எகிப்தில் நடந்த மதமோதலில் 10 பேர் பலி; 186 பேர் காயம்
கெய்ரோ, மே.9-
எகிப்து நாட்டின் மக்கள் தொகை மொத்தம் 8 கோடி ஆகும். அவர்களில் 10 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். தலைநகர் கெய்ரோவில் உள்ள ஒரு கிறிஸ்தவ பெண் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிறிஸ்தவர்கள் அந்த பெண்ணை கடத்தி கொண்டு போய்விட்டனர். இதை தொடரந்து மதமோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் மொத்தம் 10 பேர் பலியானார்கள்.
500-க்கும் மேற்பட்ட பழமையான முஸ்லிம்கள் புனித மினா தேவாலயத்தின் முன் கூடி நின்று மதம் மாறிய பெண்ணை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்பினரும் தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசினார்கள். கற்களையும் வீசி தாக்கினார்கள். போலீசும் ராணுவமும் அங்கு விரைந்து சென்று கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தை அடக்கினார்கள். அதே பகுதியில் உள்ள இன்னொரு தேவாலயத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதில் அந்த தேவாலயம் சேதம் அடைந்தது. இந்த மோதலில் 186 பேர் காயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது.
1 comment:
மற்ற நாடுகளில எல்லாம் கிறிஸ்தவனும் முஸ்லீமும் அடித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் இரண்டு கிரிமினல்களும் சோ்ந்து இந்துக்களை ஒழிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். இங்குள்ள அரசியல் சொறிநாய்கள் இவர்களுக்கு சலுகைகள் வழங்கி நாட்டைக் கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவிலும் இவர்கள் இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டு இருந்தால் இந்துக்கள் நிம்மதியாக இருக்கலாம். அதை செய்ய மாட்டேன் என்கிறார்களே.
Post a Comment