Thursday, August 27, 2009

நாகர்கோவில் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு விநாயகர் மேல் வந்த கோபம்

போலீஸ் உடையில் வந்து விநாயகர் சிலை உடைப்பு

First Published : 26 Aug 2009 08:42:09 AM IST
Last Updated : 26 Aug 2009 12:34:51 PM IST


நாகர்கோவில், ஆக. 25: கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீஸ் உடையில் வந்த சிலர் விநாயகர் சிலையை உடைத்தனர். அதைத் தடுத்தவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பூதப்பாண்டியை அடுத்துள்ள திட்டுவிளை வடக்குப் பகுதியில் மார்த்தால் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.

பூஜைக்கு வைக்கப்பட்ட இந்த சிலையை இரவில் பாதுகாக்க அப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட பாதுகாப்புக் குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. அக் குழுவில் இடம்பெற்றிருந்த மார்த்தாலை சேர்ந்த செந்தில் (20), ராமச்சந்திரன் (21), நீலகண்டன் (23), ராஜா (23), கண்ணன் (24), பாலமுருகன் (18) ஆகியோர் திங்கள்கிழமை இரவு சிலை இருந்த பகுதியில் படுத்திருந்தனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மோட்டார் சைக்கிள்களில் அடையாளம் தெரியாத சிலர் உருட்டுக் கட்டைகள், ஆயுதங்களுடன் அங்கு வந்து விநாயகர் சிலையை உடைத்து சேதப்படுத்தினராம்.

சப்தம் கேட்டு எழுந்த சிலை பாதுகாப்புக் குழுவினர் அவர்களைத் தடுத்தனர்.

ஆனால் அவர்கள், தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சிலை பாதுகாப்புக் குழுவினரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இதில் செந்தில், ராமச்சந்திரன், நீலகண்டன், ராஜா ஆகிய 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கண்ணன், பாலமுருகன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விநாயகர் சிலையை சேதப்படுத்தியவர்களில் சிலர் போலீஸ் உடை அணிந்திருந்ததாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிலை அமைப்பு கமிட்டியின் பொறுப்

பாளர் காளியப்பன் பூதப்பாண்டி போலீஸில் புகார் அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. சண்முகவேல், பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் உள்ளிட்ட போலீஸôர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுக்க பரவியதை அடுத்து சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர். சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் அதிரடிப் படை போலீஸôர் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக திட்டுவிளையைச் சேர்ந்த அப்துல்காதரை (31) போலீஸôர் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

4 comments:

Unknown said...

இதன் மூலம் அவர்கள் என்ன சாதித்தார்கள்

Unknown said...

we have to worship our Creator not creations which cann't save for themselves.

Unknown said...

குலாம் மசூதில பாம் வச்சப்போ அது உடையலியா. சிலை என்பது ஒரு வழிபாட்டின் ஒரு அம்சம். எல்லா இடத்திலும் உள்ள இறைவனை சிலை மூலமாக வழிபடுகிறோம்

Unknown said...

எழில் ஏன் இப்போவெல்லாம் பின்னூட்டம் தாமதமா வருது