Tuesday, March 01, 2011

சிறுபான்மை இனத்தவரை விமர்சிக்கும் பாடநூல் இந்து உரிமை அமைப்பு மலேசியாவில் ஆர்ப்பாட்டம் 106 பேர் கைது

சிறுபான்மை இனத்தவரை விமர்சிக்கும் பாடநூல் இந்து உரிமை அமைப்பு மலேசியாவில் ஆர்ப்பாட்டம் 106 பேர் கைது
Tuesday, 01 March 2011 10:09
கோலாலம்பூர் : மலேசியப் பாடசாலைகளில் அறிமுகம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய பாடப்புத்தகம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து உரிமைக் குழுவைச் சேர்ந்த 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவிலுள்ள சிறுபான்மை இனமக்களைத் தாக்கும் வகையிலான புத்தகம் ஒன்று பாடசாலைகளின் உயர் வகுப்புகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பொலிஸார் சில வீதிகளை மூடியும், சில இடங்களில் வீதித்தடைகளை இட்டும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மலேசியாவின் வரலாற்றுச் சின்னமான பெட்ரானஸ் இரட்டைக் கோபுரத்தைச் சுற்றியும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை சட்டத்தரணி பி.உதயகுமாரே தலைமை தாங்கி நடத்தியுள்ளார். ஆனால், அவர் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் பொலிஸார் அவரைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக அவரது சகா எஸ்.ஜெயதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜெயதாஸும் ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்த்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 50 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களிற்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாரபட்சத்தினை நிறுத்தவேண்டுமென்றே நாம் விரும்புகின்றோம். அத்துடன் பாடசாலை மாணவர்கள் மீது இனவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனை வெளிக்காட்டும் இன்ரர்லொக் அமைப்பின் மீதான தடையும் நீக்கப்படவேண்டுமெனவும் தாம் வலியுறுத்துவதாக தடுப்புக்காவலிலுள்ள ஜெயதாஸ் ஏ.பி.செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

ரைம்ஸ் ஒவ் இந்தியா

No comments: