Saturday, May 07, 2011

ஆடைக் கண்காட்சியில் இந்துமதம் நிந்திப்பு:சர்வதேச இந்து மதபீடம் கண்டனம்

[Saturday, 2011-05-07 04:07:46]

அவுஸ்திரேலிய தலைநகர் சிட்னி யில் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற அவுஸ்திரேலிய பஷன் வீக் ஆடைக்கண்காட்சியில் இந்துக்கடவுளான மஹாலஷ்மியின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட நீச்சல் உடை பற்றி சர்வ தேச இந்து மதபீடம் நிகழ்ச்சி ஏற் பாட்டாளர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது இந்து மதத்தையே கேவலப்படுத்தும் செயலாகும் எனவும் இந்து மதபீடம் தெரிவித்துள்ளது.

மஹாலக்ஷ்மி பொறிக்கப்பட்ட நீச்சல் ஆடையும், உள்ளங்கியும் இந்து மக்களின் புனித உணர்வை தெய்வீக தன்மையை மழுங்கடிக்க செய்கின்றது. இது பற்றி சர்வதேச இந்து மத பீடம் இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு இச்செய்தி பற்றி இந்து மக்களின் மனம் புண்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

தூதரகத்தின் ஊடாக அவுஸ்திரேலியா வின் பிரதமருக்கு இந்து மக்களின் கவலையை தெரிவிக்க உள்ளது. குறித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உலகில் வாழும் இந்துக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இந்துமத பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

seithy.com

No comments: