தமிழர்களே கன்னியாஸ்திரியாக பெண்களை ஆக்காதீர்கள்.
உங்கள் பெண்களை பார்த்து உலகமே பின்னால் சிரிக்கும்
உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள்.
கிறிஸ்துவத்திலிருந்தும் கிறிஸ்துவர்களிடமிருந்தும் விலகி நில்லுங்கள்.
--
நன்றி நக்கீரன்
--
கன்னியாஸ்திரி மடங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகள்,ஓரினச் சேர்க்கைகள்
ஒட்டுமொத்த கேரள மக்களையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்து சென்று இருக்கிறது ஒரு கன்னியாஸ்திரி எழுதிய புத்தகம். ஆமென் என்பதுதான் அப்புத்தகத்தின் பெயர்.
ஆமென்' புத்தகத்தை எழுதியவர் 53 வயதான ஜெஸ்மி. கேரளாவில் உள்ள காங்கரேசன் ஆப் மதர் ஆப் கார்மெல் என்கிற `சி.எம்.சி' என்று அனைவரும் அறிந்த கன்னியாஸ்திரி அமைப்பில் 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்தவர் ஜெஸ்மி.
திருச்சூரில் மிகப் பிரபலமான விமலா கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர். மிகப் பெரிய கத்தோலிக்க சர்ச் சான சிரோ மலபார் சர்ச்சால் நடத்தப்படும் கல்லூரி இது.
தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கோழிக்கோட்டில் உள்ள ஒரு வாடகை வீடான `லில்லி' என்ற பிளாட்டில் தனி ஆளாக வசிக்கிறார் அவர்.
ஜெஸ்மி எழுதியுள்ள `ஆமென்' புத்தகத்தில் கன்னியாஸ்திரி மடங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகள், ஓரினச் சேர்க்கைகள், ஆணாதிக்க போக்கு என சகல விஷயங்களையும் அக்கு வேறு, ஆணி வேறாக போட்டு உடைத்திருக்கிறார்.
ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு எனப்படும் அந்தப் புத்தகத்தில் தான் இளம் கன்னியாஸ்திரியாக இருந்த போது பாதிரியார் ஒருவர் வலுக்கட்டாயமாக தன்னை கெடுத்தது பற்றியும் எழுதி இருக்கிறார். அந்த வயதில் நானும் அவருக்கு அடிமையாகி விட்டேன் என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மூத்த கன்னியாஸ்திரிகள் தன்னை ஓரினச்சேர்க்கைக்கு அடிமைப்படுத்தியதையும் சொல்லியிருக்கிறார்.
அவர் கன்னியாஸ்திரி ஆக ஆசைப்பட்டது முதல் கடைசியில் ராஜினாமா செய்தது வரை தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒரு கதை போல் எழுதி இருக்கிறார்.
இன்னமும் திருச்சபை உறுப்பினராக இருக்கும் ஜெஸ்மி எழுதிய புத்தகத்தால் கேரளாவில் பல பாதிரியார்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கி உள்ளன
. கன்னியாஸ்திரி மடத்தில் இருந்து பலர் வீடு திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்
நன்றி
நக்கீரன்
2 comments:
//கன்னியாஸ்திரி மடத்தில் இருந்து பலர் வீடு திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்//
உருப்புடியான முடிவு
அட நாதாரிகளா! பெரிய ஒழுக்கம் நிறைந்த பேச்சு வெளியில் தானா?
Post a Comment