திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மதமாற்றம் * கல்லுõரி மாணவிகள் மத பிரசாரத்தில் தீவிரம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் நோயாளிகளிடம் இயேசு படம் போட்ட புத்தகங்கள் கொடுத்து தீவிர மத பிரச்சாரத்தில் கல்லுõரி மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள், நோயாளிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பல்வேறு நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏராளமானோர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற வருகின்றனர். மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள், நர்சு பயிற்சி பெறும் நர்சுகள் தினசரி மருத்துவமனைக்கு வந்து பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். வெள்ளை ஆடை அணிந்த கல்லுõரி மாணவிகள் மருத்துவமனையில் உள்ள வார்டுகளுக்கு சென்றனர். அங்குள்ள நோயாளிகளுக்கு "வசனோல்சவம்' என்ற தலைப்பில் இயேசு படம் உள்ள 34 பக்க புத்தகங்களை கொடுத்து படிக்கும் படி மதபிரசாரம் செய்தனர். "இயேசு குறித்த புத்தகங்களை படித்தால் வெகு விரைவில் உங்கள் நோய்கள் குணமாகும். இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்' என கூறி அவர்களுக்கு போதனை செய்தனர். பின்னர் ஒவ்வொரு நோயாளிகளிடம் சென்று அவர்களுக்குள்ள நோய்கள் குறித்து அறிந்து அதற்கேற்றார்போல் ஜெபம் செய்தனர். "கடவுளை நிரந்தரமாக துதித்து வந்தால் உங்களுக்கு பரிபூரண சுகம் கிடைக்கும். வாழ்க்கையில் விருட்சம் அடைவீர்கள்' என கூறி மத மாற்றத்திற்கு மூளைச் சலவை செய்யும் தொழிலை தினமும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர மத பிரச்சாரத்தை துவக்கி வைத்துள்ளனர். அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த இடங்களில் மத பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என சட்டம் உள்ளது. அரசு மருத்துவமனையில் தற்போது அந்த சட்டத்தை மீறுவதுடன் மத பிரசாரத்தை கண்டும் காணாதது போல் டாக்டர்கள் மற்றும் பொறுப்பாளர்களும் உள்ளனர்' என மத பிரச்சாரம் முடிந்து வெளியில் வந்த நோயாளி ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment