத்தனம்.
நிற்க.
எந்த மதமாக இருந்தாலும் சரி என்று சொல்லும் அதே நேரத்தில், இது போன்று பல வேறு மதங்கள் இருப்பதால் ஏற்படும் பிரிவினைகளும் நடக்கும் கொடூரங்களும் வேதனையையும், பயத்தையும் அளிக்கின்றன.
இதற்கு நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல இந்து மதத்தை எல்லோரும் பின்பற்றலாம் என்பதோ இல்லை இஸ்லாமியர்களாகி விடலாம் என்பதோ தீர்வில்லை.
மதம் என்ற அமைப்பே மூடத்தனம் என்பதை உணர்ந்து மதம் என்பதையே அழிப்பது தான் தீர்வாக முடியும்.
கடைசியாக என்னுடைய எண்ணங்கள் கோர்வையாக இல்லாமலோ இல்லை புண்படுத்தும் வகையிலோ அமைந்திருந்தால் மன்னிக்கவும்.
எழில்,
மிக நல்ல விளக்கங்கள். இந்துமதம் என்கிறது Dogmatism இல்லாத அருமையான ஒரு தொன்மையான வாழ்வியல் நெறியே என்பது குறித்த நல்ல புரிதல்கள் ஏற்பட உதவும்.
எனது இந்தப் பதிவில் தொன்மையான இந்தியப் பாரம்பர்யம் அடுத்த தலைமுறைகளுக்காக அவசியமாகப் பாதுகாக்கப் படவேண்டிய அவசியம் குறித்துச் சொல்லியிருக்கிறேன்.
http://harimakesh.blogspot.com/2006/12/83.html
அன்புடன்,
ஹரிஹரன்
செந்தில் குமரன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
உங்கள் கருத்துக்களை அப்படியே ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் கூறியதைத்தான் நானும் கூறியிருக்கிறேன்.
ஹரிஹரன். உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. உங்கள் பதிவை முன்னரே படித்துவிட்டேன்
ஒரு அனானி பின்னூட்டம் இந்துமதம் பரவுவது நல்லது என்று பொருள்பட எழுதிய ஜடாயுவின் வரிகளை "The joke of the year" என்றுகுறிப்பிட்டிருந்தார். அநாகரிகமான பெயர் வைத்துக்கொண்டிருந்ததனால், அதுபதிப்பிக்கப்படவில்லை என்றாலும் அதன் வரிகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
எழில்,
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஏன் இந்து ஆக வேண்டும் என்பதனை இன்னும் சற்று அதிகமாக எழுதியிருக்கலாம்.
முதல்பகுதியா இது?
நன்றி நல்லவன், நேச குமார்
ஆமாம் இது முதல் பகுதிதான்.
இறையுணர்வு பெற்றவரிடம் இறையம்சம் இருக்கிறது என்றால், எத்தனை இறைகள்?
ஒளியைப் பற்றி ஆராயும்போது, அது அலையா அல்லது துகளா என்று சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அது அலையாக இருக்கவேண்டும் அல்லது துகளாக இருக்கவேண்டும் என்று பிரிந்து சண்டை போட்டார்கள். நியூட்டன் அது துகள் என்றார். எதிர்தரப்பு அது அலை என்றார். அப்போது அலைதான் ஜெயித்தது. பின்னர் அது துகள்தான் என்று கண்டறிந்தார்கள். இப்போது, ஒளியானது, துகளாகவும் அலையாகவும் ஒரே நேரத்தில் இருக்கிறது என்று இன்று ஒப்புக்கொள்கிறார்கள்.
இந்த பிரபஞ்சத்தின் ஒரு அங்கமான ஒளியை புரிந்துகொள்வதே இப்படிப்பட்ட வினோதத்தில் முடியுமென்றால், இறையைப் பற்றி நாம் என்ன புரிந்துகொள்ள முடியும்?
இந்து தத்துவங்கள் இறையை ஏகன் என்றும் விளிக்கின்றன. அனேகன் என்றும் விளிக்கின்றன. ஒன்று என்று சொன்னால், அது இறையை வரையறுப்பதாகும். அனேகன் என்று சொன்னாலும் இறையை வரையறுப்பதாகும். அதனால்தான் குவாண்டம் பிஸிக்ஸ் மாதிரி அப்படியும் இருக்கிறது. இப்படியும் இருக்கிறது என்று உபநிஷதங்கள் கூறுகின்றன. அதனால்தான் வெளியே இருப்பது உள்ளே இருக்கிறது. உள்ளே இருக்கிறது வெளியே இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
ஒன்றாகவும் இல்லை. பலவும் இல்லை. ஒன்றாகவும் இருக்கிறது பலவாகவும் இருக்கிறது என்றுதான் உபநிடதங்களின் அடிப்படையில் கூறமுடியும்.
வரையறைக்குள் சிக்காத இறையை வறையறுக்க முயலும் மனித மனம், இறையுணர்வு பெற கடக்கவேண்டிய தூரம் அதிகம் என்றுதான் சொல்லமுடியும்.
நன்றி எழில்
//வரையறைக்குள் சிக்காத இறையை வறையறுக்க முயலும் மனித மனம், இறையுணர்வு பெற கடக்கவேண்டிய தூரம் அதிகம் என்றுதான் சொல்லமுடியும்.
//
இந்த வரி இந்துக்களுக்கு புரியும். இஸ்லாமிய போதனைகளில் மூழ்கிய மனிதர்களுக்கு புரியும் என்ற நம்பிக்கை இல்லை
சிறப்பான பதிவு
தொடர்ந்து எழுதுங்கள்.
இவ்வளவு நாள் தமிழ்நாட்டில் இருந்தும் பல விஷயங்களை அறிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்று தோன்றுகிறது
http://kaalangkal.blogspot.com/2006/12/blog-post_13.html
என்ற பதிவில் கோவிக்கண்ணன் அவர்கள் கீழ்வருமாறு கூறியிருக்கிறார்கள்.
//சூனியம் ப்ரம்மாக மாற்றப்பட்டு திரும்பவும் உருவழிபாடு என்ற கீழ்நிலை தத்துவத்தில் வீழ்ந்தது ( உருவ வழிபாடு கீழ்நிலை என்று நான் சொல்லவில்லை இந்து மதத்தில் அவ்வாறு தான் இந்து தத்துவங்கள் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்)
//
யாரந்த "இந்து தத்துவங்கள் அறிந்தவர்கள்" என்று தெரிந்துகொள்ளலாமா?
நான் சொல்லவில்லை என்றால் என்ன பொருள்? உங்களுக்கு இந்துத்தத்துவங்கள் தெரியாது என்று பொருளா? உங்கள்க்கு இந்து தத்துவங்கள் தெரியாது என்றால், எப்படி புத்தமதத்திலிருந்து இந்துமதம் காப்பி அடித்தது என்று எழுதினீர்கள்?
உபநிஷதங்களில் பிரம்மம் பேசப்படவில்லை என்று கருதுகிறீர்களா?
மிக மிக அருமையான பதில்கள்
//இந்து மதத்தின் படி, நீங்கள் எந்த வழியில் இறை உணர்வை தேடுகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்த விஷயம்//
இதைத் தான் இறையுணர்வு அந்தரங்கமானது என்றார்கள். இதையறிய தனித்திரு விழித்திரு பசித்திரு என்றார்கள்.
நல்லதொரு கட்டுரை தங்கள் பணி தொடரட்டும்
நன்றி நல்லவன், கால்கரி சிவா, அனானி
கோவிகண்ணன். அந்த இணைப்புக்கு நன்றி. அங்கு எங்குமே, நேசக்குமாரின் பின்னூட்டம் உட்பட எங்கும் சிலைவழிபாடு கீழானது என்று சொன்னதாக தெரியவில்லை.
இந்து மதத்தை பொறுத்தமட்டில் பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்கும் இறை சிலையில் இல்லாமலா இருக்கும்? ஆகவே உருவ வழிபாடு என்பது இந்து தத்துவத்துக்கு முரணானது அல்ல. மேலும் இந்து தத்துவத்தில் கீழான வழிபாடு மேலான வழிபாடு என்று ஏதும் இல்லை.
மேலும் பெரியார் சிலையை பற்றி நீங்கள் குறிப்பிட்டது சரியான ஒன்றுதான்.
பெரியார் பெரியார் சிலையில் இல்லை. ஆகவே பெரியார் சிலையை உடைப்பது பெரியாரை உடைத்ததாகாது என்று உங்களுக்கும் தெரியும் உடைத்தவர்களுக்கும் தெரியும். ஆக அது ஒரு குறியீடு.
ஆனால் குறியீடு இல்லாமல் பேசவோ எழுதவோ ஏன் சிந்திக்கவோ கூட முடியாது.
அல்லா, பிரம்மம், கோவிகண்ணன் என்ற பெயர் ஆகிய அனைத்தும் அப்படிப்பட்ட உருவங்களே.
அல்லா என்ற பெயரில் இறைவனை வணங்குவதும் ஒரு உருவ வழிபாடுதான்.
மேலும் எழுதுவது, இந்த பதிவின் நோக்கத்தையும் திசையையும் திருப்பிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
நன்றி
எழில்
--
கோவிகண்ணன். அந்த இணைப்புக்கு நன்றி. அங்கு எங்குமே, நேசக்குமாரின் பின்னூட்டம் உட்பட எங்கும் சிலைவழிபாடு கீழானது என்று சொன்னதாக தெரியவில்லை.
இந்து மதத்தை பொறுத்தமட்டில் பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்கும் இறை சிலையில் இல்லாமலா இருக்கும்? ஆகவே உருவ வழிபாடு என்பது இந்து தத்துவத்துக்கு முரணானது அல்ல. மேலும் இந்து தத்துவத்தில் கீழான வழிபாடு மேலான வழிபாடு என்று ஏதும் இல்லை.
மேலும் பெரியார் சிலையை பற்றி நீங்கள் குறிப்பிட்டது சரியான ஒன்றுதான்.
பெரியார் பெரியார் சிலையில் இல்லை. ஆகவே பெரியார் சிலையை உடைப்பது பெரியாரை உடைத்ததாகாது என்று உங்களுக்கும் தெரியும் உடைத்தவர்களுக்கும் தெரியும். ஆக அது ஒரு குறியீடு.
ஆனால் குறியீடு இல்லாமல் பேசவோ எழுதவோ ஏன் சிந்திக்கவோ கூட முடியாது.
அல்லா, பிரம்மம், கோவிகண்ணன் என்ற பெயர் ஆகிய அனைத்தும் அப்படிப்பட்ட உருவங்களே.
அல்லா என்ற பெயரில் இறைவனை வணங்குவதும் ஒரு உருவ வழிபாடுதான்.
மேலும் எழுதுவது, இந்த பதிவின் நோக்கத்தையும் திசையையும் திருப்பிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
நன்றி
எழில்
--
I can't agree with you more on this,I have no idea why religions that oppose idol worship still have pictures of their sacred worshoip places or scripts in their homes and worship in the direction of them.They are idol worshipers anyway.
//அல்லா என்ற பெயரில் இறைவனை வணங்குவதும் ஒரு உருவ வழிபாடுதான். //
அல்லா என்ற பெயரில் இறைவனை வணங்குவது உருவ வழிபாடுதான்.
பொட்டில் அடித்தாற்போன்ற வார்த்தை.
எப்படி சிலையும் ஓவியமும் ஒரு பொருளின் குறியீட்டு வடிவமோ அதுபோல, குரான், இஸ்லாம், அல்லா ஆகிய வார்ததைகளும் பொருட்களின் குறியீடுகள்.
இந்த சிறிய விளக்கம் எவ்வளவு பெரிய மதங்களை தூளாக்குகிறது என்பது விந்தை!
எழில். சிறப்பான விளக்கம்.
நன்றி
http://maricair.blogspot.com/2006/12/blog-post_19.html
சகோதரர் மரைக்காயர்,
இதுதான் இந்துமதமா? என்று சரியாகத்தான் கேட்டிருக்கிறீர்கள். ஏன் பெயரை மாற்றினீர்கள் என்று தெரியவில்லை.
நல்ல கேள்விதான். உங்களது குழப்பம் புரிகிறது. நேரமிருக்கும்போது இதற்கு பதில் எழுதுகிறேன்..
எழில்
Post a Comment