Monday, December 17, 2007

திருமண ஆசையில் மாலத்தீவு நாட்டினரிடம் ஏமாறும் முஸ்லிம் பெண்கள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்களை மாலத்தீவு நாட்டினர் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தன்னை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு வயது அதிகம் உள்ளவர்களுக்கு அப்பெண் களை திருமணம் செய்து வைக்கின்றனர். திருமண புரோக்கர்கள் விரிக்கும் வலையில் வீழ்ந்து அப்பாவி பெண் கள் பலர் சீரழிக்கப்படுகின்றனர்.கேரளாவுக்கு வரும் அரபு நாட்டினர் அங்குள்ள பெண்களை மணந்து கொண்டு பின்னர் அவர்களை கைவிடும் சம்பவங்கள் சில ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி நடைபெற்றன.இதில்,பெரும்பாலான மணமகன்களின் வயது மணமகள் களை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். அதன் பின்னர் மைசூரு மற்றும் அரியானாவை சேர்ந்த வயதான ஆண்கள் பலர் "ஷாப்பிங்' செல்வது போல் கேரளா வந்து அங்குள்ள பெண்களை மணந்தனர். தற்போது, மாலத்தீவு நாட்டை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்காக கேரளாவுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். திருவனந்தபுரம், சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ளது வள்ளக்கடவு. இந்த இடத்தை சேர்ந்த 16 வயது நிரம்பிய பெண் ஒருவரை, மாலத் தீவை சேர்ந்த 52 வயதாகும் அகமது என்பவருக்கு கடந்த வாரம் திருமணம் செய்து வைக்க அவரது வீட்டார் முடிவு செய்தனர். புரோக் கர் ஒருவரின் வீட்டில் வைத்து மணமகன், அப்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தன்னை விட 34 வயது அதிகமான ஒருவரை திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து,அப்பெண் தனது வீட்டை விட்டு ஓடி விட்டார். அந்த பெண் விமான நிலையம் அருகே உள்ள விமான நிலைய பொது பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தஞ்சம் அடைந்தார். உள்ளூர் ஜமாத்தினர் மற்றும் போலீசார் இப்பிரச்னையில் தலையிட்டதையடுத்து அப்பெண் தனது வீட்டுக்கு திரும்புவதற்கு சம்மதித்தார். இதில் ஆச்சரியம் என்னவெனில், இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. போலீசாரும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், மாலத்தீவு நாட்டினர் கேரள பெண்களை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், மாலத்தீவு நாட்டினர் கேரளாவின் கடலோர பகுதிகளை சேர்ந்த முஸ்லீம் பெண்கள் 500 பேரை திருமணம் செய்துள்ளனர். இதில்,பெரும்பாலான பெண்கள் சந்தோஷத்துடன் குடும்பம் நடத்துகின்றனர். ஆனால்,சில பெண்களை அவர்கள் கணவன்மார்கள் கொடுமைப்படுத்துவதாக புகார் தெரிவிக்கின்றனர். வள்ளக்கடவின் ஜமாத் தலைவரான சைபுதீன் கூறுகையில்,""எங்கள் பகுதியை சேர்ந்த 100 பெண்களை மாலத்தீவு நாட்டினர் திருமணம் செய்துள்ளனர். சில ஏழை குடும்பங்களுக்கு மாலத்தீவிலிருந்து பணம் வருகிறது,''என்றார். ""மாலத்தீவு நாட்டினரை திருமணம் செய்த பெண்கள் சிலர் அங்கு சென்ற போது தான், அவர்கள் தங்களது கணவன்களுக்கு மூன்றாவது அல்லது நான்காவது மனைவியாக இருப்பது தெரியவரும். சிலர் கேரள பெண்களை திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தை அறிவாளியாக இருக்கும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்கின்றனர். இப்பெண்கள் குழந்தையை பெற்றதும் அவர்களை கொடுமைப்படுத்த ஆரம்பிப்பர். சில பெண்கள் தங்கள் புகுந்த வீடுகளில் அடிமை தொழிலாளர்கள் போல நடத்தப்படுகின்றனர். கணவனின் அடி உதை தாங்காமல் ரம்லா(23) என்பவர் மாலத்தீவிலிருந்து இந்தியாவுக்கு தப்பி ஓடி வந்துவிட்டார். திருமண புரோக்கர்களின் பேச்சை நம்பி தனது பெற்றோர் மாலத்தீவுக்காரருக்கு திருமணம் செய்து வைத்ததாக அப்பெண் புகார் கூறினார்,''என்று கேரள மாநில மகிளா காங்., தலைவர் ஷானிமோள் உஸ்மான் தெரிவித்தார். மாலத்தீவு நாட்டின் தனி நபர் வருமானம் கேரளாவை விட நான்கு மடங்கு அதிகம். சுற்றுலா,மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி கற்பதற்காக மாலத்தீவினர் கேரளா வருகின்றனர். திருவனந்தபுரத்தில் அந்த நாட்டை சேர்ந்த ஐந்தாயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். மாலத்தீவு நாட்டின் துõதரகம் திருவனந்தபுரத்தில் துவக்கப்பட்டுள்ளது.
Dinamalar

No comments: