Monday, March 14, 2011

ஆர்-எஸ்-எஸ்- அலுவலகத்தில் கன்றுக்குட்டி தலை வீசியவர்கள் கைது

ஆர்-எஸ்-எஸ்- அலுவலகத்தில் கன்றுக்குட்டி தலை வீசியவர்கள் கைது
Posted by maduraipost on March 12th, 2011
மதுரை,மார்ச்.12-

ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் கன்றுக்குட்டி தலை வீசியவர்கள் 5 பேரை தனிப்படைபோலீசார் கைது செய்தனர்.

எஸ்.எஸ்.காலனி நாவலர் நகரில் ஆர்.எஸ்.எஸ்.,அலுவலகம் உள்ளது. எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1வது தெருவில் ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட அலுவலகம் செயல்படுகிறது. மார்ச் 1-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு அலுவலக வளாகத்திற்குள், தோல் உறிக்கப்பட்ட கன்றுக்குட்டி தலையை, பாலிதீன் பையில் சுற்றி, மர்மநபர்கள் வீசிவிட்டு சென்றனர்.
காலை 5.30 மணிக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கமிஷனர் பாரி நேரில் விசாரணை நடத்தினார். பின், தென்மண்டல ஐ.ஜி., பாலசுப்பிரமணியன் நேரில் விசாரித்தார். அப்போது அவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அதில், சில சமூகவிரோதிகள் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், எங்களுக்கு கொலை மிரட்டல் விட வேண்டும் என்ற நோக்கிலும் இதை செய்து உள்ளனர். அதுவும் சிவராத்திரி நேரத்தில், இந்துக்களை இழிவுபடுத்தும் நோக்கில் இது நடந்துள்ளது, என தெரிவிக்கப்பட்டிருந்தது. கன்றுக்குட்டி தலையை வீசிசென்ற மர்மநபர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் பாலிதீன் பையில் வைத்து ஒரு கன்றுக்குட்டியின் தலை வீசப்பட்ட வழக்கில், ஐந்து பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அரசரடி ரயில்வே மைதானம் அருகே மகபூப்பாளையத்தை சேர்ந்த ரபீக்ராஜா (28), ஷாகின்ஷா (29), அல்ஹஜ் (30), அப்பாஸ் (31), சாகுல் அமீது(27)வை இன்ஸ்பெக்டர் முருகதாசன் கைது செய்தார்.
போலீஸ் கமிஷனர் அலுவலக அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கைதானவர்கள் "சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா' அமைப்பை சேர்ந்தவர்கள். இரண்டு மாதங்களுக்கு முன், மதுரையில் ஒரு வழிபாட்டுத் தலத்தில் பன்றித்தலையை எறிந்து, மனிதக் கழிவை தடவியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இவர்களுடன் மேலும் ஒருவர் சேர்ந்து ஆர்.எஸ்.எஸ்.,அலுவலகத்தில் கன்றுக்குட்டி தலையை வீசியதாக தெரியவந்தது.
இவர்களிடமிருந்து சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், ரத்தக்கறை படிந்த இரண்டு கத்திகள், வைகை ஆற்றில் வெட்டிய கன்றுக்குட்டியின் சிதைந்த ரோமங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஐந்து பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அல்ஹஜ் ஏற்கனவே, ஒரு பெண்ணை கடத்திய வழக்கில் கைதானவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: