Wednesday, March 30, 2011

ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்

First Published : 30 Mar 2011 03:29:44 PM IST
Last Updated : 30 Mar 2011 03:31:45 PM IST

மெல்போர்ன், மார்ச்.30: புதுத் தெற்கு வேல்ஸில் உள்ள ஆஸ்திரேலியாவின் பழமைவாய்ந்த இந்துகோயிலில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் புகுந்து பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் இந்து சமுதாயத்தினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஆபர்னில் உள்ள 30 ஆண்டுகளுக்கும் மேலான ஸ்ரீமந்திர் ஆலயத்தில் முகமூடிகள் அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்து மார்ச் 19-ம் தேதி இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கோயிலில் தாக்குதல் நடத்திய அந்த நபர்கள் சிசிடிவி விடியோவில் பதிவாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இந்த சம்பவம் கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஒருபகுதியாக இந்து சமுதாயத்தினருடன் இணைந்து போலீசார் செயல்பட்டு வருவதாக சிட்னி பத்திரிகை ஒன்று போலீஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சிசிடிவியில் பதிவான விடியோ காட்சிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், எனினும் அதன்மூலம் இதில் எதுவும் செய்யமுடியவில்லை என்றும் இந்தியன் என்ற செய்திப் பத்திரிகையின் ஆசிரியர் ரோஹித் ரெவோ தெரிவித்தார்.

கோயிலின் பிரதான கதவுக்கு சில அடி தூரத்தில் உள்ள நுழைவாயிலில் சில துப்பாக்கிக் குண்டுகள் மோதி உள்ளன. அதில் ஒரு குண்டு சுவர் முழுவதும் உரசிச் சென்றுள்ளதாக அவர் கூறினார்.

குண்டுகளின் அடையாளங்களைப் பார்க்கும்போது, சிறப்புவாய்ந்த பெரிய குண்டுகள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சாதாரண குண்டுகள் மிகச்சிறிய அகலத்துடன் இருக்கும். ஆனால் இந்த குண்டுகள் சுவர்களில் பெரிய துளைகளை உருவாக்கியுள்ளது என்றார் அவர்.

1 comment:

Anonymous said...

ஆஸ்திரேலியாவில் வாழும் முஸ்லிம் மத அடிப்படைவாதிகளின் செயல்களாக தான் இது இருக்க வேண்டும். ஆஸ்திரேலியா அரசு இரும்பு கரம் கொண்டு இவர்களை ஒடுக்க வேண்டும்.