கோவில் வருமானத்தில் மசூதிகளுக்கும், சர்ச்சுகளுக்கும், சிறுபான்மையினர் நலத்துக்காகவும் அரசாங்கம் செலவழிக்கும்போது கோவில் அதிகாரிகளும் கொட்டம் அடிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
கோயில் வருமானத்தில் வளமாக வாழும் அதிகாரிகள்
பதிவு செய்த நாள் : மே 29,2011,02:25 IST
கருத்துகள் (1) கருத்தை பதிவு செய்ய
மதுரை:""தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் வருமானத்திலிருந்து கார்கள், விமானம், ரயில் டிக்கெட்டுகள், விருந்து என்று வசதியாக வாழும் அதிகாரிகள், எங்களுக்கு சம்பள உயர்வு மட்டும் வழங்க மறுக்கின்றனர்,'' என கோயில் ஊழியர்கள் குமுறுகின்றனர்.இவர்களுக்கு ஊழியர்களுக்குரிய சம்பளம் கோயில் வருவாயில் இருந்தே தரப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.43 கோடி எடுக்கப்பட்டு, அரசு கணக்கில் செலுத்தப்படுகிறது. இதில் சில கோடிகள் தற்போது உபரியாக உள்ளது. இந்த நிதியை கொண்டு கோயிலுக்கு தேவையான வளர்ச்சியை மேற்கொள்ளலாம். ஆனால், தமிழகத்தில் 50 சதவீத கோயில்கள் பராமரிப்பின்றி உள்ளன. வருமானமும் இல்லை. ""இதனால் தங்களுக்கு தேவையான சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைப்பதில்லை,'' என குமுறுகின்றனர் கோயில் ஊழியர்கள்.
அவர்கள் கூறியதாவது :கட்டுமான கழகம் மூடப்பட்ட பின், அதில் பணிபுரிந்த பொறியாளர்கள், ஊழியர்கள் அறநிலையத்துறையில் சேர்க்கப்பட்டனர். கோயில் வேலை தெரியாத இவர்களுக்கு, கோயில் வருவாயில் இருந்து பல லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. பல கோயில் இணை கமிஷனர்களுக்கு குளிர்சாதன கார்களை வாங்க பணம் வீணாக்கப்படுகிறது. கோவை மாவட்டம் மாசானியம்மன் கோயிலுக்கு நவீன கார் ரூ.12.48 லட்சத்திற்கு வாங்கப்பட்டது. தற்போது இக்கார் சென்னையில் துறை அதிகாரி ஒருவரின் அலுவல் பணி என்ற பெயரில் ஊர் சுற்றி வருகிறது. அதேபோல், மதுரையில் பெருமாள் கோயில் ஒன்றின் உதவி கமிஷனர் எங்கேயும் வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. அவருக்கும் பொலிரோ கார் வாங்கப்பட்டுள்ளது. திருப்புவனம் அருகேயுள்ள அம்மன் கோயில் ஒன்றுக்கு வாங்கப்பட்ட பொலிரோ காரை, அமைச்சரின் உதவியாளர்கள் பயன்படுத்தினர். இதற்குரிய டீசல், டிரைவர் சம்பளம், பராமரிப்பு செலவு என மாதம் பல ஆயிரம் ரூபாய் வீணாகிறது.
மேலும், மாவட்ட இணை கமிஷனர்களுக்கு ஏதாவது ஒரு கோயிலில் இருந்து அலுவல் கார் வாங்கித்தரவேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், அந்த கார்களை அதிகாரிகள் சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்துகின்றனர். தவிர, அதிகாரிகள், அவர்களது உதவியாளர்களுக்கு கோயில் செலவில் விமானம், ரயில் டிக்கெட், கறி சாப்பாடு, புரோட்டா என வாங்கிக் கொடுத்து, அச்செலவை ஈடுகட்ட போலியாக கணக்கு காண்பிக்கப்படுகிறது. இதற்கு அறங்காவலர்களும் விதிவிலக்கல்ல. மதுரையில் ஒரு கோயில் அறங்காவலர், தனது வேட்டியைக்கூட கோயில் செலவில்தான் சலவை செய்கிறார்.எங்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. நாற்பது சதவீதம் சம்பள உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இதை அமல்படுத்த எங்களிடம் அதிகாரிகள் பணம் எதிர்பார்த்தனர். நாங்கள் தரமறுத்ததால், சம்பள உயர்வு வழங்க மறுக்கின்றனர். மேலும், குடும்ப ஓய்வூதியம் கிடையாது. மருத்துவ காப்பீடு திட்டம் இல்லை. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவும், அமைச்சர் சண்முகநாதனும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment