Tuesday, May 03, 2011

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு கண்டியில் இந்து சமய கருத்தரங்கு


school_studentநாவலப்பிட்டி நிருபர்  : கண்டி,மாத்தளை மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் இந்துசமயக் கருத்தரங்கு எதிர்வரும் 07 ஆம் திகதி
சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் கண்டி ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய மீனாட்சியம்மன் கல்யாண மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சின் கலாசார உத்தியோகத்தர் திருமதி ஆர்.கிருஷ்ணவேணி தெரிவித்தார்.
மத்திய மாகாண அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் கற்பித்தல் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மாகாண அமைச்சர் அனுசியா சிவராஜாவின் பணிப்புரையின் பேரில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சில் பதிவு பெற்ற அறநெறிப்பாடசாலைகளுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்படாத அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் பங்குபற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் கலாசார உத்தியோத்தருடன் 0717330006,0814930782 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இக்கருத்தரங்கில் பங்கேற்கும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு மதிய உணவு,தேநீர்,பிரயாண கொடுப்பனவு என்பன வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments: